Thursday, 4 July 2019

ஸ்ரீஅகஸ்தியர் நட்சத்திர திரட்டு போற்றி வழிபாடு

ஸ்ரீஅகஸ்தியர் திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

1. வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே
  வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே போற்றி!

2. கண்டமர் கருணைத் திருஒளியே
  காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே போற்றி!

3. எங்கும் தீபச் சுடர் ஒளியே
  ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே போற்றி!

4. தாயாய் வந்த அருள் ஒளியே
  தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே போற்றி!

5. வேதம் ஆனாய் பேரொளியே
  வெற்றி யருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே போற்றி!

6. நாதம் ஈந்த நாரிமணியே தினம்
  நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே போற்றி!

7. பாதம் தந்து காத்திடுவாய்
  பரிந்தருளும் புனர்பூச பொற்பாதமே போற்றி!

8. வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
  வணங்கிடயென் பூச பொற்பாதமே போற்றி!

9. உள்ளம் கனிய உன்புகழ் பாடும் கள்ளமற்ற
   உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்யப் பொற்பாதமே போற்றி!

10. கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே
   கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள் மகப் பொற்பாதமே போற்றி!

11. உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து
   உருகி அழுமெனைத் தேத்து உத்தம பூரம் பொற்பாதமே போற்றி!

12. தீரா நோயைத் தீர்த்தருளும் அமுத
   தீச்சுடரே தினமருள் உத்திர பொற்பாதமே போற்றி!

13. ஆரா அமுதாய் ஆனவளே அடியேனுக்கு
   ஆபத்தில் உதவிடு ஹஸ்த பொற்பாதமே போற்றி!

14. கருவில் மீண்டும் வாராமல் கருணையோடு
   காத்தருளும் கர்த்தா சித்திரை பொற்பாதமே போற்றி!

15. கொஞ்சும் புன்னகை பூத்தவளே என்றும்
   கோலாகலமாய் வாழ்ந்திட அருள் சுவாதி பொற்பாதமே போற்றி!

16. எண்ணும் மனத்தை நீ மேவி என்னுள்
என்றும் கோயில் கொண்ட விசாக பொற்பாதமே போற்றி!

17. பங்கம் இல்லா நிறைவாழ்வு எனக்கு
பரிவுடன் தந்து காக்கும் அனுஷம் பொற்பாதமே போற்றி!

18. உன்னை வணங்கும் என் கைகள் என்றும்
உதவிடும் உனதருள் பெறவே கேட்டை பொற்பாதமே போற்றி!

19. உன்புகழ் பேசும் என் நாவே தினமும்
உன் கருணை பெறவே மூலம் பொற்பாதமே போற்றி!

20. உன்னை நினைக்கும் என் மனமே நலமுடன்
உகந்தருள் தரும் உன் பூராட பொற்பாதமே போற்றி!

21. நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராட பொற்பாதமே போற்றி!

22. நித்தம் நித்தம் நினைவில் நின்று நலம் தரும்
நீலத் திருமால் அருள் பெற்ற திருவோண பொற்பாதமே போற்றி!

23. மணமகள் மகிழச் செய்யும் மங்கையே
மன்றாடும் நின் பிள்ளை மலரச் செய் அவிட்ட பொற்பாதமே போற்றி!

24. தீரா நோயைத் தீர்த்தருளும் திவ்விய
தெய்வமே சதய பொற்பாதமே போற்றி!

25. சோதி அருள் ஈந்திடும் சுந்தர
ஆதி தெய்வமே பூரட்டாதி பொற்பாதமே போற்றி!

26. வேதியர்க்கெல்லாம் வித்தாகிடும்
வேத தெய்வமே உத்திரட்டாதி பொற்பாதமே போற்றி!

27. தந்தையாய் வந்து தனிப் பெருங் கருணை காட்டும்
எந்தை அருணாசலத்து வாழ் ரேவதி பொற்பாதமே போற்றி!



ஸ்ரீஅகஸ்தியர் நட்சத்திர சஹாயத் திருவாக்யத் திரட்டு

1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே
2. க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே
3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே
4. மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே
5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே
6. தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே
7. அம்புஜ வாஸிநி தேவகணசேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே
8. ஜெயவர வர்ணிநி ஜெயப் பிரதாயினி சிவ பூச தேவி சஹாய க்ருபே
9. சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே
10. சாது ஜடராச்ரித தேவமுனி பூஜித யோக மகம் தேவி சஹாய க்ருபே
11. துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே
12. ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபிணி உத்திர தேவி சஹாய க்ருபே
13. ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே
14. ரத கஜ துரக பதாதி சேவக சாஸ்திர மய சித்ரா தேவி சஹாய க்ருபே
15. சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே
16. குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே
17. சந்திர ப்ரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே
18. பாரதி பார்கவி மந்திரமய கோபுர கேட்டை பிரதாயினி சஹாய க்ருபே.
19. சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே.
20. அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே.
21. சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே.
22. மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.
23. காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.
24. மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.
25. நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே.
26. சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.
27. ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் நட்சத்திரக் காப்பு திரட்டு
1.அசுவினி:
வருவன கண்டேன்  வளர்மதி திருஅஸ்வினி அருள் பூண்டு
இருவினை களையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

2.பரணி:
திருஅருள் புரியும் தீச்சுடர் பரணி அருள் பூண்டு
குரு அருள் பூண பூரண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

3.கார்த்திகை
யாதும் பெருமையுற கீர்த்தி கிருத்திகை அருள்பூண்டு
ஏதுசெய்யினும் நலமே விளையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே

4.ரோகிணி: 
மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகினி அருள் பூண்டு
வேதம் ஓதுவோர் துணையாகும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

5.மிருகசீரிஷம்:
மலை அருவி எனப் புகழ் சிதறும் மிருகசீருஷ அருள் பூண்டு
மனைவி துயர் நெருங்காது அருள் புரியும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

6.திருவாதிரை:
வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு ஆதிரை அருள் பூண்டு
ஆழி முதல்வனாகி நின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

7.புனர்பூசம்:
புகழ் மாலை சூட்டியெனைப் புனிதனாக்கி புனர்பூச அருள் பூண்டு
திகழ்கின்ற திடசித்தி அருள்கின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

8.பூசம்:
குளிர்ந்து வரும் குருவருள் பூண்ட பூசத்து அருள் பூண்டு
தளர்ந்த வினை சேராதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

9.ஆயில்யம்:
ஏந்திழையாளொடு மதி ஆயில்ய சகிதமாகி  கை
ஏந்தி நிற்கும் நிலையிலா அருள் பூண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

10.மகம்:
தர்ம திருவருள் மாதேவி மகத் திருவருளால்
கர்மத் தொல்லை தீர உடனிருக்கும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

11.பூரம்:
பன்மலர் தூவிப் பாடி மகிழ்ந்து பூரம் அருள் பூண்டு
இன்முகம் சுமந்து வாழ இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

12.உத்திரம்:
சிந்தையிலே சீர் பெறும் உத்திர அருள் பூண்டு
கந்தலாடைக்கு ஆளாக்காத இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

13.அஸ்தம்:
அஸ்த மெல்லியலாளொடு சசிதர அருள் பூண்டு
அஸ்தர அம்பென வார்த்தைகளால் துன்புறாது இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

14.சித்திரை:
சொல்லும் செயலும் சித்திரையால் சிவமே பூண்டு
அல்லும் பகலும் அரனருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

15.சுவாதி:
திங்கள் உடனுறை சுவாதித் திருவருள் பூண்டு
எங்கும் எதிலும் வெற்றியுற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

16.விசாகம்:
திசைதிசை தொழுது விசாகத் திருவருள் பூண்டு
இசைபட வாழ்ந்திடவே இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

17.அனுஷம்:
பொடிதனைப் பூச வைத்த புனித அனுஷ அருள் பூண்டு
வடிவு பொங்கும் வாழ்வுற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

18.கேட்டை
தொழும் தொண்டர் கேட்டைத் திருவருள் பூண்டு
மழுவும் மானும் பூண்டவர் அருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

19.மூலம்:
வண்டுசேர் குழலினாளை மூல அருளைப் பூண்டு
கண்டு சேர் மணாளன் உடனுறைய இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

20.பூராடம்:
அண்ட வானவர்கள் ஏத்தும் பூராடத் திருவருளால்
தொண்டர்கள் தொழுதேத்த இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

21.உத்திராடம்:
வல்வினை விரைந்தோட உத்திராடத் திருவருள் பூண்டு
இல்வினை இனிதுற நடத்த இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

22.திருஓணம்:
சங்கணி குழையும் பூண்டு திருவோணத் திருவருள் கூட்டி
இங்கணியும் சிறப்பெல்லாம் குறையுறாதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

23.அவிட்டம்:
கடுவினையும் களைந்தருளும் அவிட்டத் திருஅருள் பூண்டு
சுடுவினை தாக்காதிருக்க இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

24.சத்யம்:
 பக்தர்க்கருளும் பாச நிறை சதயத்தருளால்
சித்தர் அருள் பெற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

25.பூரட்டாதி:
முக்தி நிலை அருள்கின்ற பூரட்டாதி அருள் பூண்டு
சக்தி நிலை பெற வைத்திட இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

26.உத்திரட்டாதி:
உருகும் மனமுடையோர் உத்திரட்டாதி அருள் பூண்டு
பருகி வாழ்வாங்கு வாழ இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

27.ரேவதி:
ஹரஹர சிவ என்பார் மனதில் புகுந்து ரேவதி
கரங் கொடுத்துதவ இரட்டைக் கணபதி பாதக் காப்பே! 

No comments:

Post a Comment