கன்னியர் எழுவர் (கன்னிமார்) - அருச்சனை
1. முனி கன்னிகை
ஓம் விண்ணின் ஆற்றல் வித்தகி போற்றி
ஓம் கண்ணின் மணியே கலையே போற்றி
ஓம் நிறைமதி நிறத்து ஒருமதி போற்றி,
ஓம் பொறைமதி புண்ணியம் புரப்போய் போற்றி
ஓம் காமரு அடியால் காப்போய் போற்றி
ஓம் தாமரை ஏந்தும் தாயே போற்றி.
2.தேவ கன்னிகை
ஓம் இன்பச் சுவர்க்கம் ஈவோய் போற்றி
ஓம் துன்பம் நீக்கும் கன்னியே போற்றி
ஓம் மின்னல் நிறத்து அன்னை போற்றி
ஓம் மின்னல் மழையாய் மிளிர்வோய் போற்றி
ஓம் நற்பதம் தந்திடும் நற்கன்னி போற்றித்
ஓம் கற்பக மலரேந்து சொற்பதத்தாய் போற்றி.
3.தாமரைக் கன்னிகை
ஓம் நாகலோகத்து நல்லாற்றலே போற்றி
ஓம் வேகம் நீக்கும் வேல்விழி போற்றி
ஓம் வெண்மை நிறத்துத் தண்ணருள் போற்றி
ஓம் உண்மை உணர்த்தும் உயர்கன்னி போற்றி
ஓம் வாழ வரமருள் வாய்மையே போற்றி
ஓம் வேளாண்மைத் தெய்வமாய் விளங்குவாய் போற்றி
ஓம் தாழம்பூ ஏந்தும் தக்கோய் போற்றி.
.
4. சிந்து கன்னிகை (நீர்க் கன்னிகை)
ஓம் கடலின் ஆற்றலே கன்னியே போற்றி
ஒம் உடற்பிணி நீக்கும் உத்தமி போற்றி
ஓம் நீலமணி நிறத்து வாலிழை போற்றி
ஓம் ஓலமிடு வார்க்கு ஓடிவருவாய் போற்றி
ஓம் நெருங்கு வளமீயும் நேரிழையாய் போற்றி
ஒம் கருங்கு வளை கையிலேந்தும் கன்னியே போற்றி.
5.மலைக் கன்னிகை
ஓம் குன்றின் ஆற்றலாய் நின்றாய் போற்றி
ஓம் உயர்ந்த நிலையின் உத்தமி போற்றி
ஓம் பவள நிறத்துப் பாவாய் போற்றி
ஓம் காவியுடை யணியும் கன்னியே போற்றி
ஓம் வேண்டும் வரமீயும் வித்தகி போற்றி
ஓம் செழுங்கழுநீர் ஏந்தும் செல்வி போற்றி,
!
6.வன கன்னிகை
ஓம் நாட்டுக்கு வளம்தரும் நாயகியே போற்றி
ஓம் காட்டுக்குத் தெய்வமாம் கன்னியே போற்றி
ஓம் பச்சை நீல இச்சையே போற்றி
ஓம் சரம் கொள் வரமீயும் உத்தமி போற்றி
ஓம் மரங்களை வளர்க்கும் மாகன்னி போற்றி
ஓம் மல்லிகை ஏந்தும் மலர்க்கொடி போற்றி.
7.சுமதி கன்னிகை
ஓம் மன்னிய நிலத்துக் கன்னியே போற்றி
ஓம் நிலமெனத் தாங்கும் நிர்த்தகி போற்றி
ஒம் மஞ்சள் பெண்மைக் கஞ்சுகி போற்றி
ஓம் வெண்மை ஆடை வித்தகி போற்றி
ஓம் தூய்மை காட்டும் தாயே போற்றி
ஓம் செவ்வந்தி ஏந்தும் செல்வியே போற்றி,
888888 -
உன்னி எழுவராய் உடனமர்ந்து கொங்கில்
முன்னி அருள்செய்து முழுதுலகு காத்து
பன்னி மழைபெய்யப் பாருலகு போற்றிடும்
கன்னியர் அடியிணை கருத்துள் கருதுவாம்.
No comments:
Post a Comment