Thursday, 4 July 2019

நிலத்தேவர் வாஸ்து வழிபாடு




வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களாக எட்டு நாட்களைக் குறித்திருப்பார்கள்

சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 23

சித்திரை மாதம் – 10ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 1 1/2 ,மணி நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்

வைகாசி மாதம் – 21ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 6மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்

ஆடி மாதம் 11 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்

ஆவணி மாதம் – 6ஆம் தேதிசூரிய உதயத்திலிருந்து 8மணி 24 நிமிட நேரத்திர்கு மேல் (90 நிமிடங்கள்

ஐப்பசி மாதம் – 11ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90நிமிடங்கள்.) 

கார்த்திகை மாதம் – 8ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 4மணி நேரத்திற்கு மேல் .(90 நிமிடங்கள்) அதாவது காலை 10 மணி முதல் 11.30 மணி வரை 

தை மாதம் – 12 ஆம் தேதி சூரிய உதயத்தினின்று 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்.) 

மாசி மாதம் – 23 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்.) 

எனவே மேற்கண்ட எட்டு நாட்களிலும் அந்தந்த நாளுக்காகக் குறிக்கப்பட்டுள்ள சூரிய உதயத்திலிருந்து, குறித்த நேரத்திற்கு மேலாக 90 நிமிடங்களுக்குள் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியுடைய தந்த சுத்தி, புனித நீராடல், பூஜை, அன்னம் ஏற்றல் (போஜனம்), தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து புனித காரியங்களைப் புரிகின்றார்.

ஒவ்வொரு அம்சத்திற்கும் 18 நிமிடங்களாக, அதாவது மேற்கண்ட வாஸ்து நாளில் சூரிய உதயத்திலிருந்து குறித்த நேரத்திற்கு மேல், ஐந்து புனித காரியங்களுக்கும் 90 நிமிடங்கள் மட்டும் அமைகின்றன.

  வாஸ்து பூஜையை வாஸ்துவின் ஆரம்ப நேரத்திலிருந்து துவங்குதல் சிறப்பானதாகும். இவற்றில் மிகவும் புனிதமானதாக கிரஹப் பிரவேசம், புதுவீட்டில் காலடி வைத்தல் போன்ற நற்காரியங்கட்கு ஸ்ரீவாஸ்து மூர்த்தி அன்னம் ஏற்கும் மற்றும் தாம்பூலம் தரிக்கும் நேரம் (கடைசி 36 நிமிட நேரம்) மிகவும் சிறப்பானதாகும்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்

Tamil Month
Time
12 Thai
09.48 AM to 8.20 AM
08 Maasi
09.35 AM to 11.05 AM
08 Panguni
09.15 AM to 10.44 AM
10 Sith
07.53 AM to 09.23 AM
21 Vai
10.32 AM to 11.08 AM
11 Aadi
06.41 AM to 08.11 AM
06 Avani
07.23 AM to 07.59 AM
11 Aippasi
06.50 AM to 8.20 AM
08 Karththikai
10.12 AM to 7.59 AM
23.4.1998 சித்திரை – 10 வியாழன்
 ஸ்ரீ வாஸ்து மூர்த்தியின்
தந்த சுத்தி நேரம்காலை 7.55 முதல் 8.13
நீராடல் – 8.13 முதல் 8.31
பூஜை  - 8.31 முதல் 8.49
போஜனம் – 8.49 முதல் 9.07
தாம்பூலம் – 9.0 முதல் 9.25
 8.49   முதல் 9.25 வரை அஸ்திவார/அடிக்கல் மற்றும் ஏனைய பூஜைகளுக்கு மிகச் சிறந்த நேரமாகும். காலை 7.55 மணிக்கே ஸ்ரீ வாஸ்து துதியைப் பாராயணம் செய்யத் தொடங்கிட வேண்டும்.




ஓம் தத்புருஷாய வித்மஹே யோக மூர்த்யாய தீமஹி
 தந்நோ வாஸ்து தேவ மூர்த்திப் பிரசோதயாத்

ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்.)
1. ஓம் பூ புவ சுவர்க மங்கள சுவாமியே போற்றி!
2. ஓம் பூ புவ சுவர்க நிலம் பூந்தகையே போற்றி!
3. ஓம் பூ புவ சுவர்க நீர், நிலத் தொகையனே போற்றி!
4. ஓம் பூ புவ சுவர்க புவன வடிவோனே போற்றி!
5. ஓம் பூ புவ சுவர்க பூமத்ய மூர்த்தியே போற்றி!
6. ஓம் பூ புவ சுவர்க பூலோக நாதரே போற்றி!
7. ஓம் பூ புவ சுவர்க பூமண்டல தெய்வமே போற்றி!
8. ஓம் பூ புவ சுவர்க புவன வளச் செல்வமே போற்றி!
9. ஓம் பூ புவ சுவர்க நிலமண்டல தேவா போற்றி!
10.ஓம் பூ புவ சுவர்க தாவரத் துறையுறை தாளா போற்றி!
11. ஓம் பூ பூவ சுவர்க பிருதிவிப் பரம்பொருள் தேவா போற்றி!
12. ஓம் பூ புவ சுவர்க இகபர நிலவழி நித்யனே போற்றி!
13. ஓம் பூ புவ சுவர்க பூநாத கான புவனனே போற்றி!
14. ஓம் பூ புவ சுவர்க அந்தரப் பரம் பொருள் அமுதா போற்றி!
15. ஓம் பூ புவ சுவர்க கீழ்திசை காக்கும் கிரணனே போற்றி!
16. ஓம் பூ புவ சுவர்க மண் உறை மறைவடி மகேசா போற்றி!
17. ஓம் பூ புவ சுவர்க மூலத் தினகரன் முதலுரு போற்றி!
18. ஓம் பூ புவ சுவர்க மறைநில மறைபுலன் மறையே போற்றி!
19. ஓம் பூ புவ சுவர்க வேள்வி முதலாய் விளக்கொளி போற்றி!
20. ஓம் பூ புவ சுவர்க புண்ணிய திருமால் புறத்துரு போற்றி!
21. ஓம் பூ புவ சுவர்க ஆயிரங் கண் மலர்ப் பரவொளி போற்றி!
22. ஓம் பூ புவ சுவர்க நெய்யுறை சத்திய அழகா போற்றி!
23. ஓம் பூ புவ சுவர்க தர்மத் தலைக் கரு தகையே போற்றி!
24. ஓம் பூ புவ சுவர்க அனைத்துள பருப்பொருள் அருள்மறை போற்றி! 
25. ஓம் பூ புவ சுவர்க ஆழிநிலைகொள் அனந்தனே போற்றி!
26. ஓம் பூ புவ சுவர்க ஊழ்வினை அகற்றும் சுந்தரா போற்றி!
27. ஓம் பூ புவ சுவர்க பாழ்மனம் போக்கும் பரந்தாமா போற்றி!
28. ஓம் பூ புவ சுவர்க இதழ் என்றும் இயம்பும் இனியா போற்றி! (இதழ்க் கொடி = ஒரு வகை பூமி கிழங்கு)
29. ஓம் பூ புவ சுவர்க புகழ்பட வாழ்ஒளி வள்ளலே போற்றி!
30. ஓம் பூ புவ சுவர்க தமிழ்த் திருமண் உறை தாடாளா போற்றி [தாடாளன் = பூமியளந்த விக்ரமன்]
31. ஓம் பூ புவ சுவர்க கருத்தூன்றிக் கர்ம எறும்பூரா போற்றி! [எறும்பூர்  = எறும்பு ஊறும் ஒருவகை பூமி பாறை ] திருச்சிதிருஎறும்பூரிலும் உள்ளது.
32. ஓம் பூ புவ சுவர்க  மருத்துவக் கொடிக்குடி குரு மூர்த்தி போற்றி! [கொடிக்குடி = அற்புத பூமிகா மூலிகை]
33. ஓம் பூ புவ சுவர்க கீற்றுக் காற்றுக் கருவள திருத்தாளா போற்றி!
34. ஓம் பூ புவ சுவர்க காதோலைக் கருத்துக் கண்ணா போற்றி! [ காதோலை = கலச அணிகலன் ]
35. ஓம் பூ புவ சுவர்க பெண்ணினப் பெருமணி பொன்னாளா போற்றி!
36. ஓம் பூ புவ சுவர்க ஓலைப்பாய் ஓர் உறை உருவா போற்றி! [ஓலைப் பாய் = பூமி

1. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீமங்கள தேவாய நம
2. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஅற்புத மூர்த்தயே நம
3. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஆனந்த ரூபாய நம
4. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஇஷ்டபூர்த்தயே நம
5. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஈஸ்வர ரூபாய நம
6. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஹரிவதன சுதாய நம

7. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீஹரிஹர நாம பாதாய நம
8. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபிருத்வி சக்தயே நம
9. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபூமத்ய ப்ரகாசாய நம
10. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபுவன தேஹாய நம
11. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீபூக்ருத தேவாய நம
12. ஓம் பூர் புவ சுவஹ ஸ்ரீ பூலோகநாதாய நம


ஸ்ரீவாஸ்து மூர்த்தி அஷ்டோத்தர நாமாவளி

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
    பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
    நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
    வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

தொடுக்குங் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ்
சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந்

 தெடுக்கும் தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய
விமயப் பொருப்பில் விளையாடு
மிளமென் பிடியே யெறிதரங்கம்

 உடுக்கும் புவனங் கடந்துநின்ற
வொருவன் றிருவுள் ளத்திலழ
கொழுக வெழுதிப் பார்த்திருக்கு
முயிறோ வியமே மதுகரம்வாய்

 மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக்கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (9)
பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்

 விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைக்கும் பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின்

 குருந்தே வருக வருள்பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்

 மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (10)


திருவாதிரை பாடல்கள்



பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.  1.105.1 

தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 2.44.8 

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 2.47.4 

ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே. 3.28.11

ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன்
பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே. 3.61.1 

ஊர்திரை வேலையுள் ளானும் உலகிறந் தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்
ஆதிரை நாளுகந் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.  4.4.6 

முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.1 

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.2 

வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள் 
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.3 

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.4 

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.   4.21.5 

விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.6 

செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.7 

முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.8 

துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.9 

பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  4.21.10 
 
மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும் நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும் ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந் திருப்பயற் றூர னாரே.  4.32.5 
 ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே.  5.12.2 

வேத நாயகன் வேதியர் நாயகன் 
மாதின் நாயகன் மாதவர் நாயகன் 
ஆதி நாயகன் ஆதிரை நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.  5.100.1 

பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
       புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
       ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங் 
       கழிப்பாலை மேய கபாலப் பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க 
       வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. 6.12.4 

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
       ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
       தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
       உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
       கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.  6.15.7 

மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
       மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
       முதலு மிறுதியு மில்லார் போலுந்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
       திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
       ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.  6.21.6 

பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்
       புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை
வேதியனை வெண்காடு மேயான் றன்னை
       வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை
       அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்
       பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.  6.69.3 

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்
       சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
       ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
       மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்
       சாராதே சாலநாள் போக்கி னேனே.  6.79.1 

அங்கமே பூண்டாய் அனலா டினாய்
       ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்
       பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
       சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
       திருப்புகலூர் மேவிய தேவ தேவே.  6.99.2 

திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.  7.31.6 

ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.  7.97.1 

ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 9.திருப்பல்லாண்டு.12

சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்   
 மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
 இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்  
 முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை    12.பெரிய புராணம்.1500

ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்     
 மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்      
 தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
 நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 12.பெரிய புராணம்.1834