விநாயகர் துதி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
|
|
அகிலாண்டேஸ்வரி அம்பாள் பாமாலை
|
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
அகத்தீஸ்வரர்
மகிழ் அகிலாண்டேஸ்வரி
அருட்பா
பாட அருள்புரிவாய்
ஜெகத்தீஸ்
வரிசுத! சித்திவி நாயக
செந்திற்
குமரன் நற்றமைய!
சுகத்தைத்
தருசிவ பெருமாள் தநய!
துதித்தா
ரிப்பதி னாறினையும்
இகத்தே
பெற நல மெல்லாம் ஈந்தருள்
ஏத்துவன்
நின்மலர்த் தாளிணையே!
1. தடுத்தாட்கொள்ளும் தந்தையாய்
நம்பன்
அகத்திய நாதன் நற்றாள்
நாடொறு(ம்) நாம்பணிந் தேத்திடவே
உம்பர்
புகழத் தீஸ்வரர் போற்றும்
உமையகி லாண்ட நாயகியே
தம்பொன்
மொழிகொளத் தாயின் தண்ணார்
தகவொடு தடுத்தாட் கொண்டிடவே
செம்பொன்
கொழித்திடு திருவூர் கருவளர்
சேரியி லேதிகழ் கின்றவளே!
2. வரம் பெற வாரும் அன்பர்களே
நிவைசேர்
கருவளர் சேரியின் தந் தையை
நித்தலும் பாடி வணங்கிடவே
தலைசேர்
கைகுவித் தும்பர்கள் நாடொறும்
தாம்தொழு கின்ற தகவுடையாய்
அலைசேர்
திருமகள் அறிஞர்க் கொருமகள்
அன்பொடு பணியும் திருவுடையாய்
மலைசேர்
தவமகள் மாண்பொ டெழுந்தனை
மானிடர் வந்து வரம்
பெறவே!
3. நான்கெல்லை நவிலுதல்
தெருள்
சேர் ஞானசம் பந்தர் பாடிய
திருக்கருக் குடியின் கிழக்கினிலே
அருள்சேர்
திருஅரி சிற்கரை புத்தூர்
அதற்கு மேற்குத் திசையினிலே
இருள்தீர்
கிருஷ்ணா புரந்தெற் கினிலே
எயின னூர்க்கு வடமேற்கே
பொருள்சேர்
கருவளர் சேரி புகுந்தாய்
பொன்அகி லாண்டேஸ்
வரிதாயே.
4. ஸ்ரீ சக்கரத் தெய்வநாயகி
ஸ்ரீசக்
கரத்தினி லேவீற் றிருக்கும்
திருஅகி லாண்ட நாயகியே
ஸ்ரீசக்
கரமாம் வேதா கமத்தின்
சிறந்த கருத்தாய்த் திகழ்பவளே
ஸ்ரீசக்
கரமென அன்பரின் தூய
திருவுளங் கொண்ட நற்றாயே
ஸ்ரீசக்
சரத்துக் கருவளர் சேரித்
தெய்வக் கோவில் தேர்ந்தளே!
5 ஸ்ரீசக்கர மேரு வீற் றிருப்பாள்
சித்தியளிக்கும்
கருவளர் சேரி
ஸ்ரீசக் கரமே ருடையவளே
சக்தி
எனும்பல தெய்வமதாகிச்
சமயங் கடந்த மெய்ப்பொருளே
பக்தி
செயும்மணி தர்க்கே தோன்றிப்
பாங்குடன் அருளும் பரசிவையே
மூத்தி
தருமகத் தீஸ்வரர் நீங்கா
மூர்த்தி அகிலாண்டேஸ்வரியே!
6.தைலாபிஷேகச் சிறப்புடையாள்
திருவுரு
சுனையாய்த் தைலந்தேர்ந்த
சீரகத் தீஸ்வரர் நற்றேவி
குருவுரு
வாயகத் தியருக் கருளிய
குழகர் காவிரி நீராடி
ஒருவுரு
வாம்சிவ மாக அமர்ந்தார்
உத்தமர் போற்றும் ஊராகிப்
பெருவுரு
கருவளர் சேரி எனும் பேர்
பெற்றது நற்றவர் நாவாலே.
7. பல சுவை நைவேத்தியம் பாங்குடையாள்
அண்டகோடி
அனைத்தை ஈன்ற
அகிலாண்டத்தின் அன்னை நீ
கண்ட
தெய்வம் எல்லாம் நீயே
கருணா கரியாம் அன்னை
நீ
உண்ட
பொங்கல் உருசி மிகுந்து
உள்ளம் உவந்த அன்னை
நீ
கொண்ட
பாயசம் வடையும் உண்டு
குளிர்ந்து மகிழ்ந்த அன்னை நீ
8.பதினாறு பேறும் பக்தர்க்கருள்வாள்
மகத்துவ
மிக்க அகத்தியர் போற்றி
மாவரம்
பெற்ற அருள்நலத்தால்
அகத்தீஸ்
வரரென அழைக்கப் பெற்றார்
அகிலாண்டேஸ்வரி அவரருளால்
செகத்தினி
தேபதினாறு பேறும்
சேவிப்
பருவக் கருள்பவளே
முகத்து
மகத்தும் மலர்ந்தருள் வழங்கும்
மூர்த்தி யாய்வீற்றிருப்பவளே.
(ஆறு
சீ ர்க்கழி நெடில் ஆசிரிய விருத்தம்)
9. ஆடை அணி அலங்கார அன்னை
எங்கும்
மின்னும் பொன்னாடை
இனிதே யணிந்து ஜொலிப்பாய்
நீ
தங்க
நகைமணி தாமணிந்தே
தகதக தகவென ஜொலிப்பாய்
நீ
துங்கக்
கவசம் தனையணிந்தே
துலக்க முடனே ஜொலிப்பாய்
நீ
பொங்கும்
முகமலர் பூத்தினிதே
புனித உளத்துடன் ஜொலிப்பாய்
நீ
10. பிணக்கை நீக்கி கணக்காய் தருவாள்
பிணக்கைத்
தீர்த்தே இணக்கிடுவாய்
பிணிகள் தீர்த்தே காத்திடுவாய்
கணக்காய்
நல்லவை தந்திடுவாய்
கருணை ஊட்டும் தாயாவாய்
உனக்கார்
சொல்வர் என்தேவை
உணர்ந்தே நல்கும் தாயாவாய்
எனக்கார்
துணைசொல் அகிலாண்டம்
என்றும் எந்தன் தாய்நீயே.
11. நலந்தரும் நல்லதாய் தந்தை
அன்புத்
தாய்நீ அகிலாண்டம்
அறிவுத் தந்தை அகத்தீசர்
இன்புற்றிருக்க
வழி செய்வீர்
எழிலார் தெய்வ நலம்
பெறவே
தென்புற்றிரிக்கும்
சு௧ம் பெறவே
தெய்வச் சாந்தி தனையருள்வீர்
துன்புற்
றார்துயர் தீர்த்திடவே
துணை செய் திடுவீர்
மகிழ்ந்திடவே.
12. எல்லாம் வல்ல தாய் தந்தை
சொல்லும்
பொருளும் நீங்காத
தொடர்பு கொண்ட தன்மையதாய்
அல்லும்
பகலும் நீங்காத
அன்பே கொண்டீர் அருளாலே
வெல்லும்
வழிகள் செய்திடுவீர்
வெற்றியளிப்பீர் விரைவினிலே
செல்லும்
வழித்துணை ஆவீர்கள்
எல்லாம் வல்ல பெற்றோரே.
13. தேவை அருளும் தெய்வத்தாய்
சேவை
உனக்குச் செய்திடிலோ
தேவை
அனைத்தும் தந்திடுவாய்
பூவை
உனக்குச் சார்த்திடிலோ
புனித
உள்ளம் ஈந்திடுவாய்
நாவை
அடக்கிப் பேசிடிலோ
நயங்கள்
யாவும் தந்திடுவாய்
தேவை
எனக்காம் அகிலாண்ட
தேவீ
உந்தன் அருள் ஒன்றே.
14. திரிகரண பூஜை செய்க
வாடா
மலராம் இதயத்தால்
மகிழ்தே
உன்னை அர்ச்சிப்பேன்
கோடா
வாக்கால் உன்நாமம்
குழைந்து
சொல்லித் துதித்திடுவேன்
எடாச்
சான்றோர் கருத்தினையே
எண்ணி
எண்ணிப் போற்றிடுவேன்
ஒடா
உள்ளத் தொருமையினால்
உவந்து
மகிழ்ந்தே உயர்ந்திடுவேன்!
15. குற்றம் நீக்கிக் குணம்தருவாள்
ஏமமாகும்
உன்னரூளை
இனிதே
பற்றத் துணைபுரிவாய்
காம
வெகுளி மயக்கத்தைக்
கடிதே
நீக்க அருள்புரிவாய்
நாம
ரூபம் தனைத்தாண்டி
நண்ணும்
பேறும் நல்கிடுவாய்
சேம
வாழ்வு ஈந்திடுவாய்
ஸ்ரீஅகிலாண்ட
நாயகியே!
16. ஆச்சார்யாள் புகழ் அன்னை
அம்மா
உன்னை ஆச்சார்யாள்
அணுகிக்
கண்டார் மகிழ்ந்திட்டார்
அம்மா
இனிதே உன்னருளை
அருளுகி
றாய்எனப் புகழ்ந்திட்டார்
உம்மா
சும்மா உனைத்துதித்தே
சுகத்தோடிருக்க
அருள்தருவாய்
தம்மா
இதனிற் பெரிதுண்டோ
அகிலாண்டேஸ்வரி
அருட்தாயே!
மருதாநல்லூர்
ஓய்வு
பெற்ற தலைமைஆசிரியரான
திரு. கு.நடராஜப்பிள்ளை, ஒருநாள்
அகிலாண்டேஸ்வரியின் சன்னிதானம் வந்த போது, தேவியின்
அருளால் இந்த 16 அருட்பாடல்களைப் பாடினார். இந்த அருட்பாடல்களை
பாராயணம் செய்து ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியை பூஜை செய்பவர்கள் எல்லா
நலமும், வளமும் பெற்று, அன்பும், அருளும், அறமும் அமையப்பெற்று நீடு இன்பமும், புகழும்
எய்தி வாழ்வார்கள்.
இங்ஙனம்
அகிலாண்டேஸ்வரியின் அன்பர்கள்.
5.வேம்பு
குருக்கள்
பூஜை
ஸ்தாணீகம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோயில்
கருவளர்ச்சேரி,
மருதாநல்லூர் - 612
402.
கும்பகோணம்
வட்டம்.
தலச்சிறப்பு
கருவளர்ச்சேரி - கரு
உருவாக
திருக்கருகாவூர்
- கருவை பாதுகாத்து சுகப்பிரசவம்
திருக்கருகாவூர்
அமைவிடம்
கும்பகோணத்தின்
தெற்கில் திருவாரூர் சாலையில் 6 கி.மீ தூரத்தில்
மருதாநல்லூர் உள்ளது, இந்த இடத்தில் இருந்து
கிழக்கு நோக்கிய சாலை நாச்சியார்கோயில் செல்கிறது.
இந்தச் சாலையில் இரண்டு கி.மீ தூரத்தில்
உள்ளது கருவளர்ச்சி தரும் கருவளர்ச்சேரி.
திருக்கருக்குடி - மருதாநல்லூர்
அருகே உள்ள பாடல் பெற்ற
சிவத்தலம் . இத்தலம் கடந்துதான் கருவளர்ச்சேரி அடையவேண்டும்.
கருவளர்ச்சேரி - பெயர்க்காரணம்:
இத்திருக்கோயிலில்
ப்ரதான தெய்வமாக விளங்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள்
ஸ்வயம்புவாகப் புற்று மணலால் தானாகவே உருவானதாக வரலாறு. இங்கே அம்பாள் ஸ்வயம்புவாக உருவாகி வளர்ந்தது போலவே இவ்வாலயத்தில் குழந்தை வரம் வேண்டி ஐதீகம், அதனாலேயே இவ்வூருக்கு கருவளர்ச்சேரி என்றும், அம்பாளுக்கு கருவளர்நாயகி என்றும் வபயர் ஏற்பட்டது. மேலும், ஸ்ரீ அகஸ்திய முனிவர்
அவரது துணைவி லோபாமுத்ராவுடன் தம்பதியாக பூஜை செய்த காரணத்தினால்
ஸ்வாமிக்கு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்றும்,
அம்மனுக்கு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்றும்
பெயர் வழங்கப்படுகிறது.
கருவளர்ச்சேரி - குழந்தை பிரார்த்தனை ஸ்தலம்:
திருமணமான தம்பதிகள் தங்களுடைய வம்ச விருத்திக்காகக் குழந்தை பாக்கியம் வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ளும் மிக முக்கியமான குழந்தை பிரார்த்தனை ஸ்தலமாக கருவளர்ச்சேரி விளங்குகிறது.
இவ்வாலயத்தில்
கருவளர்நாயகி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்வயம்புவாக உருவாகியதைப் போலவே இங்கே வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் பெண்களுக்குக் கரு உருவாகி வளர்வதாக
ஐதீகம். எனவே, இவ்வாலயத்தின் முக்கிய பிரார்த்தனையாக குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.
குழந்தை பிரார்த்தனை மூறை :
பிரார்த்தனை
செய்வதற்குக் கீழ்கண்ட பூஜை பொருட்கள் அவசியம்.
1. உருண்டை
மஞ்சள்கள் - ஏழு
2. பசு
நெய்
3. எலுமிச்சம்
பழங்கள் - இரண்டு
4. தேங்காய்
5. வாழைப்பழம்.
6. வெற்றிலை
பாக்கு
7. புஷ்பம்
8. குங்குமம்
9. ஊதுபத்தி
பிரார்த்தனை
செய்யும் தம்பதிகள் அம்மன் சன்னதியில் மனதார அம்மனை வேண்டுதல்வேண்டும். குழந்தை வரம் வேண்டும் பெண்மணிஅம்மன் சன்னதியின் வாயிற்படியை நெய்யினால் மெழுகி கோலமிட்டு மஞ்சள் குங்குமத் திலகமிட்டு (பாத பூஜை செய்வது
போல) பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
பின்னர்
அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு மஞ்சள் மற்றும்
ஒரு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்படும். அப்பிரசாதத்தைப் பெற்றுக் காண்டு கீழ்க்கண்டவாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.
அம்மனின்
அனுக்ரஹத்துடன் கர்ப்பம் தரித்து, பின்னர் வளைகாப்பு, சீமந்தம் செய்யும் பொழுது முதல் ஏழு வளையல்களை அம்பாளுக்குச்
சமர்ப்பணம் செய்வதற்காக எடுத்து வைத்து விடுகிறேன் என்றும்,
பின்னர்
குழந்தை பிறந்து கோவிலுக்கு வரும்போது குழந்தையை அம்மன் சன்னதியில் உள்ள தொட்டிலில் இட்டு
அர்ச்சனை செய்து அந்த வளையல்களைச் சமர்ப்பிக்கிறேன்
என்றும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் மற்றும் எனுமிச்சம்பழப் பிரசாதம்
மேலும்,
அந்த ஏழு மஞ்சள்களை பிரார்த்தனை
செய்து அப்பெண்மணியைத் தவிர வேறு யாரும்
தொடுதல் கூடாது. அப்பெண்மணிபெண் மட்டும்
தினமும் குளிக்கும்போது உடலில் பூசிக் குளிக்க வேண்டும். அவரவர் உபயோகத்துக்கேற்ப ஒரு மஞ்சள் முடிந்தபின்
அடுத்த மஞ்சளை எடுத்து உபயோகப் படுத்த வேண்டும். பாதத்தில் படாமல் உடலில் வேறு எங்கு வேண்டுமானாலும்
பூசிக்குளிக்கலாம்.
அம்பாளின்
அனுக்ரஹத்தினால் அரை மஞ்சளிலிருந்து மூன்று
மஞ்சள் தீர்வதற்குள்ளாகவே அப்பெண்மணி கருத்தரித்துவிடுவார்.
இருப்பினும் குழந்தை பிறக்கும்வரை தொடர்ந்து மஞ்சளை உபயோகப்படுத்தி வர வேண்டும். பின்னர்
கரு நன்கு வளர்ந்து வளையலணி விழா சீமந்தம் செய்யும்
போது முன் செய்த பிரார்ததனையின்படி முதலில் ஏழு வளையல்களை அம்பாளை
நினைத்து அம்பாளுக்காக வீட்டில் பத்திரமாக எடுத்து வைத்து விட வேண்டும். பின்னர்
மீதியுள்ள வளையல்களை அப்பெண்மணிக்கு அணிவிக்க வேண்டும்.
அம்பாளின்
கிருபையுடன் குழந்தை நல்லபடியாகப்பிறந்து ஒரு வயது அல்லது
இரண்டு வயதுக்குள் குழந்தையை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்கு அழைத்து வந்து சன்னதியில் உள்ள தொட்டிலில் குழந்தையை
இட்டு, எடுத்து வைத்த வளையல்களையும் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். இதுவே குழந்தை பிரார்த்தனை செய்யும் முறையாகும்.
விவாஹ பிரார்த்தனை
ஸ்ரீஅகஸ்திய
மகரிஷிக்கு பரமேஸ்வரர் திருக்கல்யாண காட்சி அருளிய ஸ்தலமாக விளங்குவதால் இத்திருக்கோவிலில் திருமணப் பிரார்த்தனை செய்வது விசேஷம் ஆகும். திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள்
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 7 வாரங்கள் தொடர்ந்து (எதேனும் ஒரு கிழமையில்) அர்ச்சனை
செய்து வர, கூடிய விரைவில்
திருமண வாழ்க்கை கை கூடும். மேலும்,
பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்குப் பூமாலை மற்றும் திருமாங்கல்யம் சாற்றி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். இதுவே திருமண பிரார்த்தனைமுறையாகும்.