Wednesday, 12 October 2016

குழந்தை பேறு மகப்பேறு குழந்தை செல்வம் வாய்க்க

திருச்சி மலைக்கோட்டை குளக்கரையில் நந்தி கோவில் தெருவில் உள்ள நந்தியம்பெருமான்


குழந்தை பேறு  மகப்பேறு குழந்தை செல்வம்  வாய்க்க


தாயுமான வெண்ணையாகி தையை கூர்ந்து உருகி
மாயமான் மழுவும் ஏந்தி மயிர் கூச்செரிந்து
ஏழை என் உடல் வலி தெரிந்திடாமல்
பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே .

நன்றி :அகஸ்திய விஜயம்


 

Sunday, 2 October 2016

எட்டு நாண்மலர்

எட்டு நாண்மலரை அட்டபுட்பம் என்பர் வடமொழியாளர். புன்னை, வெள்ளெருக்கு சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பன அவ் எண் மலர்களாம்.
 
அகப்பூசைக்குரிய எண்மலர்களாவன. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம்.
இதனை நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் என்பார் அப்பர்.
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னார்அடி சேரும் அவருக்கே -தி.5 .54 பா.1
என்னும் இத்திருப்பதிகம் திருவதிகை வீரட்டானத்திறைவரைப் பற்றியது. இப்பதிகத்துப் பல பாடல்களிலும் அஷ்டபுஷ்பம் சார்த்தலையும் அதன் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.

Friday, 16 September 2016

பெரியபுராணத்தில் உலகெலாம் என்ற சொல் பயின்று வரும் பாடல்கள்



பெரியபுராணத்தில் உலகெலாம் என்ற சொல் பயின்று வரும் பாடல்கள்

 00 பாயிரம் - திருமலைச் சருக்கம் 1 . உலகெ லாம்உணர்ந்
2. தில்லைவாழந்தணர் புராணம் 7 . ஞானமே முதலா
2. இளையான்குடிமாற நாயனார் புராணம் 15. பெருகு வானம்
12 மானக்கஞ்சாற நாயனர் புராணம் 36 . மனந்தளரும் இடர்நீங்கி
19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 48 . இவ்வ ளந்தரு
21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் 371 . ஆதி தேவர்தந்
24 காரைக்காலம்மையார் புராணம் 51 . மலர்மழை
26 திருநீலநக்க நாயனார் புராணம் 1.பூத்த பங்கய
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 216 சோதி 
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 643 . அளவிலா மகிழ்ச்சி
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 859 . மீனவற்
29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் 88 . உலகெ லாம்உய்ய
43 அதிபத்த நாயனார் புராணம் 16. வாங்கு நீள்
69 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் 7 . தமனியப் பலகை
72 வெள்ளானைச் சருக்கம் 40 . மாசில் வெண்மைசேர்
72 வெள்ளானைச் சருக்கம் 53 . என்றும் இன்பம்

1.திருமலைச் சருக்கம்
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
 நிலவு லாவிய நீர்மலி வேணியன்
 அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
 மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் .

2.தில்லைவாழந்தணர் புராணம்                     7 . ஞானமே முதலா
ஞானமே முதலா நான்கும்
   நவையறத் தெரிந்து மிக்கார்
 தானமுந் தவமும் வல்லார்
   தகுதியின் பகுதி சார்ந்தார்
 ஊனமேல் ஒன்றும் இல்லார்
   உலகெலாம் புகழ்ந்து போற்றும்
 மானமும் பொறையுந் தாங்கி 
    மனையறம் புரிந்து வாழ்வார் 

2. இளையான்குடிமாற நாயனார் புராணம் 15. பெருகு வானம்
பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.

12 மானக்கஞ்சாற நாயனர் புராணம் 36 . மனந்தளரும் இடர்நீங்கி
மனந்தளரும் இடர்நீங்கி
   வானவர்நா யகரருளால்
 புனைந்தமலர்க் குழல்பெற்ற
   பூங்கொடியை மணம்புணர்ந்து
 தனம்பொழிந்து பெருவதுவை
   உலகெலாந் தலைசிறப்ப
 இனம்பெருகத் தம்முடைய
   எயின்மூதூர் சென்றணைந்தார்

19 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் 48 . இவ்வ ளந்தரு
இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும்
 மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
 எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும்
 கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்

21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் 371 . ஆதி தேவர்தந்
ஆதி தேவர்தந் திருவருள்
   பெருமையார் அறிவார்
 போத மாதவர் பனிவரைப்
   பொய்கையில் மூழ்கி
 மாதொர் பாகனார் மகிழும்ஐ
    யாற்றிலோர் வாவி
 மீது தோன்றிவந் தெழுந்தனர்
   உலகெலாம் வியப்ப.

24 காரைக்காலம்மையார் புராணம் 51 . மலர்மழை
மலர்மழை பொழிந்த தெங்கும்
   வானதுந் துபியின் நாதம்
 உலகெலாம் நிறைந்து விம்ம
    உம்பரும் முனிவர் தாமும்
 குலவினர் கணங்கள் எல்லாம்
   குணலையிட் டனமுன் னின்ற
 தொலைவில்பல் சுற்றத் தாருந்
   தொழுதஞ்சி அகன்று போனார்

26 திருநீலநக்க நாயனார் புராணம் 1.பூத்த பங்கய
பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
   பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
   காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
   புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
   முதற்பதி வனப்பு.

28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 216 சோதி 
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.

28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 643 . அளவிலா மகிழ்ச்சி
அளவிலா மகிழ்ச்சி காட்டும்
    அரும்பெரு நிமித்தம் எய்த
 உளமகிழ் வுணருங் காலை
    உலகெலாம் உய்ய வந்த
 வளரொளி ஞானம் உண்டார்
    வந்தணைந் தருளும் வார்த்தை
 கிளர்வுறும் ஓகை கூறி
    வந்தவர் மொழியக் கேட்டார்

28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 859 . மீனவற்
மீனவற் குயிரை நல்கி
    மெய்ந்நெறி காட்டி மிக்க
 ஊனமாஞ் சமணை நீக்கி
    உலகெலாம் உய்யக் கொண்ட
 ஞானசம் பந்தர் வாய்மை
    ஞாலத்திற் பெருகி ஓங்கத்
 தேனலர் கொன்றை யார்தந்
    திருநெறி நடந்த தன்றே

29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் 88 . உலகெ லாம்உய்ய
உலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்
    உரைத்துமெய் யுணர்வறா வொருமை
 நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
    நீங்குவார் பாங்குநற் பதிகள்
 பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
    போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
 குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
    குறுகினார் முறுகுமா தரவால்

43 அதிபத்த நாயனார் புராணம் 16. வாங்கு நீள்
வாங்கு நீள்வலை அலைகடற்
    கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென
    வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக்
    காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று
    படுத்தனம் என்றார்

69 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் 7 . தமனியப் பலகை
தமனியப் பலகை ஏறித்
    தந்திரிக் கருவி வாசித்
 துமையொரு பாகர் வண்மை
    உலகெலாம் அறிய ஏத்தி
 இமையவர் போற்ற ஏகி
    எண்ணில்தா னங்கள் கும்பிட்
 டமரர்நா டாளாது ஆரூர்
    ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்

72 வெள்ளானைச் சருக்கம் 40 . மாசில் வெண்மைசேர்
மாசில் வெண்மைசேர் பேரொளி
    உலகெலாம் மலர்ந்திட வளர்மெய்ம்மை
 ஆசி லன்பர்தம் சிந்தைபோல்
    விளங்கிய அணிகிளர் மணிவாயில்
 தேசு தங்கிய யானையும்
    புரவியும் இழிந்துசே ணிடைச்செல்வார்
 ஈசர் வௌள்ளிமா மலைத்தடம்
    பலகடந் தெய்தினர் மணிவாயில்

72 வெள்ளானைச் சருக்கம் 53 . என்றும் இன்பம்

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
 ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
 மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
 நின்றது எங்கும் நிலவி உலகெலாம் .
 

Thursday, 18 August 2016

இணையத்தில் அகஸ்திய விஜயம் மாத இதழ்

ஸ்ரீஅகஸ்திய விஜயம் -திருஅண்ணாமலை
இணையத்தில் அகஸ்திய விஜயம் மாத இதழ்

http://www.kulaluravuthiagi.com/av.htm
 

Tuesday, 2 August 2016


மாணிக்க வாசகர் அருளிய திருவாசக பாடல் தொகுப்பு...

http://sivapeedam.org/songs.php

Wednesday, 27 July 2016

திருவாசகம் திருக்கழுக்குன்றம் தாமோதரன் அய்யா திருக்கோத்தும்பி

Thiruvasagam Butterfly

https://www.youtube.com/watch?v=-3LyoeGE0kg