திருக்கோளிலி 1.62.1 -பழந்தக்கராகம்
நாள்
ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.
திருநெடுங்களம் 1.52.2
-பழந்தக்கராகம்
கனைத்து
எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு
தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
திருநள்ளாறு
1.49.9 -பழந்தக்கராகம்
உண்ணல்
ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே
ஒடுக்கி,
“அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை” என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
திருஅண்ணாமலை 1.10.6 -நட்டபாடை
பெருகும்
புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.
திருவலிதாயம் 1.3.8 -நட்டபாடை
கடலில்
நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது
ஏத்த, நடம் ஆடி,
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.
திருவலிதாயம் 1.3.8 -நட்டபாடை
பிறை
உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட
கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக்
குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!
திருப்பாச்சிலாச்சிராமம் 1.44.3 -தக்கராகம்
வெஞ்சுடர்
ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக
நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
2.61.1 திருவெண்காடு -
காந்தாரம்
உண்டாய்,
நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.
2.95.6
திருஅரசிலி -பியந்தைக்காந்தாரம்
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம்
அதற்கு மத்து ஆக,
பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய,
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு,
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே.
2.96.2
சீகாழி - பியந்தைக்காந்தாரம்
தேவர் தானவர் பரந்து, திண் வரை
மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
"ஆவ!" என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.
2.85.1
பொது - கோளறு திருப்பதிகம் - பியந்தைக்காந்தாரம்
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே
புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி,
பாம்பு இரண்டும்,உடனே
ஆசு அறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.
2.91 திருமறைக்காடு - பியந்தைக்காந்தாரம்
நாகம்
தான் கயிறு ஆக, நளிர் வரை அதற்கு மத்து ஆக,
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழக் கடைய,
வேக நஞ்சு எழ, ஆங்கே வெருவொடும் இரிந்து
எங்கும் ஓட,
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே.
2.106 திருவலஞ்சுழி - நட்டராகம்
விண்டு
ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை, உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம் ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே.
2.48 திருவெண்காடு - சீகாமரம்
வேலை மலி தண்கானல் வெண்காட்டான்
திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.
3.49.10 பொது - நமச்சிவாயத் திருப்பதிகம் - கௌசிகம்
கஞ்சி மண்டையர், கையில் உண்
கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே.
3.54.10 பொது
- திருப்பாசுரம் - கௌசிகம்
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
3.1.5 கோயில்
- காந்தாரபஞ்சமம்
தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர் தூ மணிமிடறா! பகுவாயது ஓர்
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால்,கழல்சேவடி
கைதொழ,
இல்லை ஆம் வினைதான் எரிய(ம்) மதில் எய்தவனே!
3.115.1 திருஆலவாய் - திருஇயமகம் - பழம்பஞ்சுரம்
ஆல நீழல்
உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள்
அத்தனே.
3.4.1
திருஆவடுதுறை - நாலடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
இடரினும், தளரினும், எனது உறு
நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
4.22.1
கோயில் திரு நேரிசை
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!
4.93.10
திருக்கண்டியூர் திருவிருத்தம்
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி
அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?
4.65.2 திருச்சாய்க்காடு திருநேரிசை
வடம்
கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி
அடைந்து, “நும் சரணம்” என்ன, அருள் பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.
4.62.6 திருஆலவாய் திருநேரிசை
“எஞ்சல்
இல் புகல் இது” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள்
பதமே! நாயேற்கு
“அஞ்சல்!” என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
4.9.2
திருஅங்கமாலை சாதாரி
கண்காள், காண் மின்களோ!-கடல்
நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ!
5.6.10
திருஆரூர் திருக்குறுந்தொகை
மாலும் நான்முகனும்(ம்)
அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.
5.68.7
திருநள்ளாறு திருக்குறுந்தொகை
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்;
விஞ்சையின் செல்வப் பாவைக்கு
வேந்தனார்;
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி
கொடார்-
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும்
நள்ளாறரே.
5.3
திருநெல்வாயில் அரத்துறை திருக்குறுந்தொகை
கடவுளை,
கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல்
உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல்
உளானை, அரத்துறை மேவிய
சுடர்
உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
6.55.8 திருக்கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம்
இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்
சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி!
ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி!
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி!
ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!
கமை ஆகி நின்ற கனலே, போற்றி! கயிலை
மலையானே, போற்றி போற்றி!.
6.35.7 திருவெண்காடு திருத்தாண்டகம்
பெண்பால், ஒருபாகம்; பேணா வாழ்க்கை; கோள்
நாகம் பூண்பனவும்; நாண் ஆம் சொல்லார்;
உண்பார், உறங்குவார், ஒவ்வா; நங்காய்! உண்பதுவும்
நஞ்சு அன்றே, உலோபி! உண்ணார்;
பண்பால் அவிர்சடையர் பற்றி நோக்கி, பாலைப்
பரிசு அழிய, பேசுகின்றார்
விண்பால் மதி சூடி, வேதம் ஓதி, வெண்காடு
மேவிய விகிர்தனாரே.
6.10.4
திருப்பந்தணைநல்லூர் திருத்தாண்டகம்
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்;
நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்;
ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்;
ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்;
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்;
மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்;
பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
6.19.9 திருஆலவாய் திருத்தாண்டகம்
பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை,
பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை,
வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை,
வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை,
மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை,
மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச்
சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
6.2.4
கோயில் புக்க திருத்தாண்டகம்
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை
ஏந்தி, மயானத்து ஆடி,
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு
வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்;
கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு
நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்-
போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச்
சிற்றம்பலமே புக்கார்தாமே.
6.56.9
திருக்கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம்
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித் தேடி
உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
7.61.1
திருக்கச்சி ஏகம்பம் தக்கேசி
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!
7.68.4
திருநள்ளாறு தக்கேசி
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை, உருள
நெஞ்சில் ஓர் உதை கொண்ட பிரானை; நினைப்பவர் மனம் நீங்க கில்லானை;
விஞ்சை வானவர், தானவர், கூடிக் கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும்
நஞ்சம் உண்ட நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே?
7.55.5
திருப்புன்கூர் தக்கேசி
கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
7.70.1
திருஆவடுதுறை தக்கேசி
கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!
பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!
செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்
அங்கணா! எனை, “அஞ்சல்!” என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
7.48.5
திருப்பாண்டிக்கொடுமுடி பழம்பஞ்சுரம்
“அஞ்சினார்க்கு அரண் ஆதி” என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
“அஞ்சல்!” என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவை மார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.
7.4
.8 திருஅஞ்சைக்களம் இந்தளம்
வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும் குழைக் காது
உடை வேதியனே!
இறுத்தாய், இலங்கைக்கு இறை ஆயவனை, தலை பத்தொடு தோள் பல இற்று விழ;
கறுத்தாய், கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்; கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .
8.12.8
திருச்சாழல்
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!
8.6.18 நீத்தல் விண்ணப்பம்
இருந்தென்னை
ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால்
விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங்கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே .
9.1.5 திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
கோலமே
மேலை வானவர் கோவே
குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே
10.1.முதல் தந்திரம் - 1.சிவபரத்துவம் 2
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே
11.4
அற்புதத் திருவந்தாதி-65
காலையே
போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு
11.23
பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி
-91
ஆறுடையர்
நஞ்சுடையர் ஆடும்
அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.
12.28
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 740
ஆலமே அமுத
மாக
உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்
காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக
வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்
சிவபெரு மானே என்றார்
12.28
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 476
அடியாராம்
இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்
12.29
ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் 136
ஞாலம்வியப்
பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்