Wednesday, 24 January 2018

திருமுறை வழியில் சிவபூசை (அபிஷேக பதிக பாடல்கள்)


 
திருச்சிற்றம்பலம் 
திருமுறை வழியில் சிவபூசை (அபிஷேக பதிக பாடல்கள்)
திருவிளக்கு ஏற்றுதல் -
திருக்கடவூர் வீரட்டம்- பண் : திருநேரிசை
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே. 4.31.4
 
பூசை பெட்டகத்தை திறத்தல்  - திருமறைக்காடு
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே! 5.10.1
 
ஈடுபாட்டை  புலப்படுத்தல் திருப்புள்ளிருக்குவேளூர் திருத்தாண்டகம்
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு;
அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை;
நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை; கேதாரம் மேவினானை;
கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற
                                 நாள் போக்கினேனே!.
 
பெட்டகத்துள் பெருமானை கண்டதும் ஆரா காதலுடன்
எட்டு நாண்மலர் சாற்ற விழைதல்- திருமறைக்காடு
அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே. 5.9.4
 
பெருமானை எழுந்தருள்விக்க – திருமுகத்தலை (கருவூர் தேவர்)- பண் : பஞ்சமம்
என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
    தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
    ஒழிவற நிறைந்தஒண் சுடரே
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
    முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
    கனியுமாய் இனியைஆ யினையே . 9.11.8
 
எட்டு மலர் தூவி போற்றுதல் - திருஅதிகை வீரட்டானம்
எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
    கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி. 6.5.1
 
இலிங்க சுத்தி  -திருவாசகம்  : திருச்சதகம்
வானாகி மண்ணாகி வளியாகிஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்  இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே  8.5.15
 
திருமுழுக்காட்ட தொடங்கல் -பொது தனித்திருத்தாண்டகம்
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள்
          நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; எனை
        ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்
         தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான்
                      திருக்கருணை இருந்த ஆறே!. 6.95.8
 
எண்ணெய்  முழுக்கு - கோயில்       பண் : காந்தார பஞ்சமம்
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம் 
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
 
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்
 
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே! 3.1.1
 
ஆனைந்து (பஞ்சகவ்யம்) - பொது
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே. 5.99
.1
 
திருமஞ்சன பொடி / மஞ்சள்  - திருப்பொற்சுண்ணம்
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! 8.9.9
 
மா பொடி  திருக்கழுக்குன்றம் பண் : நட்டபாடை
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை! 
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
 
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
 
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே! 7.81.4
 
ஐயமுதம்  (பஞ்சாமிர்தம்)  /எலுமிச்சை  திருச்செங்காட்டங்குடி பண் : பழந்தக்கராகம்
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சுரத்தானே. 1.61.5
 
பால் தயிர் -திருவெண்காடு பண் : காந்தார பஞ்சமம்
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!     3.15.3
 
பால் தயிர் -திருவெண்காடு பண் : காந்தார பஞ்சமம்
பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
 சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
 வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
 மாலை யாவது மாண்டவ ரங்கமே. 5.49.10
 
 
தயிர் திருவோணகாந்தன்தளி பண் : இந்தளம்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே. 7.5.1
 
 
தயிர் திருவோணகாந்தன்தளி பண் : இந்தளம்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே. 7.5.1
 
நெய்  முழுக்கு - திருப்புகலூர்
நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு
             உடையாய்! மறை வல்லாய்! நீதியானே!
 
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல்
                    உடையாய்! மகிழ்ந்து நின்றாய்!
 
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு,
                அடியேன் நான் இட்டு, கூறி நின்று
 
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்-பூம் புகலூர்
                           மேவிய புண்ணியனே!.6.99.8
 
தேன்  -திருக்கோழம்பம் பண் : இந்தளம்
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய 
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
 
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
 
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே. 2.13.2
 
கருப்பஞ்சாறு- பொது
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை, இனி யான் மறக்கிற்பனே? 5.93.6
 
அன்னம் -திருச்செம்பொன் பள்ளி
ஊனினுள் ளுயிரை வாட்டி உணர்வினார்க் கெளிய ராகி
 வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
 நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
 தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.1
 
இளநீர் - திருஆமாத்தூர்
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை, 
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!  5.44.10
 
இளநீர் -திருவீழிமிழலை
நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன்
                                 என நிற்கின்றான் காண்;
 
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர்
                              காலால் கழிவித்தான் காண்;
 
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல்
                       வெண்மதியம் சேர்த்தினான் காண்;
 
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண்
                                     வீழிமிழலையானே. 6.52.5
 
 
திருமஞ்சன பொடி / மஞ்சள்  - திருப்பொற்சுண்ணம்
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! 8.9.9
 
சந்தனம் -திருக்களந்தை ஆதித்தேச்சரம் பண் : புறநீர்மை
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
    தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
    திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
    டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9.9.2
 
சந்தனம் -திருவதிகை வீரட்டானம் பண் : காந்தாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. 4.2.1
 
பொன்மணிகள் (ஸ்வரனாபிஷேகம் ) -திருவாரூர் பண் : இந்தளம்
இறைகளோ டிசைந்த இன்பம்
    இன்பத்தோ டிசைந்த வாழ்வு
 பறைகிழித் தனைய போர்வை
    பற்றியான் நோக்கி னேற்குத்
 திறைகொணர்ந் தீண்டித் தேவர்
    செம்பொனும் மணியுந் தூவி
 அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே 7.8.1
 
பன்னீர் -நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே . 10.4.3.2
 
சங்கு நீர்- திருமறைக்காடு பண் : காந்தாரம்
அங்கங்களும் மறைநான்குடன்
    விரித்தான்இடம் அறிந்தோம்
 தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
    பழம்வீழ்மணற் படப்பைச்
 சங்கங்களும் இலங்கிப்பியும்
    வலம்புரிகளும் இடறி
 வங்கங்களும் உயர்கூம்பொடு
    வணங்கும்மறைக் காடே. 7.71.3
 
வலம்புரி சங்கு நீர்- திருவஞ்சைக்களம்- பண் : இந்தளம்
இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்
    இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால்
 குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்
    அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
 மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
 டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.  7.4.4
 
கங்கை நீர் -திருச்சோற்றுத்துறை
பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
 பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமே
 ஆர்த்துவந் திழிவ தொத்த வலைபுனற் கங்கை யேற்றுத்
 தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.6
 
காவிரி நீர்- பொது
தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
 கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
 இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
 கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.   4.75.1
 
கும்ப நீர் -திருவிடைமருதூர் பண் : தக்கராகம்
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ 1.32.2
 
உடையவரை பீடத்தில் எழுந்தருள்விக்க திருப்புள்ளிருக்குவேளூர் பண் : சீகாமரம்
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
 உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
 தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
 புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.  2.43.1
 
திருவடி , திருக்குடி , திருமுடி நீர் ஏற்றல்திருநனிபள்ளி
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும்; நமர்கா
2.84.5
 
திருவொற்றாடைசாற்றல் கோயில்-       6.2.11
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று
       ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச்
              சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்;
விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே;
              ஓதுவதும் வேதமே; வீணை உண்டே;
கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர்
                     மிடற்று எம் கபாலியார்க்கே.
 
பரிவட்டம் ஆடை சாற்ற- திருப்பருப்பதம்                     
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே. 4.58.4
 
திருநீறு  சாற்ற- திருவாலவாய் பண் : காந்தாரம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; 
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
 
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
 
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே. 2.66.1
 
திருநீறு  சாற்ற- திருவாலவாய் பண் : காந்தாரம்
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் 
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11
 
சந்தனம்  சாற்ற- திருக்கீழ்வேளூர்
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,
       ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
 
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை,
          சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
 
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ
         வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
 
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை,
           கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே. 6.67.1
 
பூணூல் சாற்ற திருநணா      பண் : காந்தாரம்
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண்  நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும்
 சோலை சூழ்ந்த 
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத்
 தும்பி, 
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு
 நணாவே. 2.72.5
 
மலர் சூட்ட-  திருப்பராய்த்துறை
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
ழுவாதை தீர்க்க!ழு என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே! 5.30.5
 
இண்டை மாலை திருஆரூர் 5.7.3
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.
 
மணியோசை சங்கொலி இசை கருவிகள் முழங்கல்
 திருநள்ளாறும் திருவாலவாயும்  1.7.9
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
 
மணியோசை சங்கொலி இசை கருவிகள் முழங்கல்
திருவிசைப்பா: கருவூர் தேவர் - கோவில் 9.8.4
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
   தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
   நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
   அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.
          
 
திருநீறு திருமழபாடி
நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல்
                ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
 
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
  கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
 
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்
                  ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
 
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய்
                 மழபாடி மன்னும் மணாளன்தானே. 6.39.1
 
திருநீறு திருவாஞ்சியம்  பியந்தைக்காந்தாரம்
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே. 7.76.2
 
நாறும் புகை/தூபம்  காட்டுதல்  -திருச்செங்காட்டங்குடி பண் : பழந்தக்கராகம்
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சுரத்தானே. 1.61.4
 
தீபம்  காட்டுதல்  திருநெய்த்தானம்
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி,
தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து,
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே! 4.37.2
 
அமுது காட்டுதல்    திருவையாறு
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க் 
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
 
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே. 4.92.7
 
அமுது காட்டுதல்   
பாயிரம் - திருமலைச் சருக்கம்  13 அரிவாட்டாய நாயனார் புராணம்
அடியனேன் அறிவி லாமை கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி
 
மலர்தூவல் -திருப்புகலி - நாலடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!

இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.    3.3.2
 
தூபம் காட்டும் பொழுது-  திருவதிகை வீரட்டானம் பண் : கொல்லி
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்; தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்! உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! 4.1.6
 
திருவமுது காட்டல்- திருக்கச்சி ஏகம்பம் பண் : தக்கேசி
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் 
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
 
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
 
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!
 7.61.1
 
அடுக்கு விளக்கு காட்ட- திருவாசகம்-அருட்பத்து
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், `அதெந்துவே?' என்று, அருளாயே! 8.29.1
 
ஐந்து முக விளக்கு காட்ட- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே . 10.7.11.1
 
மூன்று முக விளக்கு காட்ட- பொது பண் : காந்தார பஞ்சமம்
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ள
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே! 4.11.8
 
கற்பூரம் காட்ட- தில்லைவாழந்தணர் புராணம்
கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி 12.1.2
 
சோடச உபசாரம் - குட  தீபம்
அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர்,
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில் பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்;
செறிவு உடை மும் மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம் பொன் கோயில் பாடி,
முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! 8.9.5
 
சோடச உபசாரம் - கண்ணாடி
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே! 4.102.3
 
சோடச உபசாரம் - குடை
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ  ?  கோங்கிண  ரனைய
குடைகெழு  நிருபர்  முடியொடு முடிதேய்ந்
   துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.16.3
 
சோடச உபசாரம் - கொடி
விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே!
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . 7.41.4
 
சோடச உபசாரம் – சாமரம்
12.திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம். 23/169
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
பெருங் குடை மிடைந்து செல்லப்பிணங்கு பூங்கொடிகள் ஆட
அருங் கடி மணம் வந்து எய்த, அன்று தொட்டு என்றும் அன்பில்
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆமால்.
 
திருமுறை விண்ணப்பம் செய்க -x
 
பேரொளி திருக்கழுக்குன்றம் பண் : நட்டபாடை
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால் 
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
 
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
 
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.! 7.81.3
 
பேரொளி வழிபாடு திருமாந்துறை நட்டராகம்
கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை மலர் உந்தி,
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர் சேர்த்தி,
தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே. 2.110.5
 
தீபம் - தில்லைவாழந்தணர் புராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி 12.x.1
 
வழிபாடு நிறைவு வலம் வரல்திருஆரூர் - திருத்தாண்டகம்
மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி
     ஆவது இது கண்டாய்; “வானோர்க்கு எல்லாம்
அதிபதியே! ஆரமுதே! ஆதீ!” என்றும்;
          “அம்மானே! ஆரூர் எம் ஐயா!” என்றும்;
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச்
              சூழும் வலம் செய்து தொண்டு பாடி,
“கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா!
          கற்பகமே!” என்று என்றே கதறா நில்லே!. 6.31.8
 
வீழ்ந்து வணங்கல் (அட்டாங்க  வணக்கம்) - பொன்வண்ணத் தந்தாதி
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே 11.6.11
 
வேண்டுதல் திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே! 4.94.8
 
பிழை பொறுக்க கோருதல் - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பிழையா யினவே பெருக்கிநின்
    பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
    மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
    முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய் தில்லை
    நாத பொறுத்தருளே 11.32.34
 
பிழை பொறுக்கும் பேரருளாளர் -திருமாற்பேறு
நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
    நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
    குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
    அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
    செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.5
 
மலர் தூவல்திருஆரூர் -காந்தாரம்
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே. 4.4.8
 
வாழ்த்துபெரியபுராணம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் . 12.72.53
 
வாழ்த்து பொது - திருப்பாசுரம் - கௌசிகம்
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே. 3.54.1
 
திருச்சிற்றம்பலம் 
 

1 comment:

  1. மிகுந்த பயனுகந்தது ஐயா, தங்கள் திருவடி வணங்குகிறேன்

    ReplyDelete