Tuesday, 12 March 2024

வள்ளலார் தொடர்புடைய செய்திகள்

 திருஅருட்பிரகாச வள்ளலாரின் சில (சீடர்) மற்றும் 
பெரியோர்கள், அன்பர்கள், தொடர்புடையோர்களின் குறிப்புகள்: 

1.அடிமை-க.இராமலிங்கம் (எ) கல்பட்டுஐயா 

2.உபய கலாநிதி பெரும் புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார் 

3.காரணப்பட்டு, வல்லுநர் ச.மு கந்தசாமி 

4.இறுக்கம் இரத்தினம் முதலியார் 

5.புருஷோத்தம் ரெட்டியார் 

6.ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள் 

7.மதுரை ஆதினம் குருமகா சந்நிதானம் ஆறுமுக சுவாமிகள் 

8.அம்பாபுரத்து வேம்பு ஐயர் 

9.காயாறு ஞானசுந்திரம் ஐயர் 

10. கிரியாயோக சாதகர் பண்டார ஆறுமுக ஐயா 

11.அரன்வாயில், வேங்கட் சுப்புப்பிள்ளை 

12. ஆடூர் சபாபதி சிவச்சாரியார் குருக்கள் 

13. மு.அப்பாசாமி செட்டியார் 

14. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்

15. தண்டபாணி சுவாமிகள் 

16. திருச்சிற்றம்பல ஞானிகள் 

17. பாளையம் முத்துசாமி முதலியார் 

18. புதுவை வேலு முதலியார் 

19.சேலம் ஹவுஸ், ஞானிகள் 

20. பண்டார ஆறுமுகம் ஐயா 

21. உத்தரஞான சிதம்பரத்தில் உள்ள சத்திய ஞானசபை காண்ட்ராக்டர், ஆறுமுகம் முதலியார்

22. வேட்டவலம் ஜமீன்தார், அருணாசலம் வசந்த கிருஷ்ண வாணாதராய அப்பாசாமி பண்டாரியார் 

23. மருதவாணன் சுவாமிகள் 

24. புதுவை சதாசிவா செட்டியார் 

25. முத்துகிருஷ்ண பிரம்மம் 

26. மதுரை ஆதினம் சிதம்பரசுவாமிகள் 

27. திருவாடுதுறை ஆதீனம் தாண்டவராயத் தம்பிரான் சுவாமிகள் 

28. தருமபுரி ஆதீனம் வேளூர் கட்டளை விசாரணை உலகநாத தம்பிரான் சுவாமிகள் 

29. கடலூர் ஐயாசாமிப்பிள்ளை 

30. வேலூர் சண்முக பிள்ளை 

31. நற்கருங்குழி வேங்கட ரெட்டியார் 

32. நற்கருங்குழி முத்து நாராயண ரெட்டியார் 

33. வடலூர், நற்கருங்குழி, மேட்டுக்குப்பம் மணியக்காரர்கள் 

34. கடலூர் பேரை தேவநாதன் 

35. புராணிகர் பொன்னேரி, சுந்திரம் பிள்ளை 

36. கூடலூர், சிறவ, துரைசாமி தேசிகர் 

37.மஹா வித்வான் சித்தாந்த ரத்நாகரம் அரன்வாயல் வேங்கசுப்பு பிள்ளை 

38. வேலூர் பத்மநாப முதலியார் 

39. பெங்களூர் இராகவலு நாயக்கர் 

40. திரிசிரபுரம். மா.லோகநாத செட்டியார் 

41. சென்னை, சூளை சோமசுந்தர நாயக்கர் 

42. கா.நமச்சிவாயம் பிள்ளை 

43. சுவாமிகள் சுத்தானந்த முதலியார் 

44.பொன்னம்பாள் அம்மையார் 

45. நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் 

46. கனகசபை பிள்ளை 

47. தேவாரம் முத்துசாமி முதலியார் 

48. திருமழிசை முத்துசாமி முதலியார் 

49. வெங்கட்ராம செட்டியார் 

50. சேலம் பொன்னுசாமி 

51. டிப்டி கலெக்டர் வெங்குபிள்ளை 

52. அஷ்டாவதானம் கல்யாண சுந்தரயதீந்தரர் 

53. மகாகவித்வான் திருமயிலை தனிகாசலம் 

54. கூடலூர், ஐயாசாமி பிள்ளை 

55. வரதராஜ முதலியார் 

56. நற்கருங்குழி பாலு ரெட்டியார் 

57. ஆலப்பாக்கம் நாராயண ரெட்டியார் 

58. வக்கீல் வெங்கடேசய்யர் 

59. நாகப்பட்டினம், சத்ய ஞானாந்த தயதி 

60. தஞ்சை, முத்தமிழ்கவியரசு சண்முகம் பிள்ளை 

61. இந்தமூர் சீனுவாச வரதாச்சாரியார் 

62. அவதானி முத்துசாமிப்பிள்ளை 

63. அருணாச்சல படையாட்சி 

64. வெங்கடாசல படையாட்சி 

மேலும் நெருக்கமுள்ளவர்கள் பலர்... 


வள்ளல்பெருமானாருடைய அணுக்கத்தொண்டர் இராமலிங்க (எ) கல்பட்டு ஐயா அவர்களுடைய அணுக்கத் தொண்டர்கள்: 

1.சுப்புராய பரதேசி 

2.நெல்லூர் ஐயர் 

2.கட்டுமுத்துப் பாளையம் நாராயண ரெட்டியார் 


சம காலப்புலவர்கள்: 

1.மகாவித்வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் (1792-1871) 

2.திரிசரபுரம் திருச்சி மகாவித்துவான் மீனாட்சி சுந்திரம் பிள்ளையவர்கள் (1815-1876) 

3. ஆறுமுக நாவலர் (1822-1879) 

4. மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை (1826-1889) 

5.பூவை அட்டாவதானம் கலியாணசுந்தரயதீந்திரர் (1854-1918) 

6.மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியார் (1918) 

7.காஞ்சி காமகோடி பீட ஸ்ரீ சங்கராச்சாரியர் சுவாமிகள் 

8. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) 

9. புரை அட்டாவதானம் சபாபதிமுதலியார் (1886) 

10. கேரளா, ஸ்ரீ நாராயணகுரு (1855-1928) 


வள்ளலார் சென்று 274 சிவஸ்தலங்கள் மற்றும் திருஅருட்பா பாடல்கள் பெற்று வந்த திருத்தலங்கள் 

1.வருவிக்க உற்ற வள்ளல் இடம்-திருமருதூர் 

2. சிதம்பரம், தில்லை நடராஜர் கோவில் 

3.சென்னை, கந்தகோட்டம் கந்தசாமிக்கோவில் 

4. சென்னை, திருவொற்றியூர் 

5. தம்பிப்பேட்டை, சிவயோகி ஜீவசமாதி 

6. சென்னை, திருமுல்லைவாயில் கோவில் 

7.திருத்தணிகை முருகன் கோவில் 

8.சென்னை, திருவலிதாயம் முருகன் கோவில் 

9. புள்ளிருக்கு வேளூர் 

10. திருவாரூர் 

11. திருஎவ்வுளூர் 

12. திருக்கண்ணமங்கை 

13.திருவண்ணாமலை 

14. திருமதுகுன்றம் (குமரதேவி) 

15. திருவதிகை வீரட்டானம் 

16. குறிஞ்சிப்பாடி சிங்கபுரி முருகன் கோவில் 

17. விருத்தாசலம், பழமலைநாதர் கோவில் 

18.சீர்காழி 

19. மதுரை 

20. வைத்தீஸ்வரன் கோவில் 

21.நற்கருங்குழி, சித்திவினாயகர் கோவில் 

22. வடலூர் தருமச்சாலை 

23. வடலூர் ஞானசபை 

24. தண்ணீர் பந்தல் மாமரத்தடி, நீர் ஓடை 

25. சித்திவளாக திருமாளிகை மேட்டுக்குப்பம் 


வள்ளலார் வழி : காரணப்பட்டு ச.மு கந்தசாமி ஐயா அருள் வரலாறு

 காரணப்பட்டு ச.மு கந்தசாமி ஐயா அருள் வரலாறு 

1.நினக்கடிமை 

கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளால் 
வெள்ளைத்தை எல்லாம் மிகவுண்டேன்-உள்ளத்தே 
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குகின்ற 
வாணா நினக்கடிமை வாய்த்து 
-ஆனந்த அனுபவம் திருவருட்பா-6 

2.அருட்பணி 

திசையெலாம் சென்று திருவருட் பாவை 
இசையெலாம் பெய்தே இசைத்திசைத் திருத்த 
பசையெலாம் ஆனக் காரணப் பட்டார் 
அசைவிலா நெஞ்சும் அசைத்திடும் பணிந்தே 
-வாள்ஒளி அமுத காவியம். 

"எப்பாரும் எப்பதமும் 'எங்கணும்நான் சென்றே எந்தை நினதருட்புகழை இயம்பியிடல் வேண்டும் "
என்ற வள்ளற்பெருமானின் இலக்கிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ச.மு-கந்தசாமிப்பிள்ளை. வள்ளலார் புகழ்பாடும் இந்த உத்தியோகத்தை இவருக்குப் பெருமானே உவந்து கொடுத்தருளினார் என்றால் இவரின் உணர்வினையும் உயர்வினையும் என்னென்று வைப்பது; ஆம் இவருக்கு வந்த பிணியால் இவருக்குத் தந்த பணி இது. 

3.பிறப்பும் சிறப்பும்: 

கந்தசாமியார் கடலூர் வட்டத்தில் உள்ள "காரணப்பட்டு” என்னும் ஊரில் 1836 இல் பிறந்தார். இவரின் பாட்டனார் சந்திரசேகரனார் பெருஞ்செல்வந்தர். அறுபது காணி நிலத்துக்குச் சொந்தக்காரரும் கூட கந்தசாமியின் தந்தையார் முத்துசாமி. இவர் கணக்கு வேளை பார்த்து வந்தார். இவரின் துணைவியார் தயிலம்மாள். 

4.படிப்பும் பணியும்: 

இளம் வயதில் இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எண்ணறக் கற்றவர். எழுத்தற வாசித்தவர். கணக்கு வேலை பார்ப்பதற்கு உரிய படிப்பும் படித்திருந்ததினால் புதுவை மாநிலத்தில் "பாகூர்" என்னும் ஊரில் கணக்கு வேலை கிடைத்தது. அதனை ஒழுங்குறச் செய்து கொண்டே மேன்மேலும் படித்தார். அதனால் பின்னர் புதுச்சேரியில் உள்ள சாரம் என்னும் பகுதியில் சுங்கச் சாவடியில் வட்டாட்சியர் பணியினை ஏற்றார். பணியினைத் திறம்பட ஆற்றினார். 

5.மனைவியும் மகளும்: 

மணப்பருவம் வந்துற்றது. இல்லறப்படுத்தி மகிழ்வுற எண்ணிணார். தக்கப் பெண் அணங்கினைத் தேடினார். கந்தசாமிக்குச் சீர்காழியிலிருந்து "தங்கம்" என்ற பெண்ணைப் பார்த்துப் பேசி நல்வாழ்க்கை துணைவி ஆக்கினார். அவரும் அவரோடு இணங்கி நல்லறப்பாங்கில் ஒழுகினார். அதன் பயனாக பெண் மகவு பிறந்தது. 'ஜானகி" என்று பெயர் இட்டுச் செல்லமாக வளர்த்து வந்தார். 


கந்தசாமியார் பெற்ற கல்வியறிவோடு ஞான அறிவும் நிரம்ப பெற்றவர். சைவ ஆகம சித்தாந்த நூல்களை எல்லாம் முறையாக கற்றவர் சிவபூசை நாள் தவறாமல் நியமப்படி ஒழுகி செய்து வந்தார் செபதபம் செய்தார். 

6.பண்ணை வேலையில் ஆர்வம்: 

வழிவழியாக உழவுத்தொழில் குடும்பம் ஆனதால் அதன் வேலைகளிலும் ஆர்வம் குன்றாமல் செயற்பட்டார். உரிய காலத்தில் பயிர் செய்து பயன்பெறுவதிலும் கவனம் செலுத்தினார். வருவாய் ஈட்டுவதிலும் மற்றவர்க்குக் கொடுத்து மகிழ்வதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பண்ணையில் வேலை செய்யும் ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டு தாராளமாக உதவி செய்து வந்தார். 

7.பலரோடு தொடர்பு

கல்வியறிவில் சிறந்த சான்றோர்கள் பலரும் அவரை நாடி வந்து பழகினார். அவரும் பலரைநாடிச் சென்று நட்பு கொண்டிருந்தார். உலகியல் வல்லரோடும், அருளியல் நல்லவரோடும் அவருக்கு இடையறாத தொடர்பு இருந்து கொண்டிருந்தது. அதனால் ஊராரோடும், அடுத்த அயலாரோடும் அவருக்கு நெருக்கமான அன்பும் தொடர்பும் இருந்தது. 

8.மயக்கமும் தயக்கமும்: 

இவ்வாறு இருக்கும் நாளில் இவருக்கு பித்தம் அதிகரித்து தலை சுற்றலும் மெய்ந்நடுக்கமும் ஏற்ப்பட்டது. தலை ஆட்டமும் உடல் ஆட்டமும் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்த வேண்டி விரும்பி நிரம்பப் பொருட் செலவு செய்தார். நரம்பிய கோளாறு என்று குறிப்பிட்டனர். அதைச் சரி செய்ய வல்ல மருத்துவர்களை நாடினார். அவர்கள் சொன்ன மருந்துகளை எல்லலாம் உண்டார். தடவச் சொன்னவற்றை எல்லாம் தடவிப் பார்த்தார். 

ஒருவர் அல்லாமல் பலரையும் நாடிப் பார்த்தார். எவராலும் அந்நோயினை நிறுத்த இயலவில்லை. செய்வதறியாமல் திகைத்து எதுவும் செய்ய இயலாதொரு தயக்கமும் அவருக்கு ஏற்பட்டது. எண்ணாததெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினார். ஏன் தனக்கு இந்த நிலை விளங்காமல் மயங்கினார். 

9.நம்பிக்கை மொழிகள்: 

ஒரு நாள் இவர் வீட்டிற்குப் பெரியவர் ஒருவர் வந்தார். இவர் நிலை கண்டு வினவினார். இவர் தமக்குள்ள நோயின் தன்மை எடுத்துரைத்தார். என்னென்ன செய்தார்? யார் யாரைப் பார்த்த என்னென்ன செய்தனர் என்பதை விளக்கமாக சொன்னார். அது கேட்ட அப்பெரியார் வடலூரில் வள்ளற்பெருமான் இருப்பது பற்றிய அவர் பலருக்கு பல்வேறு பரோபகாரங்கள் செய்து கொண்டிருப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். அவர்பால் சென்றால் இவ்வுடல் நடுக்கமும், தலை ஆட்டமும் மாறும்; நிற்கும்; உடன் குணமாகும் எனவும் மொழிந்தார். அம்மொழிகள் அவருக்குப் பசித்தவனுக்கு பாற்சோறு வாய்த்தது போல் இருந்தது. உடனே அவர்பால் சென்று நலம் பெற எழுந்தார். 

10.வள்ளைலை நோக்கிப் பயணம்: 

தானமும் தர்மமும் தக்கவார்க்குத் தக்கபடி செய்யும் இயற் பண்புகள் வாய்க்கப் பெற்ற காரணப்பட்டுக் கணக்குப் பிள்ளை வீட்டு மாட்டு வண்டி மேட்டுக்குப்பம் நோக்கிப் பயணப்பட்டது சோறாக்கும் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், எல்லாம் வேண்டியவாறு எடுத்துக் கொண்டனர். தருமச்சாலைக்குச் சென்று நின்றது வண்டி. பொருள்களை இறக்கிவிட்டு மேட்டுக்குப்பம் வழிபிடித்து மீண்டு புறப்பட்டது வண்டி .

11.பெருமான் நோக்கும் பிணியின் போக்கும் 

அண்டகோடிகளேல்லாம் விரும்பி அருகில் சென்று வணங் தக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராம் வள்ளலைக் கண்டிட்டார் 
கந்தசாமியார் சிந்தை தெளிந்து கண்ணீர் சிந்திட்டார். கைகள் தலை மீது குவிய கால்கள் தள்ளாட அடியற்ற மரம்போல் வள்ளல் திருவடிகளில் விழுந்து வணங்கினார். 

பெருமான் திருநீறு தந்திட்டார். உடல்பெலாம் பூசப்பணித்திட்டார். அவ்வாறே கந்தசாமியார் திருநீற்றைப் பெற்று உடல்பெலாம் பூசினார். என்ன வியப்பு! அவருக்கு அல்லல் தந்து வந்த மயக்கம் மாய்தது. உடல் நடுக்கமும் தலை சுற்றலும் ஓடியது. 

இத்தகு அருஞ்செயல் புரிந்த பெருங்கருணை நிதியாகிய வள்ளபெருமானை வாயார வாழ்த்தி வணங்கி நின்றார் கந்தசாமி. நஞ்சாரப் புகழ்ந்து விழி நீர் சிந்தியது. அவர் நிலை கண்டு அப்போது நம்பெருமான் "உமக்குத் தக்க உத்தியோகம் தருவோம்" என்று உரைத்து வெளீயீடு கண்டிருந்த திருவருட்பா திருமுறைகள் படி ஒன்றினைத் தந்தருளினார். உடன் ஊர் திரும்பிச் செல்லவும் உத்திரவு தந்தார். 

12.துறவும் உறவும்: 

கந்தசாமியார் உளம் மகிழ்ந்தது உடல் தெளிந்து ஊர் திரும்பினார். ஆனால் அங்கு சென்ற அவர் உள்ளம் திரும்பவில்லை. திருஅருட்பா சிந்தை கவர்ந்தது. ஓத ஓத உள்ளம் குழைந்தது. வள்ளற் பெருமான் முன் இருந்து பாடுவதை போல் உணர்வு இருந்தது. நாட்டமெல்லாம் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை முன் இன்றது. வள்ளல்பால் சித்திவளாகத் திருமாளிகை முன் நின்றது. வள்ளல்பால் சென்றது இவர் எண்ணமெல்லாம் பெருமானையே பலம் வந்து கொண்டிருந்தது. 

எனவே இவர் துறவு பூண்டு குடும்பத்தை விட்டு நீங்கி மேட்டுக்குப்பத்திற்கு வரத்துணிந்தார். இதுப்பற்றி குடும்பத்தில் தெரிவித்தார். குடும்பத்தார் பெரிதும் கலங்கினர். இவர் செல்வதற்கு முன்னர் குடும்பத்தினர் மேட்டுக்குப்பம் சென்றனர். வள்ளற்பெருமானிடம் கந்தசாமியார் நிலை குறித்து முறையிட்டனர். 

பெருமான் "உலகம் பிரமிக்கத் துறவு பூண வேணாங்காணும்; அருந்தல், பொருந்தல் முதலிய ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளாகிய இல்லறத்தார் எல்லாம், அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளுக்கு நூற்றுக்கு நூறு பங்கு முழுவதும் உரியவர் ஆவார்கள் இது பொய்யன்று" என்று கூறியருளிக் குடும்பத்தில் சேர்ந்து வாழ வழிகாட்டினார். பெருமான் வாக்கினைத் தலைமேற் கொண்டு சென்றிட்டார் கந்தசாமியார். அவ்வாறே காரணப்பட்டுக்குச் சென்று குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். பெருமான் நினைவாகவே இருந்து வந்தார். இவர் உள்ளமாகிய இரும்பு பெருமானாகிய காந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. சில நாட்கள் சென்றன இவரின் துணைவியர் தங்கம் உயிர் நீத்தார். 

13.வடலூரில் தங்கல்: 

அவர் மனம் எல்லாம் வல்ல வள்ளற் பெருமானுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பியது . அதனால் வீட்டாரிடம் சொல்லிக் கொண்டு அவர் தம் ஒரே மகள் ஜானகியையும், அழைத்தக் கொண்டு வடலூர் வந்து சேர்ந்தார். ஒரு குடில் அமைத்தக் கொண்டு அதில் தங்கினார். சங்கப்பணிகளிலும் சாலைப்பணிகளிலும் அன்பர்களோடு சேர்ந்து ஈடுபட்டார். மேட்டுக்குப்பத்தில் பெருமானைக் கண்டு வணங்கி வழிபட்டு நியமங்களைக் கடைப்பிடித்தார். 

14.திருவடிவப் புகழ்ச்சி: 

அன்று சித்திவளாகத்தில் வழிபாடு நடந்தது. பெருமான் முன்னிலையில் அன்பர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். கந்தசாமியார் இசையோடு திருவடிப்புகழ்ச்சியைப் பாடினார். வள்ளற் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டு ஒழுகியதால் நெகிழ்ச்சியோடு அப்பாடல் ஒலித்தது. இசையறிவு தனக்கு மிகுதியும் உள்ளது என்னும் கருத்து அவருள் பதிந்திருந்தது அதனை உணர்ந்த வள்ளல் அத்திருவடி புகழ்ச்சியைப் பல இசைகளில் பாடிக்காட்டி மகிழ்வித்தார். அது கண்டுதிகைத்தார் கந்தசாமி. இப்படியெல்லாம் பாடமுடியுமா என் வியந்தார். 

15.சன்மார்க்கத்தில் இசைக்கருவிகள்: 

இசைஞானம் மற்றவர்களைவிடக் கூடுதலாகவே கந்தசாமியாரிடம் இருந்தது. அருட்பாவைப் பாடப் பாட அது மிகுந்த பல இராகங்களில் பல உருப்படிகளில் அது வெளிப்பட்டது. பாட்டுக் ஏற்றபடி கருவிகள் கொண்டு பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கு என்று நம்பினார். நண்பர்கள் துணை கொண்டு பலகருவிகள் இசைத்துக் கொண்டு பாடவும் முனைந்தார். அதுகண்டு வள்ளற் பெருமான் கந்தசாமியாரைத் தன் முன்னிலைக்கு அழைத்து  மனங்கசிந்துருகவே பாடல் பாடவேண்டும் இசைக்கருவிகள் கொண்டு பாடுவதால் மனம் உருகாது, உணர்ச்சி பெருகாது, சன்மார்க்கத்திற் இசைக்கருவிகள் தேவையில்லை இல்லாமலே மனம் உருக பாடி வழிபடுங்கள் என்று விளக்கியருளினார். எவ்வெப்பாடல்களை எப்படி எப்படிப் பாடவேண்டும் என்றும் சொன்னார். 

இறைவனின் நிறைபுகழையும் நம் குறை இழிவினையும் வகைப்படுத்திக் தெளிவாக பாட வேண்டும் என்பதைய உணர்த்திட்டார். 

16.சமரச பஜனை: 

சமய மதங்களுக்கிடையே சமரசம் காண்பதே சன்மார்க்கம். எனவே வழிபாடு சமரசமாகவே இருக்க வேண்டும் அல்லவா? கந்தசாமியார் சமரச பஜனை பாடவே விரும்பினார். பொது நோக்கம் அப்பொழுதுதான் உண்டாகும். எல்லோரும் விரும்புகின்ற பாடலையே பாடினார், அதற்குச் சமரச பஜனை என்று பெயரிட்டார் அன்பர்கள் பலரையும் அச்சமரச பஜனை வழிபாட்டில் ஈடுபடுமாறு அழைத்தார். உணர்ச்சி பொங்கப்பாடிப் பரவினார், பாடுகையில் அவரும் உருகினார். பிறரையும் உருகச் செய்தார். 

17.வழிபாட்டுப் பொறுப்பு: 

பெருமான் திருக்காப்பிட்டுக் கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, அன்பர்களையெல்லாம் அழைத்தார், 
சாலைப் பொறுப்பை கல்பட்டு ஐயா பார்த்துக்கொள்ள வேண்டும். சங்கப்பொறுப்பைத் தொழுவூரார் பார்த்துக்கொள்ள வேண்டும், 
வழிபாட்டு பொறுப்பை கந்தசாமியார் பார்த்துக் கொள்ள வேண்டும், சித்திவளாக விளக்குப்பார்க்கும் பொறுப்பை சேலத்து ஞானாம்பாள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டருளினார். 

கந்தசாமியாருக்கு வழங்கிய பொறுப்பை மிக ஒழுங்காக நடத்தி வந்தார். அவரும் சாலையில் செய்யும் வழிபாடு எப்படி செய்வது, வலம் வருங்கால் எங்கெங்கு நின்று என்னென்னப் பாடல்கள் வேண்டும், என்றெல்லாம் வகுத்துக் கொண்டு அன்பர்களோடு சேர்ந்து சமரச பஜனையாக அவ்வழிபாட்டை நடத்தி வந்தார். 

18.தமிழகப் பயணம்: 

வள்ளற் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்து எல்லா உயிர்களிலும் புகுந்துகொண்டருளினார். இவரோ தமிழக முழுவதும் சன்மார்க்க சங்கங்களை அன்பர்களை பல ஊர்களிலும் நிறுவினார். கொடியேற்றி வைத்து கொள்கைகளை விளக்கினார். ஒவ்வோர் ஊரிலும் சமரச பஜனை செய்தார். தன் மகள் ஜானகியையும் பஜனைக் குழுவில் இருந்து கொண்டு பாடச் செய்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் சங்கங்கள் தோன்றின வழிபாடுகள் தோன்றின. அன்னதான அமைப்புகள் தோன்றின வடலூரோடு அனைவரும் தொடர்பு கொண்டு இருக்கவும் செய்தனர். சாலைக்குப் பொருள்கள் கொண்டு வந்து தந்தனர். ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்பட்டது. 

19.கண்நோய் நீக்கமும் பிரபந்தங்கள் பாட உத்தரவும்: 

காரணப்பட்டு கந்தசாமிபிள்ளை கண்வலியால் துன்பப்பட்டார். வடலூர் செல்லும்படி கனவில் வள்ளல் உத்தரவானது. அங்ஙனமே செல்ல ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணுக்கு கட்டும்படி ஓர் அன்பர் கூறினார். அங்ஙனமே செய்ய கண்நோய் அகன்றது திருக்கோயிலூரில் கந்தசாமியார் தங்கியிருந்தபோது கனவில் வள்ளற் பெருமான் தோன்றி அந்தாதி, நாமாவளி, கண்ணி முதலிய பிரபந்தங்கள் பாடும் படியும் உத்தரவாகியது. 

20.வரலாற்று நிகழ்வுகளைத் திரட்டுதல்: 

தொழுவூரார் கல்பட்டு ஐயா, முதலிய பெருமான் மாணவர்களிடம் நெருங்கிப் பழகிய புலவர்கள், சான்றோர்கள் அன்பர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் வள்ளற்பெருமால் பற்றிய நிகழ்வுகளை செய்திகளைக் குறித்து அறிந்து ஆராய்ந்தார் குறித்துக்கொண்டார். 

21.சரித்திரக் கீர்த்தனை: 

தமக்குத் தெரிந்த பிறரால் தெரிந்து கொண்ட நிகழ்வுகளையெல்லாம் தொகுத்தார். அதனைக் கீர்த்தனைகளாக பாடினார். "ஸ்ரீமத் திருவருட்பிராகச வள்ளலார் திவ்ய சரித்திர கீர்த்தனை” என்று பெயரிட்டார். இதல் 261 கண்ணிகள் உள்ளன இது ஒரு புதிய முயற்சி. இத்தகு இசைப்பாடல்கள் இதுகாறும் தமிழில் எழுதப் பெறவில்லை. இவர்தான் எழுதி ஊர்கள் தோறும் இசையோடு பாடி அன்பர்களுக்கு பெருமான் வரலாற்றினை வழங்கினார். அதை தொடர்ந்து பிள்ளை பெருமான் தோன்றாத் துணையாய் செய்தருளும் திருவிளையாடல் 24 கண்ணிகளாய்ப் பாடி பரவசப்படுத்தினார். 

22.சற்குரு வெண்பா அந்தாதி: 
தொடர்ந்து 1008 வெண்பாக்கள் பாடி வாழ்த்தும் பாடியுள்ளார். இதற்கு முன் நீண்ட நூல் தமிழில் இதுகாறும் உண்டாகவில்லை இவர்தான் பாடியுள்ளார். 
மற்றவை: 
மேலும் குருநேச வெண்பா 221 
கொலை மறுத்தல் 65 
அருட்பிரகாசர் அற்புத அந்தாதி 104, 
வடற்சிற்சபை மாலை 29 
அருட்பிரகாச அற்புத மாலை32, 
திருவருட்பிரகாசர் வருகை பல்லவி நன்னிமித்தம் பராவல் 96, 
அருட்பிரகாச வள்ளலார் விபூதிபிராசாத மகிமை 43, 
கிகி(ளி)க்கண்ணிகள் 65, 
இயற்கை உண்மை 224 
புலம்பற்கண்ணி 266, 
ஆக 18 நூல்கள் பெருமான் மீது பாடி மகிழ்ந்துள்ளார். 

23.திருவருட்பா வெளியீடு: 

அருட்பாக்களை அழகுறபாடி ஆழங் கால்கண்டவர். அதனால் பதிப்பித்து வெளியிட விரும்பினார். ஆறுதிருமுறைகளையும், உரைநடைகளையும், ஒரே நூலாக ஆக்கி அச்சிட்டார், தீ.நா முத்தையா சட்டியார் பேருதவியால் 1924ம் ஆண்டு வெளியிட்டார். முன்பே அவர் பாடிய பிரபந்தத் திரட்டும் அவர் பார்வையில் 1923 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூல்கள் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார். 

24.நிறைவு: 

இளம் வயதிலேயே பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு அறுபது பூண்டுகளுக்கு மேலாக் திருவருட்பாத் தேனின்பத்தை துய்த்து அதனை பலருக்கும் ஊட்டி உவகையுறச் செய்த இவர் 2-12-1924 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். காரணப்பட்டில் இவர் உடல் அடக்கக் கல்லறை உள்ளது. 

Friday, 8 March 2024

வள்ளலார் வழி : தொழுவூர் வேலாயுதனார் அருள் வரலாறு

தொழுவூர் வேலாயுதனார் திருவருட்பெருமை 


பொறிவே றின்றிநினை-நிதம்-போற்றும் புனிதருளே 
குருவே றின்றி நின்ற-பெருந்-சோதி கொழுஞ்சுடரே 
செறிவே தங்களெ லாம்-உரை-செய்ய நிறைந்திடும் பேர் 
செறிவே தங்களெலாம்-உரை-செய்ய நிறைந்திடும் பேர் 
அறிவே தந்தனையே-அரு-ளாரமு தந்தனையே! 
-அருள் ஆமுதப்பேறுத்; திருவருட்பா-6 

தெரிந்து வணங்குவோம் 
அருந்தமிழ் வள்ளல் அருளிய அருட்பா 
பொருள் தெரிந்துவக்கும் பொருந்திடும் விதத்தில் 
அருந்தமு தாக்கி அளித்ததொழுவூரார் 
சிறந்தநல் லுள்ளம் தெரிந்து வணங்குநீவாம். 
-வான்ஒளி அமுதக் காவியம் 

1.நம்பிள்ளை நமக்குக் கிடைத்தாய்: 

1849 ஆம் ஆண்டில் ஒரு நாள் ஓர் இளைஞர் வள்ளற்பெருமானை வணங்கி வாழ்த்துப் பெற சென்றிட்டார். சென்னையில் ஏழு கிணற்றுக்கும் அடுத்த வீராசாமி பிள்ளைத் தெரு வீட்டு மாடிக்கு நுழைந்திட்டார். இளங்காலை எழுந்தேறு இளஞ்சூரியன் ஆங்கிருக்கக் கண்டிட்டார். அவர் முன் விழுந்து வணங்கி, எழுந்து ஓலைச்சுவடி ஒன்றினை அவர்தம் அருள் திருக்கைகளில் தந்திட்டார். 
"அண்ணலே! பழஞ்சுவடியில் இருந்து எடுத்து எழுதிய சங்க பாடல்கள் இவை. கண்டருளல் வேண்டும்" என்று கனிமொழி உதிர்த்திட்டார். "ஆகட்டும் பார்க்கலாம்" என்று மொழிந்தருளினார். புன்முறுவலோடு அவ்வேடுகளை ஒவ்வொன்றாய்ப் புரட்டி உணர்ந்திட்டார் வள்ளலும் 1 படித்து மெல்ல முடித்து அவ்விளைஞர் முகத்தினைப் பார்த்திட்டார். "இது சங்கத்துப் பாடல்கள் அல்ல இருப்பின் பிழைகள் இரா. யாரோ பொருள் இலக்கணம் தேர கற்றுக்குட்டிப் பாடல்கள் இவை" என்று மதிப்புரை வழங்கிட்டார். அது கேட்டதும் அடியற்ற மரம்போல் வள்ளல் திருவடிகளில் விழுந்தார் அவ்விளைஞர். 
"மன்னிக்கவேண்டும், அடியேன் எழுதியவை இவை சங்கப்பாட்டென்றதைப் பொருத்தருளல் வேண்டும்" என்று கண்ணி விட்டு கனிந்து அழுது நின்றிட்டார். 
"சிலபிழைகள் இருப்பினும் அருமையான பாடல்கள் தாட தாழ்வன்று, நம்பிள்ளை நமக்கு கிடைத்தாய். புதியன் அல்லன் பழையனே "என்று புன்முறுவல் பூத்த முகத்தினராய் தொட்டு 
அவ்விளைஞரைத் தூக்கி நிறுத்தி வாழ்திட்டார் நம்பெருமான்! 

2.தொழுவூர் வேலாயுதனார்: 

அவ்விளைஞர்தான் தொழுவூர் வேலாயுதனார். 19-8-1832 இல் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் உள்ள தொழுவூரைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த, செங்கல்வராயர்- ஏலவார்குழலி பெற்றோருக்கு பிறந்தவர். உரிய பருவத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். தக்காரிடம் படிக்க வைக்கப் பெற்றார். தமிழ், வடமொழி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளை முறையாகக் கற்றார். தந்தையார் வணிகம் செய்து கொண்டிருந்தபோது ஆந்திர நாட்டில் பூடி என்னும் ஊரில் இராசபிளவை நோயால் காலமானார். அதனால் குடும்பப் பொறுப்பைப் பார்க்கும் நிலைக்கு ஆளானார். அதனால் கல்வி தடைப்பட்டது ஆயினும் படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள விருப்பம் குறைவுபடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். அந்த இளம் பருவத்தில்தான் வள்ளல் பால் வந்து சேர்ந்திட்டார் தொழுவூரார். அவரைத் தன் தலைமை மாணாக்கராக்கி மகிழ்ந்திட்டார் நம்பெருமான். 

3.தந்தையறிவு மகனறிவு: 

ஆர்வம் பொங்கி வழியும் நன்மாணவராக அவரும் விளங்கிட்டார். தமிழ் வடமொழிகளில் இருக்கும் கலை இலக்கிய இலக்கணங்களை எல்லாம் அவர் கற்க முறையாகச் செய்திட்டார். ஆய கலைகள் அனைத்திலும் சிறந்து விளங்கும்படி கற்பித்தருளினார். ஒரு கருத்தை ஒட்டிப் பேசுதல், வெட்டிப் பேசுதல் முதலிய பேச்சுக் கலையிலும் சிறந்து விளங்கச் செய்திட்டார். 
தந்தை அறிவு மகனறிவு என்று அவரே பாராட்டும் படியாகப் வள்ளலிடம் இருந்து கற்றுக் கொண்டார் வேலாயுதரும். அப்பொழுது திருஒற்றியம்பதியில் அளவற்ற ஈடுபாடு கொண்டு வள்ளல் பாடியும் பணிந்தும் இருந்தது கண்டு தொழுவூராரும் சென்று வணங்கி மகிழ்ந்திருந்தார். சென்னை லிங்கிச் செட்டி தெரு சோமு செட்டியார் வீட்டுச் சொற் பொழுவிலும் தொடர்ந்து வள்ளல் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். 

4.சங்கரர் ஐயம் தீர்த்தல்: 

அக்காலத்தில் இருந்த காஞ்சிக் காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியர் சென்னை வந்திருந்தார். "நெடுநாளாக வடமொழி நூல் ஒன்றில் உள்ள ஐயத்தை அகற்ற வல்லவர் நமக்கு இச்சென்னை மாநகரில் எவரேனும் உளரோ?" என்று வினவினார். அன்பர்கள் அவரிடம் வள்ளற்பெருமான் உள்ளார் என்றனர். 

அஃதறிந்து பெருமான் தம் மாணவரோடு சங்கரர் இருந்து இடத்திற்குச் சென்றனர். வரவேற்று முகமன் கூறி அமர்ந்தனர். புன்முறுவலோடு சங்கரரும் தமக்கு ஐயமுள்ள வடமொழி நூற்பகுதியைச் சுட்டிக்காட்டி வள்ளலிடம் கொடுத்திட்டார். அவரும் வாங்கிப் படித்து உணர்ந்து கொண்டு தன் அருகில் இருந்து மாணவர் தொழுவூரார் கையளித்து விளக்கம் கூறும்படிப் பணித்தார். அவரும் மிகத்தெளிவாக அப்பகுதியின் பொருளை எடுத்துரைத்தார். அது கேட்டு ஐயம் நீங்கி அகம் மகிழ்ந்தார் சங்கரர் வடமொழி ஐயத்தை நீக்கும் அளவுக்கு அறிவுடையவராக விளங்கினார் வேலாயுதனாரும். 

5.தொடர்பும் பயணமும்: 

இடைவிடாமல் வள்ளலோடு அந்தக் காலத்தில் தொழுவூரார் இருந்தார். மனுமுறை கண்ட வாசகத்தை உரைநடையில் 1854ல் எழுதியருளினார் நம்பெருமான். ஒழிவிலொடுக்கம், சின்மயதீபிகை தொண்டமண்டல சதகம் ஆகிய மூன்று நூல்களைப் பதிப்பித்தார். அப்பொழுதெல்லாம் பெருமான் பணிகண்டு மகிழ்ந்தார். பல மாணவர்கள் அடுத்து வந்து பெருமானிடம் பாடம் கேட்டனர். அவர்களோடும் நெருங்கி இருந்தார். 1858 ஆம் ஆண்டு சென்னையை விட்டு தென்திசைப் பயணம் செய்தார் நம்பெருமான் அப்பொழுதும் அன்பர்களோடு தொழுவூராரும் உடன் சென்றார். சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், நாகை, திருவாரூர் திருக்கண்ணமங்கை முதலிய ஊர்களில் உள்ளத் திருக்கோயில்களில் வழிபாடு செய்து பாடி சிதம்பரம் மீண்டனர். கருங்குழி மணியக்கார வீட்டில் தங்கவேண்டி நின்றதால் பெருமானை விட்டு அன்பர்கள் சென்னைக்கு திரும்பினர். 

6.மணவாழ்க்கை: 

பெங்களூரில் வாழ்திருந்த கிருட்டிணசாமி என்பவர் தக்கார் வழி அறிந்து கொண்டு வேலாயுதனாரைத் தன் ஒரே மகள் சீரங்கம்மாளைக் கொடுத்து மருமகன் ஆக்கிக்கொண்டார். மகளைப் பிரிய இயலாமல் பெங்களூரிலேயே தங்கவைத்துக் கொண்டார். நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் வேலையும் வாங்கித் தந்தார். எனவே பெங்களூரில் வேலாயுதனார் தங்கி இருந்து வாழ வேண்டியிருந்தது.

7.வள்ளலுடன் இருந்தார்: 

இருப்பினும் பெருமான் தொடர்பில் இருந்து கொண்டிருந்தார். அடிக்கடி சென்று பார்த்து வந்தார். திருமுதுகுன்றம், திருக்கோயிலூர் வேட்டவலம், திருவண்ணாமலை, திருவதிகை ஆகிய தலங்களுக்கு சுற்று பயணம் செய்யுங் காலங்களில் பெருமானுடன் சென்றார். 

சென்னையில் இருக்கும் அன்பர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். பெருமான் அவ்வப்போது அருளும் பாடல்களைத் தொகுத்து வைத்துக் கொண்டு வழிபாடும் செய்து வந்தார். 

1865ல் வள்ளல் பெருமான் நிறுவிய சன்மார்க்க சங்கத்திலும் பங்குகொண்டார். அதனை, கட்டிக் அமைப்பதிலும் முன்நின்றார். கொள்கைகளைப் பரப்புவதிலும், சங்கங்களை பல இடங்களில் நிறுவுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 

8.சென்னை வாழ்க்கை; 

எனவே பெங்களூர் வாழ்க்கையைத் தொடர விரும்பாமல் சென்னைக்கு குடும்பத்தினை கொண்டு வந்தார். பெருமானைத் தொடர்பு கொள்ளவும் அன்பர்களோடு கலந்திருக்கவும் தடைப்படாமல் இருக்கவே அவ்வாறு செய்தார். அவரும் குடும்பத்துக்காக உழைக்க வண்டி இருந்தது. தையற்கடை ஒன்றில் வேலை செய்தார். ஆறு ரூபாய் சம்பளம் கிடைத்தது. அது கொண்டு குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். சன்மார்க்கப் பணிகளிலும் ஈடுபட்டார். 

9.திருஅருட்பா வெளியீடு 

1866-ல் அன்பர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வள்ளல் பாடியருளிய பாடல்களை அச்சிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை வள்ளல் தொழுவூராரிடம் ஒப்படைத்தார். அவர் விருப்பம் போல் வெளியிடலாம் என்றும் உத்தரவிட்டார். 

அதுகாறும் பாடியருளிய அனைத்துப் பாடல்களும் வேலாயுதனாரிடம், வந்து சேர்ந்தது. அவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் கவனமாக படித்தார். சிலவற்றிற்க்கு வள்ளல் தலைப்பிட்டியிருந்தார். சிலவற்றிக்கு இடவில்லை. சில பாடல்களில் வகை குறித்திருந்தார், சிலவற்றிக்கு இடவில்லை. பலவற்றில் இல்லை அவற்றை எல்லாம் நுணுகி ஆராய்ந்து தலைப்பிட்டார். பாடல் வகை குறித்தார். 

பெருமான் பாடி அருளிய அனைத்துப்பாடல்களையும், ஆறு பிரிவுகளில் தொகுக்க விரும்பினார். 

அதன்படி திருவடிபுகழ்ச்சி, விண்ணப்பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், சிவநேசவெண்பா, மகாதேவமாலை, திருவருள்முறையீடு, வடிவுடை மாணிக்கமாலை, இங்கிதமாலை ஆகிய எட்டு நூல்களையும் முதல் பிரிவில் வைத்தார். 
திருஒற்றியூர் பாடல்களை எல்லாம் இரண்டாம் பிரிவில் அடக்கினார். 
ஒற்றியம்பதிப்பில் பாடிய அகத்துறையைச் சார்ந்த பதிகங்களை எல்லாம் மூன்றாவது பிரிவில் வைத்தார். அப்பொழுது பாடியிருந்த சிதம்பரப் பாடல்களையும் நால்வர் பாடல்களையும் நான்காவதில் சேர்த்தார். கணேசர் பதிகங்கள், முருகர் பதிகங்கள், திருத்தணிகை பாடல்கள் அனைத்தும் ஐந்தாவது பிரிவுக்குள் சென்றன.
 பாடிக்கொண்டிருப்பதும், பாடப்போவதும் ஆறாம் பிரிவில் சேரும். 

அடங்கல் ஒன்றினை அமைத்தார். பிரிவுகள் திருமுறை ஆனது. தொகுப்புப் பெயர் திருஅருட்பா ஆனது. இவ்வேற்பாட்டை எல்லாம் வள்ளலிடம் விளக்கிச் சொல்லி இசைவு பெற விரும்பினார். கருங்குழிக்கு வந்தார். பெருமான் பார்வைக்கு வைத்தார். வள்ளலுக்கு பொருத்தமாவே இருந்தது. எனவே ஒப்புக்கொண்டார்.

 "முதல் நான்கு திருமுறைகளை மட்டும் அச்சிடுங்கள். ஐந்தாவது திருமுறையை பிறகு அச்சிடலாம். ஆறாவது திருமுறை அனுபவமாதலான் சன்மார்க்கம் விளங்கும். காலந்தான் வெளியிடவேண்டும். அதனை உத்தரவு தரும் வரையில் வெளியிடக்கூடாது. சென்று வேலையை துவக்குங்கள். வாழ்த்துகள்! "
என்று வள்ளல் திருவாய் மலர்ந்தருளினார். 

உள்ளத்தில் தன்னை நீக்கி நம்பெருமானை இருத்தி வைத்துக்கொண்டு அச்சீட்டுப் பணிகளைத் தொடக்கம் செய்தார். தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை வேலு, இறுக்கம் இரத்தினம் முதலிய அன்பர்கள் பார்த்துக்கொண்டனர். 

பாடல்கள் விளங்கும் வகையில் படித்து எழுதி அச்சுக்கு தரப்பட்டது. எனவே எழுதா எழுத்தில் பாடல்கள் பதிந்தன. அச்சீட்டு படிவங்கள் வரவரத் திருத்தங்கள் செய்து தரப்பட்டன. உடனுக்குடன் செய்ததால் அச்சுப்பணி நிறைவுப்பெற்றது. 

"ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயிரம் பாயிரம் அல்லது பனுவலும் அன்றே" என்பது இலக்கணம். அருட்பாவுக்கு ஒரு முன் வைக்கும் விளக்கம் தேவை என்று அன்பர்கள் கருதினர். விருப்பப்டி ஒன்றை எழுத வேண்டினர். திருவருட்பா வரலாறு என்று ஒன்றினை செய்தார். அன்பர்களிடம் காட்டினார். பெருமான் இசைவுபெ வேண்டும் என்று கருதி தொழுவூரார் உடனடியாக கருங்குழிக்கு வந்தார். வள்ளல் திருமுன் வைத்து வணங்கினார். 63 பாடல்கள் பார்வையிட்டார். திருவருட்பிரகாச வள்ளலார் என்று குறித்திருக்கு. முகப்பேட்டைப் பார்த்தார். 
"திருவருட்பிரகாச வள்ளலார் என்று யாருங்காணும் போடச்சொன்னது?" என்று கடுகடுத்தார். சில நொடிகள் மாறாத பார்வையைத் தொழுவூரார் மேல் வைத்தார். அவர் கைகட்ட வாய்ப்பொத்தி உடல் நடுங்க நின்னு கொண்டிருந்தார். உடனே "திருவருட்பிரகாச வள்ளலார் யார்? என்று தேடிக்கொண்டிருக்கும் 

சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை" என்று கொள்ளாம். தானே! கொள்ளட்டுங்காணும் "என்று புன்முறுவல் பூத்தார். அது கண்டு துயரம் நீங்கினார் தொழுவூரார். 

முற்றும் பார்வையிட்டும் படித்தும் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவராய் தொழுவூராரை நோக்கினார் வள்ளல்! "ஒவ்வொரு பாடலும் 63 பாடலுக்குச் சமங்காணும்” என்று உரைத்தருளி உவகைக்கொண்டாடினார். அதனை அருட்பாவின் இறுதியில் சேர்த்து அச்சிட்டுக்கொள்ள இசைவும் வழங்கினார் பெருமான். அதன் அருமை பெருமைகள் உலகு உள்ள அளவும் நின்று நிலவும் என்பதை அன்பர்கள் உணர்வார்களாக 1867 பிப்ரவரி திங்களில் திருஅருட்பாவை வள்ளற்பெருமான் வெளியிட்டு அன்பர்களுக்கு வழங்கி வாழ்த்துரைத்தார். திருவருட்பாவின் அனைத்து பதிப்புச் சிறப்பும் தொழுவூரார்க்கே உரியது என்பதை நாம் மறந்துவிடலாகாது. ஊரன் அடிகள் வெகுவாக பாராட்டுவதை அவர் எழுதிய நம்பெருமான் வரலாற்றில் அன்பர்கள் கண்டுகொள்ளலாம். 

10.திருக்குறள் பாடம் நடத்துதல்: 

சாலையை நம்பெருமான் தொடங்கினார். பலரும் பசியாறி மகிழ்ந்தனர். அவர்களுக்கு செவியாற நற்செய்தியையும் வழங்கியருள வள்ளல் விரும்பினார். திருக்குறளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்தத் தன் முதன் மாணாக்கர்க்கு கட்டளையிட்டார். உலகிலேயே முதல் முதலில் திருக்குறளைப் பாடமாக நடத்தி மக்களுக்கு உணர்த்தியவர் தொழுவூரார்தான். 

11.வடலூர் வாழ்க்கை:

சாலைப் பணியிலும் ஈடுபட்டார். சங்கப் பணி முழுவதையும் அவரே கவனித்தார். இப்பொழுது குடும்பத்தை வடலூருக்கே கொண்டு வந்தார். குடிலமைத்துக்கொண்டு தங்கினார். தன் வழிபாட்டிலும் பெருமான் திருவருள் பாலிப்பால் சிறந்து விளங்கினார். 

12.கடிதம் எழுதியவர்: 

ஒரு கால் மதுரையிலிருந்து ஒரு கடிதம் பெருமானுக்கு வந்துற்றது. அதில் இலக்கண தேர்ச்சியில்லாதவர் என்று குறிக்கப்பெற்றிருக்கக் கண்டு அன்பர்கள் கொதித்தனர். இலக்கணக் கடிதம் எழுத வேண்டினர். வேண்டா வெறுப்பாக தொடக்கம் செய்து கொடுத்து, தொழுவூராரை எழுதி விடுக்கும்படி பணித்தார். அது கண்டு பொருள் விளங்காமல் கடிதம் எழுதியவர் வள்ளல் திருவடியில் வந்து விழுந்து மன்னிக்க வேண்டினார். அத்தகு அரிய கடிதத்தை எழுதியவர் தொழுவூரார்தான்! 

13.களவுபோன நகை:

வடலூரில் தொழுவூரார் மனைவி சீரங்கம்மாள் நகை இல்லையே என்று வருந்தியது உணர்ந்து நம்பெருமான் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார். சில நாளில் அந்த நகை களவு போய்விட்டது. அது கேட்டு வருந்திய வள்ளல் "நகை களவு போன போது என்ன சொல்லி அழுதார் என்று கேட்டார்" என் நகை போன என்று அழுதார் என்றனர். "சாமி நகை போனதே என்று சொல் இருந்தால் சாமி காத்திருப்பார்" என்று பூடகமாகச் சொல்லி வள்ளல் சிரித்தார். அவர் நகை ஆசை போகச் செய்த திருவிளையாடலே இந்நிகழ்வு? 

14.தொழுவூராரைக் கேளுங்கள்: 

ஒருகால் தொழுவூரார் உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாயின தாங்கமுடியாமல் துன்புற்றார். அப்பொழுது வள்ளல் சித்திவளாகத்தில் இருந்தார். அங்கு சென்று வள்ளல் முன் பாடி பணிந்தார். திருநீறு வழங்கி அப்புண்களில் இட்டுப் பூசச்செய் அத்துன்பத்திலிருந்து அவரைக் காத்தனர் பெருமான். சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டு மேட்டுக்குப்பத்தில் பேருரை ஆற்றின நம்பெருமான் ஆத்ம விசாரணை செய்து கொண்டிருங்கள் என் கூறும் பொழுது தெரியாதவர்கள் தொழுவூராரைக் கேளுங்க மனுஷ்யதரத்தில் அவரும் விளக்குவார் என்று அருளின அதிலிருந்து சன்மார்க்க விளக்கம் உள்ளவராக அவர் இருந்த புலனாகின்றது. திருகாப்பிட்டுக்கொள்ளும் காலம் நெருங்கிய பெருமான் அன்பர்களை அழைத்தார். அவரவருக்கு உரிய பணிகள் ஒதுக்கப்பட்டன. சங்கத்துப் பணி அவருக்கு முன்பே இருந்த தற்பொழுது ஒரு பணியை இட்டனர் வள்ளல். அது அவர் சென்னை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே. வேண்டியதை அவ்வப்போ வழங்குவோம் என்று உறுதி அளித்து செல்லப் பணித்தருளினார்.
 
வடற்பெருவெளியில் இருந்த காலத்து சீரங்கம்மாளும், மகளும் இறந்து போயினர். திருநாகேசுவரன் என்னும் ஒரு மகனோடு! 30-1-1874-ல் சித்திவளாக திருவறையைப் பூட்டியபின் அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை சென்றார் வேலாயுதனார். 

எதிர்பாராமல் வள்ளல் திருக்காப்பிட்டுக் கொண்ட நிகழ்வி நினைவு அவரை மிகவும் பாதித்திருந்தது. சில நாள்கள் எவருக்கு தெரியாமல் ஒருமுகப்பட்ட நினைவோடு இருந்தார். வள்ளல் மறைவு! நினைவு அவரை ஆட்கொண்டிருந்தது. அன்பர்கள் அவர்தம் இருப்பை அறிந்து கொண்டு சூழ்ந்தனர். சோமு செட்டியார் வீட்டு 
சொற்பொழிவைத் தொடரச் செய்தனர். அவர் மகனுக்கும் படிக்க உதவினர். வள்ளற் பெருமான் தம் மாணவர் என்பதால் சான்றோர்கள் பலரும் வந்து அடுத்தனர். அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் வந்து நின்றனர். பலரோடும் அளவாளவி வள்ளல் பற்றிய செய்திகளைக் கூறிகொண்டிருந்தார். மருட்பா இயக்கம் வலுபெற்றிருந்தது கண்டு விளக்கம் அளித்தார். 

15.நாத்திகரை வெல்லுதல்: 

பூண்டி அரங்கநாதர் என்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்தார். அவரோடு பேசி வாதிட்டுக் கடவுள் உண்டென்பதை ஏற்கச் செய்தார். அதனால் அவரும் கச்சிக்கலம்பகம் பாடச்செய்தார். அவரும் மகிழ்ந்து பாடினார். 

16.கல்லூரிப் பேராசிரியர்: 

1879 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்போராசிரியர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்பணியைப் பூண்டி அரங்கநாதர் தொழுவூரார்க்குக் கிடைக்கச் செய்தார். அதனால் முன்பு வெளியிட்டத் திருவருட்பா நான்கு திருமுறைகளை வெளியிட்டார். ஐந்தாம் திருமுறையும் வெளியானது. சன்மார்க்கப் பணிகளை ஆர்வம் குன்றாமல் செய்திட்டார். 

பிரம்மஞான சங்கம் சென்னையில் உருசிய நாட்டு பிளவட்சுகி அம்மையாரும் அமெரிக்க நாட்டுக் கர்னல் ஆல்காட் என்பவரும் பிரம்மஞான சங்கத்தை தொடங்கி இருந்தனர். அவர்கள் தொழுவூராரை அழைத்து வள்ளல் பெருமான் குறித்து விளக்க வேண்டினர். நீதிபதிகள் முன்னர் தொழுவூரார் சொன்ன செய்திகள் பதிவு செய்யப் பெற்றது. அது கேட்டு அச்சங்கத்தை தொடங்கச் செய்தவர்களுள் வள்ளற்பெருமான் ஒருவர் என்று உறுதி அளித்தனர். வள்ளற்பெருமான் கையெழுத்தைக் காட்டினர். தொழுவூரார் அது கண்டு வியந்தார் திருக்காப்பிட்டுக் கொண்ட பின் நிகழ்ந்த நிகழ்வு இது. எனவே பெருமான் எங்கும் இருப்போம் என்று திருவாய் மலர்ந்தது உறுதியானது. 

நம்பிக்கையோடு மீண்டும் திருவருட்பா பதிப்புகளைச் செய்தார். ஆறாம் திருமுறை வெளியிடவே இல்லை. வள்ளல் உத்தரவுக்குக் காத்திருந்தார். கிடைக்கவே இல்லை. யார் சொல்லியும் அதனை பதிப்பிக்கவே இல்லை. 

உரைநடை வளர்ச்சிக்கு  மார்க்கண்டேய  புராணம் ,திருவெண்காடர் புராணம் முதலிய அரிய நூல்களை எழுதினார். திருச்சந்நிதி முறையீடு என்று பெருமானைத் தோத்தரிக்கும் பாடல்களைப் பாடினார். வடற்பெருவெளிக்கும் வந்து வழிப்பட்டார். 

ஓய்வில்லாத பணியினால் உடல் நலிந்தது. உள்ளம் ஒன்றியே. பெருமான்பால் இருந்தது. வள்ளலை நினைந்து மகிழந்தது. 21-2-1889 ஆம் நாள் உயிர் அடக்கம் கொண்டது. திருஒற்றியூரில் அன்பர்கள் அவர் உடலை அடக்கம் செய்து வழிபட்டனர். 

தொழுவூரின் ஐயாவே போற்றி-வள்ளல் 
சொல்கேட்டு நடந்தாயே போற்றி 
மெழுகாக எரிந்தாயே போற்றி-அருட்பா 
வெளியிட்டு மகிழ்ந்தாயே போற்றி! 



வள்ளலார் வழி : கட்டமுத்துப்பாளையம் நாராயணர் அருள் வரலாறு

வள்ளற் பெருமானாரின் வழி வழித் தொண்டர்கள் 

கட்டமுத்துப்பாளையம் நாராயணர் அருள் வரலாறு 


1.வளாகத்தில் வழிபாடு 

மேட்டுக்குப்பம்: அண்ட கோடிகள் அனைத்தும் வணங்கிப் போற்றும் சித்திவளாகம். அங்கே ஞானசிங்காதனப் பீடத்திற்கு ஆராதனை நடந்து கொண்டிருந்தது; அன்பர்கள் பேரார்வத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாடிப்பணிந்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்; தன் வசம் இழந்து கண்ணீர் பெருக்கி, கசிந்து, நின்று கொண்டிருந்தார்கள். 

ஆராதனைக்குக் கட்டாயம் வந்து கொண்டிருந்தார் வள்ளற்பெருமான். அன்றைய தினம் வழிபாடு தொடங்கியும் பெருமானைக் காணவில்லை; ஆனாலும் அன்பர்கள் உணர்வுப் பெருக்குடன் ஒருமித்த கருத்துடன் தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். 

2.அன்பரின் மனநிலை 

அத்தருணம், கூட்டத்தில் ஓரன்பர் ஓரமாக ஒதுங்கி நின்று வழிபட்டுக் கொண்டிருந்தார். எட்டி எட்டி ஆராதனையைக் கண்ணு பரவசமானார். கைகளை உச்சியின் மீது குவித்த படி உணர்வுமயமாய் நின்றார். முன்வந்து நன்றாக தரிசனம் செய்ய அவருக்கு நேரிடவில்லை. அப்படிச் செய்ய அவர் விரும்பவுமில்லை.

3.முன் வந்து தரிசியும் காணும்: 

அப்போது வெளியில் சென்றிருந்த நம் பெருமான் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழிபாட்டுக் கூடத்தில் திருமலரடிகளை எடுத்து வைத்தார்கள். அவ்வளவுதான் "ஏன்காணும் இப்படி ஒதுங்கி நின்று தரிசிக்க வேண்டும்? நன்றாக முன்வந்து தரிசியும் காணும்" எனத் திருவாய் மலர்ந்தருளி ஒதுங்கித் தரிசனம் செய்த அன்பரின் கைகளைத் திருக்கரங்களினால் பிடித்துக் கொண்டார்கள். முன்வரும்படி அழைத்தருளினார்கள். 
உடன், வள்ளற்பெருமானின் தெய்வத் திருக்கரங்களால் தீண்டப்பெற்ற அவருக்கு உச்சியைப் பிடித்து உலுக்குவதுபோல் இருந்தது; உடல் எல்லாம் சிலிர்த்துப் போனார்; தன்னை அறியாமல் தாரையாக் கண்ணீர் சிந்தினார்; சோபம் மீதுறப்பெற்றார்; வேரற்ற மரம் போல விழுந்து வணங்கினார். 


4.விம்மிதம் அடைந்தார்: 

"ஆகா! சுத்த தேகம் பெற்றவர்கள் நம்பெருமான்; பிரணவ தேகம் பெற்றவர்கள் நம் ஐயா; ஞானதேகம் பெற்றவர்கள் நம் அடிகள்; அவர்களின் அற்புதத் திருக்கரங்களால் தீண்டப் பெற்றால் நமக்கு எவ்வகை உணர்ச்சி உண்டாகும் என்று எப்போதோ நினைத்தோமே! அது இன்று இப்போது இப்படி நடந்துவிட்டதே; எனது பாக்கியமே பாக்கியம்!", என விம்மிதம் அடைந்தார். சொல்ல ஒண்ணாமல் நாதமுதழுத்தார்; "ஆண்டவனே ஆண்டவனே” என்று வாய்க் குழறினார். 

5.யார் அவர்? 

அவர்தான் கட்டமுத்துப்பாளையம் நாராயணர். கல்பட்டு ஐயாவின் சீடரான சுப்புராயர் தேர்ந்தெடுத்த செல்வமணி; வடல் வெளியில் சாலைப் பணிகளை மாண்புடன் நடத்திய வளர்மணி. சத்தியதருமத்தைப் பல்லாண்டுகள் பாங்குடன் நடத்திய பால்மணி. 

திருநறுங்குன்றத்திலிருந்து சாலைப் பணிகளுக்கு என வந்து சேர்ந்தார் கல்பட்டு ஐயா; தெலுங்கு தேசத்திலிருந்து அதற்கெனவே வந்து சேர்ந்தார் சுப்புராயர்; தென்னார்க்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அடித்த கட்டமுத்துப்பாளையத்திலிருந்து அப்பணிகளைத் தொடர்ந்திட வந்து சேர்ந்தார் நாராயணர். அவ்வாறு வெளியிடங்களில் இருந்து வந்து நிலையான பணிகளை மேற்கொண்ட தொண்டர் பரம்பரையைச் சார்ந்தவரே நாராயணர். 

6.இளம் பருவம்: 

7-10-1855ல் பிறந்திட்டார். இளம்பருவத்தில் குடும்ப அலுவல்களில்ஈடுபாடில்லை. உழவினையோ-வேளாண்மையையோ கவனிக்கவில்லை. அடிக்கடி கண்டரக்கோட்டைப் புலவனூர்க்குச் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். 

சோதிடர்கள்பாலும், மந்திரவாதிகள் பாலும் அக்கறை; சோதிடம் பயில, மந்திரம் பயில நாட்டம், ஆதலின் விவசாய வேலைகளில் இல்லை ஈட்டம். 
திருமணம் ஆனால் குடும்ப அலுவல்களில் ஆர்வம் உண்டாகும் எனப் பெற்றோர் தீர்மானித்தனர். “தைலம்மை" என்னும் நல்லம்மையை மணம் புரிவித்தனர். குடும்ப ஈடுபாடு சீராக வளர்ந்தது நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 

ஆனாலும் மந்திர தந்திர சோதிடக்கலைகளில் ஈடுபாடு நின்றபாடில்லை அத்துடன் நன்கு தரிசனம் செய்யும்படி அறிவுறுத்தினார்கள். புலவனூர்க்குச் சென்று வருவதும் குறைந்தபாடில்லை 

7.நம்பெருமான் எழுந்தருளல்: 

புலவனூரில் கருணீகர் மரபினரிடை சங்கடம் ஒன்று தோன்றியது அதனைப் பெருமானிடத்து வந்து விண்ணப்பம் செய்தனர். புலவனூருக்குப் பெருமான் எழுந்தருளினார்கள் மரபினரிடை தோன்றிய மாற்றங்களை நீக்கி அமைதி செய்வித்தார்கள். அத்தருணத்தில் நம்பெருமானைக் கண்டு தன்வயம் இழந்தவரானார் நாராயணர்.
 
வந்த அலுவல் முடிந்து வடல்வெளிக்குத் திரும்பிச் கொண்டிருந்தார்கள் வள்ளல். அப்போது கட்டமுத்துப் பாளையம் நாராயணர் இல்லத்தில் 2, 3 நாழிகை தங்கினார்கள். அவ்வளவே நாராயணர் அதுமுதல் நம்பெருமானனுக்கு மீளா அடிமையானார். 

8.பேரின்பப் பெருவாழ்வு: 

நம்பெருமான் சத்திய தருமத்தாலும், ஜீவகாருண்யக் சீலத்தினாலும், கொல்லாமை என்னும் குருஅருள் நெறியாலும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று ஒளிர்ந்திட்டார்கள். 
இம்மை இன்ப வாழ்வினும் ஏற்றமுடையது மறுமை இன்ப வாழ்வு; மறுமை இன்ப வாழ்வினுப் மகத்துவ முடையது பேரின்ட வாழ்வு பேரின்ப வாழ்வினைப் பெற்றவர் சுத்த பிரணவ ஞானதேங்களை ஒருசேரப் பெற்று ஓங்கி நிற்பார்கள். அவர்கள் கடவுள்தான் என்பதனைக் கேட்டறிந்தார். நம்பெருமானிடம் கண்டறிந்தார். 

அப்போதுதான் "நம்பெருமானின் தூயதேக திருக்கரங்கள் தம்மீது பட நேர்ந்தால் எவ்வாறு இருக்குமோ" என ஏக்கமுற்றார் அவரது அப்பழுக்கற்ற ஏக்கத்தினை தான் அன்றைய வழிபாட்டில் கைபிடித்து அழைத்துக் தீர்த்தருளினார்கள் வள்ளல். 

அப்படித்தான் 'நம்பெருமானுக்கு உணவு படைத்து உபசரிக்க வேண்டும்' என ஏக்கமுற்றார் ஊத்தங்கால் மங்கலம் கேசவரெட்டியார். அதன்படியே ஒருநாள் அவரது இல்லத்திற்கு எழுந்தருளி ஏக்கம் விர்த்த ஏந்தலாகி விளங்கினார்கள் நம் பெருமான். 

9.வடல்வெளி வாழ்வு: 

மூத்தமகன் குடும்பப் பொறுப்பினைக் கவனிக்கும் நிலைக்கு வளர்ந்திட்டான். அவனுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வைத்தார் நாராயணர். குடும்ப அலுவல்களை அவனிடம் ஒப்படைத்தார். தான்மட்டும் வடல்வெளிக்கு அடிக்கடி வந்து போகும் பழக்கத்தினை மேற்கொண்டிருந்தார். அப்போதுதான் தெலுங்கு தேசத்துப் பெரியவர் சப்புராயரின் பழக்கம் உண்டாயிற்று. இவ்வாறாகச் சாலைத் தொண்டுக்கு நாராயணரை ஆட்படுத்தும் நிகழ்வுகள் நடந்தவண்ணமிருந்தன. 

10.உகந்த பணி: 

சுப்புராயர் தொடர்பினால் கட்டமுத்துப்பாளையத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது நாராயணர் அதற்கு ஆசானாய் அமர்ந்தார். தமிழும் தெலுங்கும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட்டது. இடையிடையே சுப்புராயர் பள்ளிச் செயல்பாடுகளைச் கவனிக்கச் சென்று வந்தார். 

ஆனாலும் உத்தம தருமம், சத்திய தருமமும், கடவுள் கற்பித்த உண்மைத் தருமமும், பசி நீக்குதலும், கொலை நீக்குதலுமே என்பதனைத் தேர்ந்து உணர்ந்தார். முடிவில் வடல்வெளிக்கு வந்து சாலைப் பணிகளை மேற்கொள்ளவே நாராயணர் விரும்பினார்; ஆதலின் பள்ளிப் பணிகளைப் பிறரிடம் ஒப்படைத்து உத்தர ஞான சிதம்பரத்திற்கே வந்து விட்டார்; உடல், பொருள், உயிர் முழுவதும் சாலைப்பணிகளுக்கு என ஒப்புக் கொடுத்தார்; அவ்வாறு ஆன்ம நேயச் சீலராய்ப் பரிணாமம் பெற்றுக் கொண்டிருந்தார். 

11.சிதம்பர சுவாமிகள் செய்தி: 

இராமலிங்க சுவாமிகள் திவ்விய சரித்திரத்தை வரைந்தவர்கள் பிறையாறு சிதம்பர சுவாமிகள். அவர்கள் சன்மார்க்க உலகில் கலங்கரை விளக்கெனத் திகழ்ந்தவர்கள்.

 அவர்களோ "ஒருகால் கட்டமுத்திப் பாளையத்திலிருந்து நாராயண ரெட்டியார் என்னும் அன்பர் மேட்டுக்குப்பம் வந்தார். சுவாமிகளைத் தரிசித்தார். சிலநாட்கள் தங்கியிருந்தார். 
அப்படியிருக்குங்கால் தம்மேல் சுவாமிகள் பரிசம்பட்டால் எப்படி இருக்குமோ என்று அவா உடையவராய் தங்கியிருந்தார். 

அப்போது வெளியிலிருந்து வந்து சேர்ந்த ஐயா அவர்கள் நாராயண ரெட்டியாரை "தீபாராதனையைத் தரிசியும்" என்று கைகளைப் பற்றி சந்நதிக்கெதிரில் விட்டார்கள். 
உடனே உவகை பூத்த உள்ளத்தினராய் பெருமானைத் தரிசித்துப் பேரானந்தம் அடைந்தார். 

அந்த நாராயண ரெட்டியார் அவர்களே சாலையில் நீண்ட நாள் கல்பட்டு ஐயாவுக்குப் பின் அவர் மாணாக்கராயிருந்து அவர் ஆணைப்படி சத்திய தருமச் சாலையை நடத்தி வந்த தெலுங்கு தேசத்து சந்நியாசியாகிய சுப்புராய சுவாமிகளுக்கு உறுதுணையாகி நின்றார். 

மேலும் சென்ற பிரபவ வருடம் வைகாசி 11 ஆம் தேதி சுமார் 37 வருடங்களுக்கு முன் சாலைக் கட்டடத் திருப்பணி வேலையை முடித்து பிரவேச விழா நடத்தி ஆண்டவர் அருளுக்குப் பாத்திர ஆனார். 

மேற்படி ரெட்டியார் அவர்கள் பெருமான் திருக்கரத்தால் பரிசிக்கப்பெற்ற பேற்றினை அன்பர்கள் விசாரிக்குந்தோறும் வள்ளல்பால் மாறாத அன்புடையவராய் அந்நிகழ்ச்சியைப் பற்றிக் கூறி அகம் நெகிழ்ந்து உருகி ஆனந்த பரவசராய் சூழந்தோரையும் அம்மயமாக்கும் தகையினராய் விளங்குவார் எனத் தெரிவித்துள்ளார்கள். 
-இராமலிங்க சுவாமிகள் திவ்விய சரித்திரம் 

12.தெய்வப்பணி: 

1867 பிரபவ ஆண்டு வைகாசி 11ல் தொடங்கப்பெற்றது சத்திய தருமச்சாலை. அப்போது அது கூரை வேய்ந்த கட்டடமாகவே இருந்தது. தொடக்க நாளன்று செங்கல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மட்டும் நடந்தேறியது. ஆனால் 
1. வள்ளல்பெருமான் 4 ஆண்டுகள் தங்கியருளிய காலத்தும் 
2. கல்பட்டு ஐயா 25 ஆண்டுகள் தொண்டு செய்த காலத்தும் 
3.சுப்புராயர் 30 ஆண்டுகள் பணிவிடை செய்தகாலத்தும் ஏழையர் பசிபோக்கும் தருமம், 
விழல் வேய்த கூரைக் கட்டடத் திலேயே நடந்து கொண்டிருந்தது. 

அதனை மாற்றிச் செங்கல் கட்டடமாக்கும் எண்ணகொண்டார் நாராயணர். அவ்வெண்ணத்திற்கு ஆசி வழங்கினார் சுப்புராயர். ஒத்துழைப்பு நல்கினார்கள் நாகப்பட்டினத்து அன்பர்கள். அத்தகைய தெய்வ வலிவோடு வேண்டிய பொருள்களைச் சேகரம் செய்தார் நாராயணர். 

பெருமானின் திருவுள்ளப்பாங்கின்படி 60 ஆண்டுகள் நிறைத்த அடுத்த பிரபவ வருடத்தில் 1927ல் வைகாசி 11ல் செங்கல் கட்டடப் பணி முடித்து அங்கே சத்திய தருமத்தை ஓங்கிய வளரும்படிச் செய்திட்டார் உத்தமர் நாராயணர் அங்ஙனம் செய்து அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிபெருங் கருணைக்குப் பாத்திரரானார். 

13.தொடர்பணி: 

தருமச்சாலை பிரவேசத்திற்குப் பேருதவி செய்தவர்களில் முன்னணி பெற்றவர் நாராயணர். அம்மட்டோ! சுப்புராய சுவாமிகள் போல நாராயணரும் ஊர் ஊராகச் செல்வார். தானியங்களைச் சேகரிப்பார். காய்கறிகளைச் சேகரிப்பார். சாலைப் பண்டங்களைச் சேகரிப்பார். எரிபொருள்களைச் சேகரிப்பார்; அத்துணையும் வடலூர் சாலைக்கு கொண்டு வந்து சேர்ப்பார்; பாதுகாப்பார்; இடைவிடாமல் அன்னப் படையல் செய்வார்; அகம் பூரிப்பார்; அவ்வாறு செய்த அகத்தொண்டால் திருவருட்பிரகாச வள்ளலின் திருவடிக்கு அணிகலன் ஆனார். 

14.நிறைபணி: 

நம்பெருமானின் நலமிகு தொண்டினால் அகம்பூரித்து அனுபவம் பல பெற்றார். ஞான நூல்களுக்கு நல்விளக்கங்கள் தந்திட்டார். உண்மைத் தொண்டுக்குப் பின்னும் பலரை ஆளாக்கினார். ஆந்திர நாட்டு நெல்லூரிலிருந்து வந்திட்ட மறையவர் குலத்துச்சாது ஒருவரை மீளா அடிமையாக்கினார். 90 ஆண்டுகட்டுப் பக்கமாகத் தெய்வத் தொண்டாற்றினார். 

நம் பெருமான் திருக்காப்பிட்டு அருளிய தெய்வத்திருநாளாம் தைப் புனர்பூசத்தன்று 1945ல் உயிர் அடக்கம் கொண்டிட்டார். அவரது நல்லுடல் கட்டமுத்துப்பாளையத்தில் சமாதி செய்யப்பெற்றது. அவரது நல்லுணர்வு நமக்கெல்லாம் ஒளிவழங்கி உயர்த்துவதாகட்டும்! 

1988-அடுத்த பிரபவ ஆண்டு தொடங்கி சத்திய தருமச் சாலையின் கான்கிரீட் திருப்பணி அற்புதமாக நடந்து 24-5-93-ல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

வள்ளலார் வழி :சுப்புராய பரதேசி அருள் வரலாறு

 திருச்சிற்றம்பலம் 

வள்ளற் பெருமானாரின் வழி வழித் தொண்டர்கள் 


சுப்புராய பரதேசி அருள் வரலாறு


நமது அருள் தந்தையாம் வள்ளலின் பெரும் புகழ் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. வேதாந்தக் காற்று ஒருபுறம் வீசிக் கொண்டிருந்தது; சித்தாந்தத் தென்றல் ஒருபுறம் தவழ்ந்து கொண்டிருந்தது; ஆரிய சமாஜம் தளர் நடை இட்டது; பிரம்ம சமாஜம் பீடுநடை போட்டது; கிறித்துவ சமயம் வேரூன்றிக் கொண்டிருந்தது; மகமதிய சமயம் கப்பும் கவடும் விட்டது; உலகாயதம் உணர்வு பெறப் பாடுபாட்டுக் கொண்டிருந்தது; சைவ சமயம் எல்லையை அளந்து கொண்டிருந்தது; வைணவ சமயம் வாதமிடத் தொடங்கியது. இத்தனைக்கும் பொது நெறியும், புது நெறியும், மெய்நெறியும், ஒளிர்நெறியுமாகிய பெருமானின் சன்மார்க்கம் பற்றித் தமிழகத்தவரும், மற்ற மாநிலத்தவரும் அறிந்திடலாயினர். அதுமட்டுமன்று; வெள்ளையர்களும் கூட விளக்கம் பெற்றிட நம் பெருமானை அடுத்தனர்; திருவாசகத்தை மொழி பெயர்த்த போப்பையரும், சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் பாடிய வேதநாயகரும், நம் பெருமானை அணுகி உயர்விளக்கங்கள் பெற்றனர். அக்காலத்துச் சங்கராச்சாரியார் கூட வேதத்தில் தோன்றிய ஐயாவிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர், வட்ட ஆட்சித்தலைவர், பிற அரசு அலுவலர்கள், வழக்குரைஞர்கள் கூட பெருமானை அண்டித் தங்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துப் ஐய்யப்பாட்டினை போக்கிக் கொண்டனர். 


அவ்வாறே அண்டை மாநிலத்தவர்களும் பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாயினர். அவர்களுள் ஒருவர்தான் தெலுங்கு தேசத்து சந்நியாசி. அவர் பெயரோ சுப்புராயப் பரதேசி. 


வள்ளல்பெருமான் கண்டெடுத்த வளர்மணிதான் கல்பட்டு ஐயா, 

கல்பட்டு ஐயா கண்டெடுத்த கண்மணிதான் சுப்புராயர், 

வள்ளலின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வு சுப்புராயர் போன்றவர்களைக் கவர்ந்தது. தலயாத்திரை மேற்கொண்ட போது வடலூர் வந்து சென்றார் சுப்புராயர். அப்போது கல்பட்டு ஐயா, தொழுவூர்ப் பெருந்தகை, காரணப்பட்டார் ஆகியோர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சற்குருநாதரைத் தேடிக்கொண்டிருந்த கல்பட்டு ஐயாவுக்கு வள்ளல் கிடைத்தது போல உண்மை அறச்செயலைத் தேடிக் கொண்டிருந்த சுப்புராயர்க்குக் கல்பட்டு ஐயா தொடர்பு கிடைத்தது. 


வள்ளல் பெருமானின் சித்திப் பேற்றிற்கு முன்பே கல்பட்டு ஐயா வடலூரில் வசித்தார். வள்ளலின் பேறடைவுக்குப் பின் சுப்புராயர் கல்பட்டு ஐயாவை அடைந்தார். தவயோக நெறியிலும், உயிர்நேயத் தொண்டிலும் உடல், பொருள், உயிரினை ஒப்புக் கொடுத்த கல்பட்டாரின் நடைமுறைகள், சுப்புராயர்க்கும் பெரும் பயனை உண்டாக்கித் தந்தன. அதன் காரணமாக அடுத்து அடுத்து வடலூர் வரவும் பின்பு வடலூரிலேயே நிலை பெறவும் சுப்புராயர் முடிவு செய்தார்.

 

சுப்புராயரின் இளமைப்பருவம் பற்றித் தெளிவாகத் தெரிந்தது கொள்ளும் செய்திகள் கிடைக்கவில்லை; என்றாலும் வடலூர்ப் பணிகளை தன் உயிர்ப் பணிகளாகச் சுப்புராயர் தேர்ந்து கொண்டார். அப்போது அவரது சரித்திரம் அதிசயிக்கத்தக்க சரித்திரம் என்பதில் ஐயமில்லை. 


வள்ளல்பெருமான் பெருநிறைவு பெறுகின்ற தருணம் வந்து கொண்டிருந்தது. 

முதலில் உண்டாக்கிய சன்மார்க்க சங்கத்துப் பணிகளைத் தொழுவூரார் போன்றவரிடம் ஒப்படைத்தார்கள். இரண்டாவதாக உண்டாக்கிய சத்திய தருமச் சாலைப் பணிகளைக் கல்பட்டு ஐயாவிடம் ஒப்படைத்தார்கள். மூன்றாவதாக உண்டாக்கிய சத்திய ஞான சபைப் பொறுப்பினைச் சபாபதி சிவச்சாரியார் போன்றாரிடம் ஒப்படைத்தார்கள். 

நான்காவதாகத் திகழ வைத்திட்ட சித்திவளாகப் பராமரிப்பினைச் சேலம் ஹவுஸ் ஞானாம்பாள், மேட்டுக்குப்பம் வாழ் பெருங்குடும்பத்தவரிடம் ஒப்படைத்தார்கள். 


ஆதலில் பெருமானின் அருட்சித்திக்குப் பின்னர் கல்பட்டு ஐயா, சுப்புராயர், தெலுங்கு தேசத்துப் பிராமண சந்நியாசி, கட்டமுத்துப் பாளையம் நாராயணர் ஆகியவர்கள் பராமரிப்பில்தான் சத்திய தருமச் சாலையின் ஜீவகாருண்யப் பணிகள் சீருடனும் சிறப்புடனும் தொடந்தது. 


அத்தகைய தருணங்களில் வந்து வந்து ஊக்கமும் உணர்ச்சியும், உண்மை அறச்செயலையும் மேற்கொண்டவரே ஈப்புராயர். திருமுருகனின் திருப்பெயரே சுப்பையன் என்பது. ஆன்ம அறிவின் விளக்கமாகத் திகழ்ந்திடும் தெய்வமே முருகன் அவனது அருட்பெயரையே தாங்கினார் சுப்புராயர். 


இராயர் - என்னும் சொல் அரசர் என்னும் பொருளைத் தரும். ஆன்ம அறிவுக்கு இயல்பு ஜீவகாருண்யம்; அந்த ஜீவகாருண்ய செந்நெறிக்கு அரசராகக் கிடைத்தவரே சுப்புராயர். 

பரதேசி; மேலான நாட்டில் வசிப்பவர் என்பது பொருள் நாம் எல்லாம் உணவுக்கும் அதனைச் சார்ந்த உணர்வுக்கும் ஆட்பட்டுக் கீழான நாட்டில் உழன்று உழன்று உருக்குலைகின்றோம். இளமை 

முதலாகச் சீரிய துறவறச் செம்மலாகத் திகழ்ந்து ஒளிர்ந்தவர்தான் சுப்புராயர். இவ்வாறே சுப்புராயப் பரதேசி காலத்தில் அமாவாசைப் பரதேசி என்பார் சத்திய ஞானசபைத் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளார். 


கல்பட்டு ஐயாவினால் உருவாக்கப்பெற்ற சுப்புராயர் சாலைப் பணிகளை 6-2-1902 தன் பொறுப்பில் மேற்கொண்டார். இதுபற்றிச் சத்திய தருமச் சாலைப் பதிவுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது முதற்கொண்டு சாலை மேலும் மேம்பட்டு விளங்க மனம், வாக்கு, காயங்களால் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். 

அவ்வப்போது சாலையின் தெய்வப்பணி சிறப்புடன் நடக்க அண்டை அயல் ஊர்களுக்கு எல்லாம் கால்நடையாகவே சென்றார். அன்னதானத்திற்கு வேண்டிய பொருள்களைச் சேமித்து வந்திட்டார். அத்துடன் பெருமானால் சுட்டிக் காட்டப்பெற்ற கூழ் வார்க்கும் பணியினையும் ஆதரவற்றார் பசிதீர்க்கும் அறத்தினையும் இடைவிடாமல் மேற்கொண்டு வந்தார். அதன்வழி ஆன்ம லாபத்தினை ஈட்டிடவும் முயன்றார். 


அவர் உணவுப் பொருள் திரட்டப் பகற்பொழுதினைப் பயன்படுத்தாமல் இரவுப் பொழுதில் வெளியூர்களுக்குப் புறப்படுவார். பகலில் சத்திய தருமச்சாலைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி இன்புறுவார். அவ்வாறு இரவில் செல்லும்போது இருட்டில் சுப்புராயரின் முன் இரண்டு லாந்தர்களோ அல்லது இரண்டு தீவர்த்திகளோ ஒளி உமிழந்து செல்வது வழக்கம். அதனை உற்று நோக்கில் ஒன்றும் புரிவதில்லை. ஆதலில் அருட்பிராகாசரின் அருட்பெயரும், தன்னை ஆட்படுத்திய தவச்சீலர் பெயரும் ஒன்றேயாகித் திகழ்ந்ததனை உணர்ந்து அவர், இரவில்-இருட்டில் "இராமலிங்கம்” என்னும் திருநாமத்தையே இடையறாது ஓதி இருட்கடலையும், மருட்கடலையும் கடந்திட்டார். 


அதுபற்றிக் காரணப்பட்டு சமரசபஜனை கந்தசாமி ஐயா இவ்வாறு இசைப்பாட்டாக்கிப் பாடியுள்ளார்கள். 

சற்பத்தியுற்ற சுப்புராயப்பரதேசி 

சத்திய தருமச் சாலைத் 

தனிலிருந்து குளிஞ்சிக் குப்பத்துக்குத் 

தனியே சென்றிடும் காலை 

சாலையில் இரவில் ராந்தல் மாத்திரம் 

தனக்குமுன் செல்வதறிந்து தோத்திரம் 

தன்னுள்ளே சொல்லிக் கொண்டே ஏசுவும் மறைந்த 

தரம் அறிந்தோம் வினை போகவும் நிறைந்த 

கதிபெற்று உய்யக்கடைக்கண் பார் ஐயா 

-ஸ்ரீராமலிங்கையா 

கருணை செய்ய எமக்கு இங்கு யாரைய்யா 

(பிள்ளைப் பெருமான் திருவிளையாடல்-9) 


சேக்கிழாரின் பெரிய புராணம் நடை நலம் உள்ளதாக இராமலிங்கசுவாமி சரித்திரம்" என்னும் நூலினைப் பாடி பரவினார் பண்டிதை அசலாம்பிகை என்னும் அம்மையார். 

அவர்களோ 

"சாலையில் அன்னதானப் பணியினை ஆற்றுச் சார்ந்து 

மேலிவண் உறைந்த சுப்புராயப் பேர் விரவும் அன்பர் 

கோலிய பொருளை நாடி இருளினில் குறுகும் காலை 

வாலிய வெளிச்சம் முன்னே வயங்கும்" என்று 

உணர்த்திட்டாரால் 

-சித்திவளாகத் திருமாளிகைச் செறிவு : 2 : 12 


மற்றும் "திருவருட்பிராகாச வள்ளலார் திவ்விய சரித்திரம்” வரைந்த பிறையாறு சிதம்பர சுவாமிகளும் பின் வருமாறு தெரிவித்துள்ளனர். 


"சாலையில் தொண்டு செய்து வந்து சுப்பராய பரதேசி என்பவர் சாலை அன்னதான வசூலுக்கு குளிஞ்சிக்குப்பம் முதலிய கிராமங்களுக்குச் செல்வது வழக்கம். மிகவும் பயங்கர வழியில் செல்லுங்கால் இரண்டு லாந்தர்கள் ஆள் தெரியாமல் முன்னே செல்லும். பரதேசி பயமற்று வழி கடப்பர்".


பகல் எல்லாம் சத்திய தருமந் சாலைப் பணிகள்; இரவெல்லாம் சாலை சரிவர நடத்தி வைக்க வேண்டிய புறத்தின் இயங்கும் பணிகள். இப்படி அல்லவா வள்ளலின் தருமத்தை இனிதே நடத்தி வைக்க வந்திட்டார் தெலுங்கு நாட்டிலிருந்த சுப்புராயர். 


அப்போது சுப்புராயருக்குப் பழக்கமானவரே கட்டமுத்துப் பாளையம் நாராயணரெட்டியார். அத்துடன் சுப்புராயரின் அறிவுரையால் 60 ஆண்டுகட்குப்பின் சத்திய தருமச் சாலையைக் கல் கட்டடமாக ஆக்கித் தந்தவரும் அவரே. அவ்வாறு நாராயணர், நாகப்பட்டினத்துச் சன்மார்க்க அன்பர்கள் ஆகிய உண்மைத் தொண்டர்களை உருவாக்கும் பெருமுயற்சியிலும் ஈடுபட்டார் சுப்புராயர்.

 

சுப்புராயர் காலத்தில்தான் நம் பெருமானின் திருவுருவத் திருமேனி சாலையில் அமைக்கப்பட்டதாகக் கேள்வி. 

காரணம் தொடக்க நிலையில் உருவ வழிபாட்டிற்குஎன பெருமானின் திருவுருவமும், 

வளர்நிலையில் சத்திய ஞான தீபமும், 

நிறைநிலையில் ஞானசிங்காதனப் பீடத்தில் ஞான சொரூபத்துடன் இறைவன் விளங்குவதாகவும் கருதி வழிபட அமைக்கப்பட்டதே அம்மூன்று நிலைகள்.


 அப்படி இறைவர் வேறு, இராமலிங்கப் பெருமான் வேறு என்றில்லாமல் இருவரும் ஒருவரே என உணரவே அவ்வாறு அமைக்கப்பட்டது. இறைவரோ, உருவ நிலையில் இராமலிங்கம் உருஅருவ நிலையில் சத்தியஞானதீபம், அருவநிலையில் ஞான சிங்காதனத்தில் விளங்கும் ஞானசொரூபம் எனத் தரத்திற்கு ஒத்த வழிபாட்டு முறையைச் சேர்ந்துத் தந்த இனிய தொண்டரே சுப்புராயர். 


 அவர் 30 ஆண்டுகள் இடையறாமல் தவலிமையும் அறவலிமையும் மிளிரத் தொண்டாற்றினார். அதனால் வள்ளல் பெருமானின் பெருங்கருணைக்கு அங்கமானார். பின்பு 1931-அ ஆண்டு வைகாசி 10ஆம் நாள் பூச நன்னாளன்று உயிரடக்கம் பெற்றார். அவரது தவமேனி கல்பட்டு ஐயாவின் சமாதிக்கு எதிரில் கீழ்ப்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சுப்புராயரின் தொண்டினைத் தேவர்களும் மூவர்களுமே போற்றிப் புகழ்வார்கள். அப்படியிருக்க நாமும் போற்றிப் புத்துணர்வு பெறுவோம்! புண்ணிய பணியில் ஈடுபடுத்திக் கொள்வோம்!  


வள்ளலார் வழி : கல்பட்டு ஐயா அருள் வரலாறு

 உ 
இராமலிங்கர் துணை 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி 
வரவேற்பு வாயில் 

வள்ளலாரின் மாணாக்கர்களின் அருள் வரலாறு

கல்பட்டு ஐயா அருள் வரலாறு


114 ஆண்டு கல்பட்டு அய்யா குருபூஜை 
26.04.2016 
தொகுத்தவர்  திரு. சீனி சட்டையப்பர் அய்யா
"அருள் சிவா வெளியீடு" மு.இரவிச்சந்திரன் 
வள்ளலார் கொள்கை நெறிபரப்பு இயக்கம் அருள்சிவா டிரேடர்ஸ் , வடலூர்

உ 
இராமலிங்கர் துணை 
கல்பட்டு ஐயா 
திருவடி முறையீடு - திருவருட்பா 
சீர்இடம் பெறும் ஓர் திருச்சிற்றம் பலத்தே 
திகழ்தனித் தந்தையே! நின்பால் 
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்; கருணை 
செய்தருள்; செய்திடத் தாழ்க்கில் 
யாரிடம் புகுவேன்? யார் துணை என்பேன்? 
யார்க்குஎடுத்து என்குறை இசைப்பேன்? 
போரிட முடியாது இனித்துயரொடு; நான் 
பொறுக்கலேன்; அருள்இப் போதே. 


சிவகனி தொழுவாம் -வான்ஒளி அமுதக்காவியம் 
திருநறுங் குன்றத்து எழில்மலை முடிமேல் 
குருவருங் காலங்குறித்து, இனிது அமர்ந்தே, 
ஒருவரும் இல்லா உவமைநம்பெருமான் 
திருவருள் பெற்ற சிவகனி தொழுவாம். 

1.அடியார் வருகை 

1867-ஆம் ஆண்டு, கோடைக்காலம்.க கடும் வெப்பம் உயிர்க்குலத்தை கலக்கி நின்றது. நீர் எங்கே என்று தேடி நிலைகுலைய வைத்தது. நிழல் எங்கே என்று ஓட வைத்த சூரியனின் கதிர்களால் சூடேறி நிற்கும் மண்ணில் கால் வைத்து நடப்பதற்கே மக்கள் அஞ்சும் உச்சிவேளையில் ஓர் தவ வடிவம் நடந்துகொண்டிருந்தது! 

அண்டம் எல்லாம் தலைவணங்கும் வடலூரைக்காண அடங்காத ஆவல்! வான்நாடர் கூடி நின்று வாழ்த்தும் வடல் வெளியைக் காணத் தணியாத ஆர்வம்! உண்மையைத் தெரிந்து கொள்ளச் சித்தர்கள் திரண்டு நிற்கும் உத்தர ஞான சிதம்பரமாம் வடலூரை வணங்கும் குறையாத ஊக்கம்! மக்கள் குலம் பசி அடங்கவும், வள்ளலின் வாயுரை கேட்கவும் வந்து வந்து போகும் வடலூரைக் கண்டுவிட வேண்டும் என்னும் உயரிய நோக்கம்! கருத்தினில் களிப்பு பொங்க, வயிற்றினுள் பெரும்பசி பொங்க, வள்ளற் பெருமான் மலரடிகளை வணங்கும் வேட்கை கொண்டு வடல்வெளி நோக்கி வந்துகொண்டிருந்த்து அத் தவவடிவம். 

அவர் ஓர் அடியவர்! விரைந்து சென்று பெருமானின் திருமுன்பு அடியற்ற மரம்போல் விழுந்திட்டார்! 
கண்டுவிட்ட மகிழ்ச்சிக் கண்ணீர்; உணர்ச்சிப் பெருக்கில் உடல் புல்லரிப்பு; தாய்முகம் கண்டு தேம்பும் இளங்குழந்தையின் ஏக்கம் கடைத்தேறும் காலம் வருமா? என்ற வினாவுக்கு விடை கண்ட மனநிறைவு; இத்தனையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கு நிலையில் அருட் சூரியனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அவ்வடியவர் கிடந்தார். வெளியில் ஆட்சி செய்யும் வெங்கதிரின் கொடுமைகளை எல்லாம் அந்த ஒளிக்கதிரவன் மாற்றிவிட்ட அருமை கண்டு ஆற்றாமை கொண்டு வீழ்த்தி கிடக்கும் அடியவரை அரவணைத்து ஆறுதல்மொழி வழங்கினர் வள்ளற்பெருமான். 

2.போதாதாங்காணும்? 

வந்தடைந்த அடியவரின் உள்ளத்துப் பசியையும் வாட்டு வயிற்றுப் பசியையும் ஒருங்கே உணர்ந்திட்டார்கள் பெருமான் கூழை கரைத்து வைத்திருக்கும்படி முன்னரே திருவாய் மலர்ந்திருந்தார்கள் குறிப்புணர்ந்த அன்பர்கள் கூழினைக் கொண்டு வந்தனர். 

நம்பெருமானின் திருக்கைகள் கூழினை ஏந்தி வார்க்கத் தொடங்கின. இருகை ஏந்திக் குடிக்கத் தொடங்கினார் வந்த அடியவர் நமக்கும் கூழ்தானா உணவு என்று அவர் எண்ணவில்லை பெருமான் வழங்குவது பேரமுதமாகுமன்றோ? ஊற்ற ஊற்ற குடித்துக் கொண்டே இருந்தார். வயிறு நிறைந்துவிட்டது. இளைப்பற கிடைத்தக் கூழ் போதும் போதும் என்று சொல்லத் துணிவு எழவில்லை. சற்குருநாதரிடம் சாதாரண அடியவன் எப்படிப் போதும் என்று சொல்வது என நினைத்தார். அதனால் மேலும் மேலும் குடித்துக் கொண்டிருந்தார். அதனை உணரலானார்கள் நம்பெருமான்.

"போதாதாங்காணும்” என வினவி கூழ் ஊற்றுவதை நிறுத்தி கொண்டார்கள். இசைவு கிடைத்த பின்பே அடியவரும் குடிப்பன நிறுத்தினார். பசி ஓடியது! தத்துவங்கள் தழைத்தன அகத்திலும் முகத்திலும் மலர்ச்சி ஏற்ப்பட்டது. ஆன்ம விளக்கமும், கடவுள் விளக்கமும் அதிகரித்தன. ஏழையர் பசி போக்கும் அவ்வுண்மை வழிபாட்டிற்கு ஆட்பட்ட அடியவர் யார்? தொண்டர் யார்?

3.கல்பட்டு ஐயா 

அவர்தான் கல்பட்டு ஐயா! திருநறுங்குன்றத்தில் வள்ள'ல் சென்றெடுத்த நன்மணி! அவரின் உள்ளங் கண்டு உவகை கொண்டு ஏற்றக் கொண்ட இயக்கத் தொண்டர்! 

4.தொண்டர் குழாம் 

நம்பெருமான் திருவடிகளைப் போற்றி நின்றவர்கள் பல ஆட்பட்ட அடியவர்கள் பலர்; மாணவர்கள் பலர். அவர்களுள் கல்பட்டு ஐயா , தொழுவூர் வேலாயுதனார்; இறுக்கம் இரத்தினம், காரணப்பட்டு கந்தசாமியார், கருங்குழி புருடோத்தமானார் போன்றவர்கள் தன்மையானவர்கள் அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர் ல்பட்டு ஐயா காரணம் பெருமான் புகழ்கண்டு போற்றுதற்கு அனைவரும் கூடியவர்கள் கல்பட்டு ஐயாவோ வள்ளலே சென்று ஆட்கொள்ளும் தகுதி பெற்றவர்! 

5.கல்பட்டு

செந்தமிழ் நலம்சார் தெய்வத் திருநாட்டில், நடு நின்று மேம்படுவது நடுநாடே! அத்தகு நடுநாட்டில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள ஊரே கல்பட்டு. அவ்வூரில் தோன்றியவர் கல்பட்டு ஐயா. இவரின் இயற்பெயரும் இராமலிங்கம் என்பதுதான்! இவரின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி, உறவினர் பற்றிய எவ்விதச் செய்தியும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆயினும் சிறுபொழுதிலேயே தெய்வ நறியினை எய்திடும் நாட்டம் இவருக்கு இயல்பாகவே இருந்தது. அதற்குரிய சாதனமாக நல்யோக நெறியினைப் பின்பற்றினார். அம்முறையிலேயே சிறந்து மேம்படவும் முற்பட்டார். 

6.தமிழகப் பயணம் 
அதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். தனது நிலையைச் சிறப்படையச் செய்யவும் பெரியோரை நாடினார். எத்தனையோ பெருமக்களை தவசியர்களைச் சந்தித்தார். யாரும் கல்பட்டு ஐயாவின் அனுபவத்தினும் தலை சிறந்து நிற்கக் கண்டிலர். தனக்கு நெறிகாட்டும் குருமார்களையும் கண்டிலர். இந்நிலையில் தம்மிடம் உள்ள அனுபவமே போதும் என்று மீண்டும் கல்பட்டிற்கே திரும்பினர். 

7.திருநறுங்குன்றம் 

விழுப்புரம்-விருத்தாசலம் இருப்புபாதையில் உளுந்தூர்பேட்டை நிலையத்திலிருந்து வடமேற்கே 16-கி.மீ தொலைவில் திருநறுங்குன்றம் என்னும் ஊர் விளங்குகிறது. அவ்வூரில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் பழமை வாய்ந்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. தற்போது அவ்வூர் திருநறுங்கொண்டை அல்லது திண்ரங்கோட்டை என வழங்கி வருகிறது. 

தனது தவநெறி வாழ்வுக்குப் பொருத்தமான இடம் திருநறுங்குன்றம் என்று கல்பட்டு ஐயா அறிந்தார். ஆதலின் அவ்வூர் சென்றார். குன்றுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அங்கே குடில் அமைத்துத் தவயோக நெறியினைத் தாம் பயின்ற அளவில் பழகி நின்றார். என்றேனும் ஒரு நாள் மேல் நிலைபெறுவோம் என்ற உணர்வில், குன்றாமல் அந்நெறியில் நின்றிட்டார். அத்தகு நிலையில் குன்றிலிருந்து ஊருக்குள் சென்று உச்சிப்போதில் மட்டுமே கையேற்று உண்டு நின்றிட்டார். 

8.யோகக் காட்சி 

வழிகாட்டும் நல்லாசிரியர் தமக்கு வாய்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது. கல்பட்டு ஐயாவின் நல்லதோர் ஏக்கத்திற்கு விளக்கம் கிடைத்தது. அவருடைய யோகக்காட்சியில் குறிப்பிட்ட ஒரு திங்களில், குறிப்பிட்ட கிழமையில், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நாழிகையில் ஓர் ஞானாசிரியர் வந்து, வலுவில் ஆட்கொள்வார் என்ற குறிப்புப் புலனாயிற்று. கிடைக்கப்பெற்ற அத்திருவருட் குறிப்பின்பால், மாறாத நம்பிக்கை கொண்டார் அத்தெய்வத் திருநாளை அன்பர் பலர்க்கும் சொல்லி, ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தார். 

இச்செய்தியினை, "திருநறுங்குன்றத்தில் கல்பட்டு ஐயா என்னும் யோகியார், தமக்கு ஓர் ஞானாசிரியர், இன்ன மாதம், இன்ன தேதி இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, வலிய வந்து ஆட்கொள்வார் என்று தாம் உணர்ந்தபடி, பலருக்கும் உரைத்து, பலரும் சூழ அவரால் குறிப்பிட்ட அதே நேரத்தில் நமது வள்ளற் பெருமான் வருகையை மாறாத நம்பிக்கையுடனும் பேரன்புடனும் எதிர்பார்த்திருந்தார்" என்று இராமலிங்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் எழுதிய பிறையாறு உயர்தவ சிதம்பர சுவாமிகள் குறிப்பிடுகின்றார். 

9.ஞான ஆசிரியர் ஆட்கொள்ளல் 

எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருளும் நம்பெருமானுக்குக் கல்பட்டு அடியவரின் வேட்கை புலனாயிற்று; அருள் தவிப்பு விளங்கியது. 

மாறாத அன்பும் மங்காத நம்பிக்கையும் பூண்டு நிற்கும் அடியவரின் திருவூர் நோக்கி, மாட்டு வண்டி புறப்பட்டது. வடற்பெரு வெளியின் வேந்தரைச் சுமந்து கொண்டு தன் நடையில் சென்றது அது. திருக்கோயிலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்து வண்டியை அனுப்பிவிட்டு வள்ளற்பெருமான், தாம் மட்டும் திருநறுங்குன்றத்திற்கு நடந்தருளினார்கள். 

எவ்வுயிர்த் திரளும் தன் உயிர் எனவே எண்ணி இன்புறச் செய்யும் நம் பெருமானின் பொன்மலரடிகள் அவ்வூரிலும் பதியலாயின. கன்று இருந்து இடம் நாடிக், காராம் பசு செல்வது போல், மன்றிலே நடமிட்டுக் களிக்கும் திருவடிகள், நறுங்குன்றத்து மலைமேலும் நடைபயின்றன. 

கருணாமூர்த்தியின் பேரருட் கண்மலர்கள், கல்பட்டாரின் குடிலின் மீது தோய்ந்திடலாயின! இரக்கத்தின் திருவுருவின் வரவினை எதிர்பார்த்து, எழுச்சியுடன் கூடியிருந்தனர் பலர். குறித்த காலத்தில், குடிலில் அடிவைத்துப் புகுந்திட்டார் அருட்பிரகாசர். கருங்கல் மனத்தினையும் கசிந்து உருக்கும் வடிவினையும், பேரின்ப நிலையினை வளர்க்கின்ற கண்களையும் ஒளி எனவும் வெளி எனவும் விளங்கும் திருவடிமலர்களையும் கண்டுவிட்டார் கல்பட்டார்! 

உள்ளந் துடிக்க, உயிர் துடிக்க, உணர்ச்சி வெள்ளம் உடல் முழுதும் பரவி, மயிர்க்கால் சிலிர்க்க, உணர்ந்தபடி வந்து அருளிய திருவுருவங் கண்டு, அடியற்ற மரம்போல் வீழந்தார்; கண்ணீர் மலர்களால் திருவடிகளை அர்ச்சித்தார்; மகிழ்ச்சிப் பெருக்கால் விம்மினார்; அருட்சத்தியின் திருக்கரம் பற்றிய வள்ளலின் தெய்வத் திருக்கைகள் கல்பட்டு அடியவரைப் பற்றித்தூக்கிடலாயின. 

மறையமுதம் பொழிகின்ற பெருமானின் மலர்வாய் இன்பத் தேன்துளிகளை வழங்கியருளியது! கல்பட்டு அடியவரும் மற்றும் உள்ள அன்பர்களும், பெருமானின் திருவரவால் பெரும் பூரிப்பும், பேரெழுச்சியும்,பேருணர்ச்சியும் உற்று நின்றிட்டார்கள்!
 
"பண்ணிய பூசை பலித்தது! பலித்தது! பரவினேன்; பணிந்தேன்; பதமலர் சூடினேன்; எண்ணிய படியே என்னை ஆட்கொண்டு செல்லுங்கள் என் இன்னுயிர் நாயகரே" என விரும்பி வேண்டி வணங்கினார், கல்பட்டார். 

சற்குருமணியின் சந்நிதானம் அடைவோம்; உயிர் தொண்டு செய்து துயர் துடைப்போம்; கிடைத்தற்கரிய அறிவுச் சுடரைப் பெற்று விட்டோம் என்று பூரித்து மனக்களிப்புற்றார் அவர். நம்பெருமானோ, "உத்தரவு தருவோம். அப்போது வந்தடையலாம்" என்று மெய்ம்மொழியினை அருளினார்கள். 

மெய்ஞ்ஞான தேசிகரின் கட்டளைக்கு அட்டியும் உண்டோ? முடிதாழ்ந்து, அடிபணிந்து, அதனை முடிமீது கொண்டிட்டார் அவ்வடியவர். இச்செய்தியினை வள்ளற் பெருமானுக்குத் தொண்டு பூண்டு, அவர்களையே வழிபாடு கடவுளாகச் கொண்டு, வாழ்நாள் எல்லாம் திருவருட்பா இசையமுதில் தோய்ந்தது, பிறரையும் தோய்வித்துச் சிறந்து சீடராக வாய்த்த, காரணப்பட்டு கந்தசாமி என்பார், 

அருயோகம் செய்கல்பட்டார் சங்கற் பம்போல் 
திருநறுங்குன் றத்தவர்க்குத் தீக்கைசெய்த சற்குருவே 
திடஞானம் பெற்றுய்யத் தீக்கைசெய்த பின்னர் 
வடலூரில் வந்திருக்க வாய்மலர்ந்த சற்குருவே! 
(சற்குரு புலம்பல் கண்ணி 52,53) 
என்று பிரபந்தத் திரட்டு என்னும் நூலில் தெரிவிக்கின்றார். 

இதிலிருந்து நம்பெருமான் கல்பட்டாரை ஆட்கொண்ட  
செய்தியினை அறிய முடிகிறது. மேலும் இசைப்பாட்டாக்கி காட்டுகின்றார் இவ்வரலாற்றுச் செய்தியினை. 

பல்லவி 
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா ஸ்ரீ ராமலிங்கையா 
கருணை செய்ய எமக்கிங்கு ஆரையா? 

அநுபல்லவி 
மதிதரு வடற்சபை ஸ்தாபக 
மதிதலம் புகழ்பெறு வியாபக 

சரணம் 
செல்வர்கள் சூழும் திண்ரங் கோட்டை மலையிற் 
சேர்ந்திருந்து அஞ்ஞானம் ஏக சிறந்தகற்பட் டிராமலிங்கப் 
பிள்ளை சிவயோகம் பன்னா ளாகச் 
செய்திருந்துந் தன்னைத் தலைவனை விளக்கும் செய்யகுரு 
வலிந்தே வந்து கிளக்கும் சிந்தைமேற் கொண்டிருக்கப் பலர் 
மதிக்கும் திறன் அறிந்தோமைத் தக்கவர் விதிக்கும் 
இராமலிங்கசுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை -11 

எனவே அவரை வலிந்து ஏற்றுக் கொண்ட உண்மையைச் காரணப்பட்டார் பாடல்களால் அறிகிறோம். அச்செய்தியினை உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும் தெரிவிக்கின்றார். 

இலகும் கல்பட்டு ஐயா என்று இசைக்கும் யோகி குருபரனார் 
வலிய அணைந்துஆட் கொண்டருள வருதல் வேண்டும்எனும் விருப்பம் 
நிலவி நறுங்குன் றப்பதியில் இருந்தார்! நிமலன் அதனை அறிந்தே 
அலகில் அருளால் அடைந்து அவர்க்கும் தீட்சை அளித்து 
                                                   இராமலிங்க சுவாமிகள் சரிதம் 


மேலும் நம்பெருமான் 2-8-1866-ல் ஒரு திருமுகம் வரைந்தருளினார்கள். அத்திருமுகம் காட்டு செய்தி: 
இஃது 
திருநறுங்குன்றம் மகாராஜராஜஸ்ரீ நயினார் இராமசாமி 
நயினாரவர்கள் திவ்ய சமூகத்திற்கு 

உ 
சுபம் உண்டாக சுபம் 
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்த சிவத்தைப் பொருள் என்று உணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம். வந்தனம். 

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடிக் கேட்க விருப்பமுடையவனாக இருக்கிறேன். 

அன்புள்ள ஐயா! சுமார் இருபத்தைந்து தினத்திற்கு முன் 
இவ்விடத்திலிருந்து சிவஞான விருப்பினராகிய ராமலிங் மூர்த்திகளும் சண்முகப்பிள்ளை என்பவரும் தங்களிடம் போய்வருவதாக் குறித்து வந்தார்கள். 

அவர்கள் அவ்விடம் வந்திருப்பது வேறிடம் போயிருப்பதும் தெரியவில்லை. தங்களிடத்தில் அவர்கள் இருந்தால் தற்காலம் அவ்விடத்தில் மழையில்லாமையால் மிகவும் நிர்ப்பந்தமாக விருப்பதாய் கேள்விப்படுகிறேன். ஆதலால், தாங்கள் அவர்களை இவ்விடம் வரும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களிடத்தில் இல்லாமல் வேறிடத்திலிருந்தால், அவ்விடம் இவ்விடமென்று எனக்குத் தெரிவிக்கவேண்டும். தாங்களும் சிவத் தியான சகிதர்களாய்தேக விஷயத்திலு மற்றைக் குடும்ப விஷயத்திலும் சர்வ சாக்கிரதையோடு இருக்கவேண்டும். நற்குணத்திலும் சிவபக்தியிலும் சிறந்த தங்கள் தம்பியார்க்கும் தங்கள் புத்திர சிகாமணிக்கும் க்ஷேமம் குறிக்க வேண்டும். நான் தற்காலம் கூடலூரிலிருக்கிறேன். வந்தனம், நமது ராமலிங்க மூர்த்திகளுக்கும் வந்தனம். 

அக்ஷய-ளூ ஆடி/மீ/உ 19 
இங்ஙனம் சிதம்பரம் இராமலிங்கம் 

"இதனால் கல்பட்டு சுவாமிகளை அடிகள் ஆட்கொண்டது 1866க்கு முன்னரே என்பது பெறப்படுகிறது" என்று உயர்தவ ஊரன் அடிகளார் எம் எழுதிய இராமலிங்க அடிகள் வரலாற்றிலும் தெரிவித்துள்ளனர். 

10.உத்தரவு வந்தது 

சன்மார்க்க சங்கம் தொடங்கிய காலையிலேயே அஃதாவது தருமச்சாலை தோற்றுவித்ததற்கு முன்பே கல்பட்டு அடியவர்க்கு வள்ளற்பெருமாள் உத்தரவு வந்தது! 

காலம் கனிவதற்கு காத்துக் கிடந்த அன்பர்க்கு உவகை ஏற்பட்டது. ஞானப் பயிர் வளர்க்கும் நோக்கோடு ஞானச்சேவடிகட்கு ஈனமில் பணி செய்திடும் திடத்தோடு புறப்பட்டார் கல்பட்டார். 

11.ஞானாசிரியரைக் காணல்! 

கருங்குழியினை வந்தடைந்தார்; பெருங்கருணை மலரடிகளைத் தொழுதிட்டார்; அழுதார்: மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளத்தைக் குளிப்பாட்டினார்; கண்ணீர் வெள்ளமோ உடலைக் குளிப்பாட்டியது! அவர் உணர்ச்சிப் பெருக்கினை உணர்ந்த நம்பெருமான் அரவணைத்து ஆட்படுத்த வேண்டும்தானே? ஆனால் கல்பட்டார்க்குப் பின்னும் ஓர் உத்தரவு பிறந்தது! 

"ஆறுமாத காலம் பூர்வ ஞான சிதம்பரமாகிய தில்லையம் பதியிலிருந்து, பின் நம்மை வந்தடையுங்காணும்" என கட்டளை இட்டார்கள் பெருமான். திருக்குறிப்பின் நோக்கம் திருத்தொண்டர்க்கு புலனாயிற்று. மாமறைகளும் சூடரும் பாத முடிகளைச் சூடிக்கொண்டு பயணமானார் கல்பட்டு ஐயா. 

12.தில்லை வாழ்க்கை 

சிதம்பரம், திருமூலர் சிவயோகத்தில் திளைக்கின்ற இடம்; பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆனந்த நடங்கண்டது. நந்தனார் ஒளிப்பிழம்பில் ஒன்றியது; மாணிக்கவாசகர் சுத்த வெளியில் கலந்தது சீர்காழி முத்துத்தாண்டவர் ஆடுகின்ற சேவடியை அடைந்தது. 

எனவே ஒப்பற்ற தில்லைச் சிற்றம்பலத்தில் பூர்வ ஞான சிதம்பரத்தின் பெற்றிகள் விளங்குவதனால், அங்கிருந்து பயின்ற மேம்பட வேண்டும் என்றே வள்ளற்பெருமான் தம் அடியவரை அனுப்பி வைத்தார்கள். பெருமான் அருளிய வண்ணம் ஆறு மாதங்கள் தில்லைக் கூத்தனுக்கு அடிமை பூண்டார் கல்பட்டார். அதன் பின்னர் மீண்டிட்டார் வடல் வெளிக்கு! அப்போதுதான் கோடை காலமும் கடும் வெப்பமும், கொடுங்கோல் ஆட்சி புரிந்தது. அருள்வெளியாம் வடலூரின் அறச்சாலையில் கூழ் அருந்தி நின்றார் அக்காலையில்தான், "போதாதாங்காணும்" என்று வள்ளல் பொன்னுரை வழங்கியருளினார்கள்! 

13.சிலுகிழைக்காதீர்கள்! 

அப்போது பெருமானின் ஆணையின்படிச் சாலையின் கிழக்கு பக்கத்தில் கிணற்றிற்கருகில் இருந்த குடிலில் புகுந்திட்டார் ஒருமையுடன் வள்ளலின், திருவடி மலர்களைத் தியானித்து யோகத்தில் அமர்ந்திட்டார். “எண்ணிய வண்ணம் இரு" என்ற இடத்தில் இருந்தது மனம். அவ்வாறு இருந்தது ஒரு சில மணிகளும் அல்ல. ஒரு வாரத்திற்குப் பக்கமாக, அப்படி ஒருமுகப்பட்டு ஒன்றி நின்றா அவரது நிலை பலருக்கும் வியப்பளித்தது. அவ்விடத்தில் சூழ்ந்து நிற்கத் தொடங்கினார்கள். அடியவரின் ஒருமைக்கு ஏதேனு இடையூறும் நேரலாம் என்று உணர்ந்த வள்ளற்பெருமான "சிலுகிழைக்காதீங்காணும் எழுந்து வருவார்; பொறுத்திருங்கள்” என்ற தொல்லை கொடுக்காதிருக்கும்படித் கட்டளையிட்டார்கள். ஞான தேசிகரால் ஆட்கொள்ளப்பெற்ற கல்பட்டார் தன்னை மறந்து பரவச நிலை எய்தினார்.

14.ஓலைக்குடில் யோகம் 

அதற்குப் பின்னர் பரவசநிலை மாறிப் பன்முறை பணிந்து நம்பெருமானைப் போற்றி நின்றார். யோகநிலை மாறாது விளங்க தனியிடம் தந்தருளினார்கள் வள்ளல். அங்கே ஒளிவளர் உணர்வில் யோக நித்திரை செய்தது அவ் யோகக் குழந்தை. அக்குடில் இப்பொழுதும் சாலைக் கிணற்றில் தென்புறம் திகழ்கின்றது. 

சாலை, பிணி தீர்க்கும் மருந்தகம். பசிப்பிணி ஒரு புறம்; அறியாமைப் பிணி மற்றொரு புறம். வருவார் வகை அறிந்து மருந்தளித்தார்கள் வள்ளற்பெருமான். பசிப்பிணிக்கு ஆவன செய்தபின் அறிவுப் பசியையும் கவனித்தார்கள். அன்பர்கள் தரம் அறிந்து சொற்பொழிவு செய்தார்கள். கல்பட்டாருக்கு வேண்டிய பகுதிகள் வருங்கால் வள்ளலே அவ்வடியவரை திருச்சமுகத்திற்கு அழைப்பித்தருளுவார்கள்; உரைப்பன உரைத்தருளுவார்கள்; மெய்யமுதம் ஊட்டுவார்கள்; மேன்மைக்கு வழி காட்டுவார்கள். பெருமான் கழலினை நினைந்து ஒளிவளர் ஞான தீபத்தினின்று உருவாகும் உணர்வினைப் பருகிப்பருகிப் பரவசம் அடைந்திட்டார்! 

15.உம்மைச் சொல்லவில்லைங்காணும்! 

ஒரு சமயம் சாலையில் வள்ளல் கருத்து மாமழை பொழிந்து கொண்டிருந்தார்கள். மழைபெய்தாலும் உழுது வைக்காத நிலத்தில் 'ஈரங்காக்காது அதைப்போல பக்குவம் அற்றவர்களுக்குச் சொல்வதெல்லாம் வீண் என்று கருதினார்கள் போலும்! சொற்பொழிவிற்கு இடையில், "இதுகாறும் அறிவுறுத்தியும் நூற்றில் ஒருவரேனும், ஆயிரத்தில் ஒருவரேனும் தேறவில்லையே” என்று வருந்தி உரைத்திட்டார்கள். 

அதுகேட்டுக் கூட்டத்தார்கள் அனைவரும் இடித்த புளி போலும் எழுச்சி இன்றி இருந்திட்டார்கள். ஐயாவின் உரை ஒளி, பக்குவப்பட்டுள்ள கல்பட்டாரின் நெஞ்சக் கண்ணைத் தாக்கியது; கூசி ஒடுங்கினார்; உடல் படபடத்தது; சோபம் மீதுற சோர்ந்து வீழ்ந்திட்டார்; ஆற்றொணா துயர்க் கடலில் அழுந்திட்டார்! 

அது கண்டேனும் யாரும் தம்மை அலட்டிக் கொள்ளவில்லை ஏன் வீழ்ந்தார் என்று எண்ணவே அவர்களால் முடியவில்லை. எவ்வுணர்வும் அற்றவர்களாகவே இருந்தார்கள்! 

அடியவரின் மனநிலை அறிந்தவர்கள் நம்பெருமான் எனவே அயர்ந்து விழுந்தவரை விரைவாக எடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள். அயர்வினை நீக்கினார்கள் உணர்ச்சியும் விழிப்பும் பெறச்செய்தார்கள்! தன் நிலைக்கு வந்ததும்.
 
“உம்மைச் சொல்லவில்லைங்காணும்” என்று ஆறுதல் மொழி கர்ந்தருளினார்கள். 

தலைமை சான்ற சாதகன் ஒருவன் தான் தேற வில்லை என்று உணர்ந்தால் அப்படித்தான் அவனுக்குச் சோபம் உண்டாகும். அத்தோடு ஆருயிரினை விட்டு விடக் கூடத் தயங்கமாட்டான். அத்தகைய தீவிரதரம் உத்தமப்பக்குவம் வாய்க்கப்பெற்றவராகக்கல்பட்டு அடியவர் மேம்பட்டு விளங்கினார்! 

16.தொண்டு செய்வது உண்டுங்காணும் 

மாறாமல் ஒளிரும் யோகத்தில் அயராது திளைத்திட்டார் கல்பட்டார். அதன் காரணமாகத் தாளாத வெப்பத்திற்கு ஒருமுறை அடியவர் ஆளானார்; உடல் முழுவதும் சிரங்கு கண்டதாகவும், நீர் பெருகி அது ஆற நீண்ட நாட்கள் ஆயிற்று எனவும் கேள்வி.
 
அத்தகு நேரத்தில் நாளும் உணவு எடுத்துச் சென்று கல்பட்டு ஐயாவுக்குத் தர கட்டளையிட்டார்கள் பெருமான். இடையில் ஒருமுறை வள்ளல் வெளியூருக்கு எழுந்தருளினார்கள். சாலை அன்பரை அழைத்து மறதியின்றிக் கல்பட்டுக்கு உணவு வழங்கும் படித் திருவாய் மலர்ந்திருந்தார்கள். 

சாலை அன்பர்கள் மேலை அன்பர்கள் ஆகிவிட்டனர்; அவரை மறந்து விட்டனர். எனவே கல்பட்டு ஐயாவுக்கு உணவு செல்லவில்லை."உண்கின்றீர்களா?” என்று கேட்கவும் இல்லை இப்படியே சில நாட்கள் இருண்டு உருண்டன! 

வெளியூரிலிருந்து நம்பெருமான் வடல்வெளிக்கு, திரும்பினார்கள். வந்தவுடன் “கல்பட்டுக்கு உணவு போயிற்றோ என்று வினவினார்கள். எல்லோரும் கல்லாய்ச் சமைந்து விட்டனர். மாற்றம் யார் சொல்லுவர்? என்னவென்று சொல்லுவர்? வாயடைத் நின்றனர்! "பிச்! (பைத்தியம்) உணவு கொண்டு வாருங்காணும்" என்று ஏவலிட்டருளி தாமே உணவு கிண்ணத்துடன் கல்பட்டாரிடம் புறப்பட்டருளினார்கள். 

வள்ளற்பெருமான் எழுந்தருள்வதைக் கண்டுவிட்ட கல்பட்டார் பதைபதைத்தார்! உணர்ச்சி வயமானார்கள்! "அடியேனை அழைத்திட்டால் ஆங்குவர மாட்டேனோ? எதற்காக இவ்வண்ணம் எழுந்தருளியதோ? மன்றில் ஒளிரும் சேவடிகள் அன்றுவந்து மலையேறி ஆண்டதுதான் போதாதோ? இன்றும் இப்படியும் மண்ணுறுத்த எழுந்தருள எண்ணியதோ? என்ன செய்வேன்? என்ன செய்வேன்? என்வினை இப்படியும் ஆயிற்றோ?" என்று ஆற்றாமை கொண்டு அவதிப்பட்டார்! 

அஃதுணர்ந்த நம்பெருமான்,"அடியார்களுக்குச் சிவ ஞானிகள் தொண்டு செய்வது உண்டுங்காணும் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். கல்பட்டு அடிகளின் கையில் தாமரை இலையை வைத்தருளினார்கள். சோற்றினை உருட்டி உருட்டி வைத்தருளினார்கள். அச்சமும் நாணமும் அயர்ச்சியும் சோர்வும் அப்படியே கெளவிக் கொள்ள, வாங்கி வாங்கி உண்டு வயிறு புடைத்து நின்றார் கல்பட்டார். 

தேவர்களும் மூவர்களும் ஒரு சிவஞானியைக் கண்டு வழிபடுவது அரிதினும் அரிதாம். வள்ளற்பெருமானை ஒத்த சிவஞானிகள் தொடர்பு யாரோ சிலருக்குத் தான் கிட்டப்பெற்றிருக்கின்றது. அத்துணை பேரும் கொடுத்து வைத்தவர் அல்லவா? அதிலும் சிவஞானப் பெருஞ்செல்வர் செய்யும் தொண்டினை, ஏழைக் கல்பட்டார் ஏற்ற எளிமை தான் என்னையோ! என்னையோ! 

17.ஏழைகளுக்கு இரங்குங்காணும்! 

சாலைக்கு வருவோர் பலராவர், அவர்களுள் வசதி வாய்ந்த வரும் உண்டு; வசதி அற்றவரும் உண்டு அவர்களுக்கு எப்படி உதவுவது? அதுபற்றித் தெரிவிக்க, ஒரு நாள் கல்பட்டு ஐயாவையும் தலை மாணாக்கரையும் வள்ளல் அழைப்பித்தருளினார்கள். 

"ஒன்று உரைப்பேன், ஊன்றிச் செய்யுங்காணும்” என்று உரைத்திட முற்பட்டார்கள். 
"எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழையர் முகத்தை இங்குள்ளவர் பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு வண்டியது கிடைத்துவிடும். ஆதலின் அக்கறை வைத்து ஆதரவற்றவர்கள் பசிநீங்க, கூழினைக் கண்ணும் கருத்துமாக பார்த்து வாருங்கள்" என்று அறிவுறுத்தினார்கள் அது முதற்கொண்டு தலை மாணவரும் கல்பட்டு அடியவரும் போட்டி போட்டுக் கொண்டு நான் நீ எனக் கூழை வார்த்து ஏழையர் வயிற்றுள் பற்றியெரியும் நெருப்பைத் தணித்து வந்தார்கள். 

அத்தகைய உத்தமப் பணியைச் செய்ய நம் பெருமான் யாருக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்? உண்மை அன்பு, உண்மை இரக்கம், உண்மை நம்பிக்கையுடைய உண்மை தொண்டர்கட்கு அன்றோ! 

18.மகத்துகள் 

பெருமானை அண்டி அருள்நெறி பழகும் அன்பர்கள் பலருள் தலை நின்றவர் கல்பட்டு ஐயா! உண்மைச் சாதனத்தில் தோய்ந்து உண்மை அடிவராய் விளங்கியவர் கல்பட்டு ஐயா. சன்மார்க்கச் சங்கத்துச் சாதுக்களின் வரிசையில் முன் நின்றவர் கல்பட்டு ஐயா. அவரைச் சன்மார்க்கச் சங்கத்து மகத்து அதாவது மகாத்மா என்று அக்காலத்திலேயே அழைத்தனர். 

ஒருகால் நம்பெருமான் தொழுவூர் வேலாயுதனார் பாடல்களை ஆய்ந்து உபயகலாநிதிப் பெரும்புலவர் என்னும் உயரிய பட்டத்தினை வழங்கி மகிழ்வித்தார்கள். அப்படித் தலைமாணாக்கரின் பாடல்களைப் 
பார்வையிட்ட போது, அது சன்மார்க்கச் சங்கத்து சாதுக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அப்பட்டமளிப்பு விழாவிற்குக் கல்பட்டாரும் நம் பெருமானால் அழைக்கப்பட்டார்.  இச்செய்தியினை, தொழுவூராரின் திருமகனார் திருநாகேசுவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

"ஒரு காலத்தில் இந்நூலாசிரியர் (தொழுவூரார்) பத்தியினால் பொறித்து வைத்திருக்கும் பாக்களை தர்மலிங்கபிள்ளை, வெங்கடேச ஐயர், ஆடூர் குருக்கள் என்னும் சபாபதி சிவா சாரியார் முதலியர் மூலமாகக் கேள்வியுற்று சுவாமிகள் அவைகளை வரவழைத்து அவ்விடம் கூடியிருந்த சமரச வேத சன்மார்க்க சங்கத்தினராகிய ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள், கல்பட்டு இராமலிங் சுவாமிகள் முதலிய மகத்துகள் முன்னிலையில் தானும் உடனிருந்து அவைகளின் சொற்சுவை, பொருட்சுவை முதலியவைகளைளை ஆராய்ந்து வியந்து,"நமது முதலியாரப்பா மதுர வாக்கிது; வித்துவா பாட்டிது” என்று இடையிடையே அருமை பாராட்டி, "மலர்வாய் மலர்ந்த மணிவார்த்தையிது” என்று தமது திருக்கரம் கொண்டே வரைந்து "உபயகலாநிதிப் பெரும்புலவர்" என்னும் பட்டமளித்துப் பொறித்து வைத்துங் களித்தனர்"
                                 மார்க்கண்டேய புராணம், தொ.வே.வரலாறு. 

மேற்குறித்த வரலாற்றுச் செய்தியின் மூலம் கல்பட்டு ஐயா சன்மார்க்கச் சங்கத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்ட மகத்துகளுள் ஒருவர் என்பது தெரிகின்றது. 

19.கிடக்க விரும்புதுங்காணும்! 

ஒருகால் மாட்டு வண்டியில் செய்தார்கள் நம்பெருமானு கல்பட்டாரும். இடையில் பெருமான் கல்பட்டாரை நோக்கி, "கிடக்க விரும்புதுங்காணும்" என்று படுத்திட விரும்பினார்கள்! உடனே கல்பட்டு ஐயா நம்பெருமான் திருமுடியினைத் தம் தொடைமீது வைத்து தாங்கிக் கொண்டார். அவ்வாறு கல்பட்டாரின் தொடையில் நம்பெருமான் விரும்பியே படுத்திட்டார்கள்! 

கல்பட்டாரின் தொடையில் வள்ளல் தம் திருமுடியினை வைத்து படுத்திடும் புண்ணியம் எந்த அடியவர்க்கு இதுவரை கிட்டியது? நம் பெருமான் சாதாரணமானவர்கள் அல்லவே! எல்லாம் வல்ல இறைவனின் அடியினை அறிந்தவர்கள்; நடுவினை அறிந்தவர்கள் முடியினை அறிந்தவர்கள்! 

அம்மட்டோ? எல்லாம் வல்ல இறைவனின் அடி நடு முடி கடந்து, அப்பாலும் அப்பாலும் கண்டிட்டவர்கள்! அத்துடன் அது அதுவாக நிறைந்து ஆண்டவனாக விளங்கி நிற்பவர்கள். 

அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடித்தவர்கள் அல்லவா நம்பெருமான்? 
அப்பெருமானின் அற்புதத் திருமுடியைத் தாங்கும் பெரும் பற்றினைக் கல்பட்டார் தொடைகள் பெற்றன. ஒப்பற்ற அப்பேற்றினைப் பெறுதற்கு எத்தனை கோடி தவந்தான் கல்பட்டாரின் தொடைகள் செய்தனவோ? யாரே பெறுவார் அப்பேறு?

20. உலகமெலாம் இப்படி இருக்கிறதேங்காணும் 

அருட்பிராகச ஆண்டவரையும், பெரும்பேறு பெற்ற அடிய வரையும் தாங்கிக் கொண்டு, வண்டி சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது வியப்புக்குரிய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது! 

நமது பெருமானின் திருமலர்க் கண்களினின்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்ஙனம் பெருகிய கண்ணீர் கல்பட்டாலின் தாடையை நனைத்தது. பின்னும் கண்ணீர் வழிந்து வண்டி பலகையையும் ஈரப்படுத்தியது. மேலும் வண்டிப் பாரையுங் கடந்து கீழே வழிந்து கொண்டிருந்தது. அப்படிச் சிறிது நேரம் மட்டும் நிகழவில்லை சிலமணி நேரம் தொடர்ந்து நிகழ்ந்திட்டது! 

அதனைக் கண்டார் கல்பட்டார். எதுவும் எண்ணவில்லை. மனம் அடங்கிய நிலையுற்று ஒருமையில் நிறைந்தார். அப்படிப் பெருமான் விழி நீர் வடிப்பதும் கல்பட்டார் மனம் அடங்கி ஒருமையில் இருப்பதும், தொடர்ந்து கொண்டிருந்தது. நெடு நேரம் கடந்தும், பெருமான் கண்ணீர் பெருக்குவது நின்றபாடில்லை. மனம் விரிந்து, கண்ணீர் பற்றி சிந்திக்குமானால், பெருமான் கண்ணீர் பெருகும்நிலை கலையுமே என்று கருதியவராய் கல்பட்டு ஐயா, மேலும் ஒருமுகப்பட்டு உள்முகத்தில் நின்றார். பெருமானின் நிலையோ மாறிடவில்லை. தொடர்ந்திருந்து பார்த்து அயர்ந்தஅடியவரின் ஒருமை கலைந்தது. நெஞ்சம் நினைக்கத் தொடங்கி விட்டது. 

மூவாசையையும் வென்றவர்கள் நம்பெருமான்; சிவஞானப் பெருஞ் செல்வத்தை நிகரற்றுப் பெற்றவர்கள் அவர்கள் அத்தகைய பெருமானுக்கு உற்றகுறை என்னையோ? என்னையோ? எதனால் இப்படி அழுது கொண்டிருக்கிறார்கள்? என்று நினைத்தார் அடியவர்! 

அவர் நினைவைப் பெருமான் உணர்ந்திட்டார்கள். உடனே எழுந்து கண்ணீரைத் துடைத்தவாறு, "பிச்! அதற்கு இல்லைங்காணும்; இந்த உலகமெலாம் இப்படி இருக்கிறதே என்கிறதுக்குத் தாங்காணும்!” என்று உரைத்தருளினார்கள். 

கல்பட்டாரின் விரிந்த நினைவு பெருமானின் நிலையை மாற்றிவிட்டது. அருள்நெறியைக் காதலித்து, உலகமெலாம் துன்பம் அற்று ஒன்றாதல் என்று வருமோ? என்பதனால் அல்லவா இப்படி 
அழுது அழுது ஆராமை அடைந்தார்கள்! உலகமெலாம் பேரின்ப நிலையிற் கலந்து அன்பால் ஒன்றுவது என்றோ? என்னும் கவலையால் அல்லவா பெருமான் விழி நீர் வடித்திட்டார்கள்! இந்த கவலை எத்தனை பேருக்கு இருக்கும் என்று எண்ணி எண்ணி துயரில் அழுந்தினார் கல்பட்டு ஐயா. அந்தோ! உயிர்களின் துன்பமெலாம் ஓடி இன்பெலாம் பாடி ஆடும்நாள் எந்நாளோ? என அயர்ந்திட்டார் கல்பட்டார். 

21.நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்! 

வேதாந்த சித்தாந்த சமரசம் புகட்டும் நூல் ஒழிவிலொடுக்கம் அதனை இயற்றியவர் சீர்காழிக் கண்ணுடைய வள்ளலார். அந்நூலுக்கு விளக்கம் எழுதிப் பதிப்பித்தவர்கள் வள்ளற்பெருமான் ஒருநாள் ஆடூர் சபாபதியார் அந்நூலை ஓதிக் கொண்டிருந்தார் அப்பக்கமாக வள்ளற்பெருமான் சென்று கொண்டிருந்தார்கள் படிப்பதைக் கண்டு நின்றார்கள். 

"என்ன புத்தகம்?" என்று வினாவினார்கள். 
சட்டென்று எழுத்து பணிந்து நின்று "ஒழிவிலொடுக்கம் சுவாமி" என்றார் சபாபதியார். 

"இப்புத்தகத்தை நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்" என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள் வள்ளல். 

சபாபதியார் நெஞ்சம் ஆட்டங் கண்டது. இதை பதிப்பித்தவர்களே இப்படிச் சொல்லுகிறார்களே! காரணம் எதுவா இருக்கும்? என்று தலையைப் பிய்த்துக்கொண்டார். எண்ணி எண்ணி பார்த்தார்; ஏதும் விளங்கவில்லை. 

பெருமானின் உள்ளக் கிடக்கையை விளக்கவல்லாரைப் பற்ற நினைத்ததும், கல்பட்டு ஐயா நினைவு வந்தது. உடனே ஓடினார் கல்பட்டின் முன் நின்றார். அவரிடம் வள்ளல் கருத்தினைச் சொன்னார்' அவர் "நீர் அப்புத்தகத்தை தொடவே அருகரல்லர்!” என்று உண்மையை விளக்கினார். இதுபற்றி இசைவாணர் காரணப்பட்டார் பாடிய பாட்டு ஒன்று பின்வருமாறு உணர்த்துகிறது: 

தாமச் சிடுவித்த நூலை ஆடூர்சிவா 
   சாரியார் அன்பொடு படிக்கத் 
தரியாது எதிர்வந்து அங்கியிற் சுடுமென்று 
   சாற்றிய தால்மனம் துடிக்கத் 
தக்கணங் கல்பட்டு சிவயோ கியரைச் 
   சார்ந்து புகலஅம் மொழிக்கு மெய்யுரை 
தக்கவர் நீரலர் என்று புகன்றிடும் 
  தன்மை யறிந்த எம்போதம் அகன்றிடும். 
               -இராமலிங் சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - சரணம்183 

22. உரையமுதம் உண்ணும் கல்பட்டார் 

வள்ளல் கேட்பவர் மனங்கொள்ளும்படிப் பல பிரிப்பார்கள். ஒருகால் வடகலை வைணவர்க்காக வேதாந்த தேசிகரின் "மூன்றில் ஒரு மூன்று" என்னும் குறளுக்கு நான்கு உரைகள் உரைத்தருளினார்கள். மற்றொருகால் திரிசிரபுரம் மகாவித்வான், பெருமான் திருமுன்பு பணிந்து இங்கித மாலை பாட்டொன்றுக்கு உரையருள வேண்டினார். வள்ளல் முதல் பாட்டுக்கே உலகியல் தொடர்புள்ள பல உரைகளை நான்கு மணிநேரம் விளக்கினார்கள்; அது அவர்க்குப் புரிந்தது. 

மேலும் அனுபவ உரையாகிய பேரின்ப உரையினை சொல்லத் தொடங்கினார்கள். அது புரியாமல் மீனாட்சி சுந்தரனார் திகைத்தார். "தொழுவூராரும் கைவிட்டார்” என திருவாய் மலர்ந்து பெருமான் விரிவுரையை நிறுத்திக் கொண்டார்கள். 

கேட்பவர் பக்குவம் அறிந்து சொல்லும் பாங்கு வியப்புக்குரியது; சமயத்தில் பற்றுள்ளவர்களுக்குச் சைவம், வைணவம் முதலிய சமயச் சார்பான விளக்கம்; மதத்தில் பற்றுள்ளவர்களுக்கு வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதச்சார்பான விளக்கம்; கல்லாதவர்களுக்கு உலகியல் சார்பான விளக்கம்; கற்ற புலவர்களுக்கு இலக்கிய இலக்கணம் பற்றிய விளக்கம்; தொழுவூரார்க்கு உயர்வுடைய விளக்கம்; கல்பட்டு ஐயாவுக்கு அனுபவ விளக்கம் என்று இப்படி தனது கருத்துமணிகளை நம் பெருமான் தந்தருள்வார்கள். 
குருவித் தலையில் பனங்காய் வைக்க அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அவ்வாறு முடிந்த முடிவானதெள்ளமுதக் கருத்துகள் அருந்தி அருந்தி எத்தனைத் தடவைதான் இன்புற்றனரோ கல்பட்டு அடிகள்! 

23.கல்பட்டு ஐயாவின் ஆர்வம் 

சன்மார்க்க சங்கத்தினர் நன்னெறிகளை உலகினர்க்கு உணர்த்திட விழைந்தனர். அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களையும் உலக மக்கள் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்திட உதவ முனைந்தனர்; அங்ஙனம் அறிவதற்கும் அனுபவித்தற்கும் விவேகம் விருத்தியாதல் வேண்டும். 
அதனை அடைவதற்குத் தக்க நன்முயற்சியைத் தரக்கூடிய பத்திரிகை ஒன்றை 1867 க்குப்பின் வழங்குவிக்க இச்சை கொண்டனர். அதற்குச் சன்மார்க்க விவேக விருத்தி எனப் பெயரிட்டனர். அது சிறப்புற நடையிட அன்பர்கள் பலர் நன்கொடைகள் அளிக்க விரும்பினர். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு உதவிட முன்வந்தனர். 

மாதந்தோறும் தாங்கள் தருவதை ஏடு ஒன்றினில் குறித்து கையொப்பம் இட்டனர். கல்பட்டு அடிகளும் அவ்வேட்டில் கையெழுத்திட்டு 2 அணா பொருள் உதவி செய்ய ஒப்புத அளித்தனர். அதன் விளக்கம் பின்வருமாறு; 
வ.எண் ஊர்பேர்                   கையொப்பம்                            துகை                                                                                                                   ரூ.அ.பை
1     சிதம்பரம்                        இராமலிங்கம்                             க   0      0
36  கல்பட்டு                            இராமலிங்கம்                             0    2      0
49  திருநறுங்குன்றம்           சி.தானப்பநாயினார்               0    2      0

ஆதலில் உலகமெலாம் சன்மார்க்கம் தழைத்து ஓங்குவதில் கல்பட்டு அடிகளுக்கு இருந்த ஆர்வத்தினை அறிந்திடலாம். அதில் அவருக்கு இருந்த ஈடுபாடு பெரிது. 

24.அடிமைச்சாசனம் 

நமது பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் தெரிவித்தருள்கின்ற செய்திகள் இவை: 

அவத்தைகள் அனைத்தும் நீங்கிட நித்தியதேகம் பெற வேண்டும். அதுபெறத் திருவருட் சுதந்தரம் வேண்டும். 
பின்னர், திருவருள் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து எனது யான் என்னும் தேக சுதந்தரம், யோக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் என்னும் மூவகை சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரிர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

இவ்வாறு இறைவர் முன்னிலையில் விண்ணப்பித்து பெருவாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் வள்ளல் அவர்களில் வழிவழி வந்த தொண்டர்கள் பலரும் அடிமைப் பத்திரம் எழுதி உடல் பொருள் ஆவியை நம்பெருமானுக்குப் படையல் செய்துள்ளார்கள் அதனையும் வள்ளல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அங்ஙனம் விரும்புகின்றவருடைய தற் சுதந்தரத்தை நீக்கித் திருவருள் சுகந்தரத்தை தந்திடும் உரிமையும் உயர்வும் வள்ளற்பெருமானுக்கு இருந்ததனால் அவ்வாறு அடிமைப் பத்திரம் எழுதிப் பெற்றுள்ளார்கள் 

ஒரு சான்று: 

திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த இரத்தினம் என்பவர் அடிமை பத்திரம்வழி, உடல் பொருள் ஆவியைப் பெருமானுக்கு ஒப்படைத்தார் அவர்தம் விண்ணப்பத்தைப் பற்றி அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
"நான் பிறந்த காலத்தில் என் தாய் தந்தையர்களால் அண்ணாமலை என்று நாமகரணம் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு ராமலிங்க சுவாமிகளால் ரத்தினம் என்ற பெயர் 8வது வயதில் இடப்பட்டது. எங்கள் குடும்பம் என் தகப்பனார் காலம் முதல் சுவாமிக்கு அடிமைப்பட்டு பத்திர மூல்யமாய் உடல் பொருள் ஆவி மூன்றும் தத்தம் செய்து அடிமைப்பத்திரம் என் தகப்பனார் எழுதிக் காடுத்திருந்தார். நான் சுவாமியோடு கூடவே இருந்து அவருக்கு அடிமை செய்து வந்தேன்." 

இவ்வாறு அன்பர்கள் பலர் ஆர்வத்தோடு வள்ளற் பருமானிடம் அடிமைச்சாசனம் சமர்பித்துள்ளனர். வழி வழித் தொண்டர்தம் பெருமை எதனாலும் அளக்கும் தகுதி உடையதன்று. அன்பர்கள் கொள்ளும் ஆர்வத்தினை போல் கல்பட்டு ஐயாவும் நம் பருமானின் திருச்சமூகத்திற்கு அடிமைப் பத்திரம் செய்து தர முன் வந்தனர். ஆனால் ஒரு பெரு வியப்பு! கல்பட்டு அடியவருக்கும் நமது பெருமானே திருக்கைச் சார்த்தி அடிமைச் சாசனம் வரைந்தருளினார்கள். இந்நிகழ்ச்சி வள்ளல் மேட்டுக்குப்பத்தில் விளங்கிய போது 12.5.1872-ல் நிகழ்ந்தது அவ்விண்ணப்பம் ன்வருமாறு அமைந்துள்ளது: 

25. போநாச வந்தனம் செய்த விண்ணப்பம் 

உ 
ஸ்ரீபார்வதிபுரம் என்னும் உத்தர ஞான சிதம்பரத் திருப்பதிக்கண்ணே அகிலாதாரமாய் விளங்கும் ஸ்ரீசமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ்ஜோதியராகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யான் எனும் போதநாச வந்தனஞ் செய்த விண்ணப்பம்: 

எம் இறையவரே! 
இதுபரியந்தம் யானாகத் தேடியதோர் பொருளென்பது இல்லையாகவே; 
தேவாரீர், பெருங்கருணையால் என்னை உய்யக் கொள்ள உபகரித்தருளிய உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுக்கு ஆதாரமாய் இன்றைய வரைவில் என்னைப் ற்றி இருந்தது ஒன்றை யான் பெரும் பொருளாக எண்ணி நின்றனன். 
ஆதலால் அச்சமரச சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் சமூகத்து நிற்கப்பெற்ற விசேடத்தால் அத்தற்சுதந்தரப் பொருளைத் தேவார் பெருங்கருணைச் சந்நிதி முன்னே அர்ப்பித்தனன். 
இனி, தேவரீர் அதனை அருள்வசமாக்கி ஏழையாகிய  என்னையும், என்னையடுத்த சுற்றம், என்னோடு பழகிய நட்பினர் ஆதியரையும் உய்யக்கொண்டருளுக. 

ஆங்கீரச -ளு; வைகாசி-மீ முதல்உ;மேட்டுக்குப்பம் 
இங்ஙனம் அடிமை, க.இராமலிங்கம் 

"இந்த விண்ணப்பம் கல்பட்டு (இராலிங்க) சுவாமிகளுக்காக சந்நிதானமே எழுதி வைத்தது" என்று ஓர் பிரதியில் இத்திருமுக வரலாறு காணப்படுகிறது என்று எழதியுள்ளார் திருவருட்பா பதிப்பித்த பாலகிருட்டினர். 

26. அடிமைப்பத்திரம் 


சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் வள்ளற்பெருமான் விண்ணப்பித்து அருளியது போலவே இவ்விண்ணப்பமும் அமைந்துள்ளது. சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தோடு இந்த அடிமைப்பத்திரம் மிகவும் தொடர்பு உடையது. ஒவ்வொருவரும் உணர்ந்து உய்வதற்கான பல செய்திகளை முறையே கொண்டது. அதனை ஊன்றி நோக்கின் எத்தனையோ பேருண்மைகள் வெளிப்படுகின்றன. 

1. உலகங்கட்குப் பற்றுக் கோடாய் விளங்குவது சமரச வேத சன்மார்க்க சங்கம் 
2. அதன் ஒப்பற்ற தலைவராக வீற்றிருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 
3. ஆண்டவர் திருச்சந்நிதிக்குத் தற்போதம் நாசமடைய விண்ணப்பிக்க வேண்டும். 
4. நாமாகத் தேடியது உடலும் அன்று; உயிரும் அன்று உடைமையும் அன்று 
5. இறைவர் பெருங்கருணையினாலே அம்மூன்றும் நமக்கு அருளப்பட்டன. 
6. அவற்றில் நமக்கு எவ்வித உரிமையும் இல்லை ஆண்டவர்க்கே அம்மூன்றும் உரிமையுடையன 
7. அறியாமையினால் அவற்றை நம்முடையவை என் நம்புகிறோம். 
8. வள்ளற்பெருமானை ஒத்த சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் திருமுன்பு பழக நேரின் நாமும் உரிமையல்லாத அப்பொருள்களை ஒப்படைக்க முன் வருவோம். 
9. தற்சுதந்தரம் நீங்கிய இடத்து தான் திருவருள் சுதந்தரம் கைகூடும். 
10. தன்னை ஏற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது தன்னைச் சார்ந்தவர்களையும் ஆட்படுத்தி உய்விக்க வேண்டுதல் வேண்டும். 

மேற்கண்ட ஒப்பற்ற உயரிய செய்திகள் அவ்விண்ணப்பத்தில் காணப்படுகின்றன; நினைத்தற்கரிய கருத்துகள் அவை; கேட்டற்கரிய உயிர் உணர்வுகள் அவை; அவற்றை நெஞ்சகத்து வைத்துப் போற்றிப் பின்பற்றல் நம்கடன். 

இவ்வளவு அருமை வாய்ந்த விண்ணப்பம் யாருக்காக வரையப்பட்டிருக்கிறது? யார் வரைந்தருளியிருக்கின்றார்கள்? பெறும் பொறுப்பும் பெரும் பேறும் பெற்று நின்ற தகுதி வாய்ந்த பக்குவர் கல்பட்டு ஐயா என்பதனால்தான் நமது பெருமானே அவ்விண்ணப்பத்தினை வரைந்தருளினார்கள்; ஒப்பமும் பெற்று வைத்துக் கொண்டார்கள். 

அவ்வாறு கல்பட்டு ஐயா உடல் பொருள் ஆவி மூன்றையும் தம் சற்குருநாதருக்கு ஒப்படைத்தார். அவர்கள் கட்டளை இட்ட வழியில் நின்று வாழ்ந்திட உறுதியோடு முற்பட்டார். 

27.அருள் நடம் 

எவ்வுலகும் தன் அருள் ஆணையின் கீழ் விளங்கி உய்ய ஞான சிங்காதன பீடத்து அமர்ந்து, அருட்பெரும் தலத்து மேல்நிலையில் செங்கோல் செலுத்தி, அருள் ஆட்சி புரிந்து அருட்பெரும் போகம் சர்வ சுதந்தரத்துடன் துய்த்திருத்தல் பொருட்டாக எவ்வுலகும் அறிய அருள்சத்தியைத் திருமணம் புரிந்தருளி, எங்கும் எவ்விடத்தும் எவ்வுயிரின்பாலும் நம் பெருமான் அருள்நடம் செய்தருளும் காலம் வந்துற்றது. 

28.சித்திவளாகத்தில் கல்பட்டு ஐயா 

1874 ஆம் ஆண்டு ஸ்ரீமுக தைத்திங்கள் பூச நல் நாளில் நம் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்டார்கள். 
அவ்வமயம் உண்மை அன்பர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். அடிமைபூண்ட நேயர்கள் பலர் குழுமி நின்றனர். பெருமானின் கட்டளையின் வண்ணம் திருவறை திருக்காப்பிடப்பட்டது. அவ்வாறு திருக்காப்பிட்டவர்களுள் முதன்மையானவர் கல்பட்டு ஐயா. வள்ளலின் நிறைவின்போது, அவர்களின் கட்டளையை 
நிறைவேற்றும் பெரும்பேறு கல்பட்டு அடியவர்க்கும் கிடைத்தது! திருவருள் ஆணையை நிறைவேற்றும் முதன்மையாளராகக் கல்பட்டு ஐயா விளங்கினார். 

"சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டதும் கல்பட்டு ராமலிங்க சுவாமிகளும் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களும் வெளியில் பூட்டிட்டு சீல் வைத்தார்கள்" 
என்று இதுபற்றிச் சத்திய ஞானசபை வழிபாட்டு விதிகளைக் குறித்து 23-2-1928ல் வாக்குமூலம் அறிவிப்பு கொடுத்திட்ட திருப்பாதிரிப்பூலியூர் இரத்தினம் என்பவர் குறிப்பிடுகின்றார். 

இவ்வாறு நம்பெருமான் ஆணையிடும் இன்றியமையாக் கடமைகளை கல்பட்டு ஐயா நிறைவேற்றும் பொறுப்பினைப் பெற்று விளங்கினார். 

29.சாலைப்பணி 

வள்ளல் அனைத்துயிரினும் நிறைந்து விளங்கும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் திருக்காப்பிட்டுக் கொண்டபின் சத்திய தருமச்சாலையை நடத்துவிக்கும் பொறுப்பினை கல்பட்டு ஐயா ஏற்றுக் கொண்டார் அவ்வாறு மேற்கொண்டு நடத்துவிக்கும் பொறுப்பினை நமது பெருமான் கல்பட்டாருக்கே வழங்கியருளினார்கள். 

ஈரமும் அன்பும் கொண்டு இன்னுயிர்களை ஓம்பும் வேள்வியை அருமைக் கல்பட்டார் செய்துவந்தார். பெருமானின் கருத்தின்படி பசிப்பிணி மருத்துவத்தை அல்லும் பகலும் ஓயாமல் தொடர்ந்து செய்தார். ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல; ஒருபத்து ஆண்டுகளும் அல்ல; சற்றேறக்குறைய கால் நூற்றாண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கும் பக்கமாக சாலைப்பணியினை நயந்து நடத்தினார். அதனால் இம்மை மறுமை பேரின்பத்தால் நிறைகின்ற பெரும்பயனாம் விளைவையெலாம் தருமச்சாலையிலே பெற்றுக் கொண்டார் இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் அல்ல; மெய்மைகளே ஆகும். அதற்கான விளக்கங்களை வடலூர் தெய்வ நிலையங்களின் அலுவலகப் பதிவேடுகள் காட்டுகின்றன! 

30.வழிவழித்தொண்டர்கள் 

சாலைப்பொறுப்பு 1901 வரையில் கல்பட்டு அடிகள் கண் காணிப்பில் இருந்து வந்தது. 6-2-1902ல் அப்பொறுப்பினைத் தமது மாணவராகிய சுப்பராய பரதேசி என்பவரிடம் ஒப்புவித்தார். சுப்புராயர் தெலுங்கு நாட்டுக்காரர். அவர் தொண்டு புரியவே விரும்பி வந்தவர். கல்பட்டு ஐயா வழி, வள்ளற்பெருமானை நன்கறிந்து எதிரற்ற அன்புகொண்டவர். அவருக்கு உதவியாக சாலைப்பணிகளில் தோய்ந்தவர் கட்ட முத்துப்பாளையம் நாராயணர் ஆவார். அவரே 1927ல் பிரபவ வைகாசி 11ஆம் நாள் சாலைத்திருப்பணி முடித்தவர். இச்செய்தியினை பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் பின்வருமாறு குறிக்கின்றார். 

"குறிபிட்ட நாராயணர் அவர்களே சாலையை நீண்டநாள் கல்பட்டு ஐயாவுக்குப் பின் அவர் மாணாக்கராயிருந்து அவர் ஆணைப்படி சத்திய தருமச்சாலையை நடத்தி வந்த தெலுங்கு தேசத்து சந்நியாசியாகிய சுப்பராய சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்து சென்ற பிரவச வருஷம் வைகாசி 11ந் தேதி சுமார் 37 வருஷங்களுக்கு முன் சாலை கட்டிடத் திருப்பணி வேலையை முடித்துப் பிரவேச விழா நடத்தி ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமானார்" 

இதிலிருந்து தொண்டுள்ளம் கொண்டு நெறி நின்ற தொண்டர்களை கல்பட்டு ஐயா உருவாக்கினார்; அவர்கள் தொடர்ந்து சாலையை நடத்தி வந்தனர் என்பது கண்கூடு. இதுபற்றிய சான்றினை 1896 சனவரியில் வெளிவந்த டிரஸ்டு மறுப்புப் பத்திரிகை தெரிவிக்கின்றது. 

"வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட காலமுதல் வள்ளலார் குறிப்பின்படித் தருமச்சாலையில் தரும பரிபாலனம் சிலகாலம் சில சந்நியாசிகள் கூடி நடத்திக் கொண்டு வந்தார்கள்" இதனால் கல்பட்டு அடியவரும் வழிவழித் தொண்டர்களும் சாலையை நடத்தியது புலனாகின்றது. 

31.சமாதி அடைதல் 

வள்ளல் வழியில் மாறாத அன்புகொண்டு பணிசெய்தும் பரஞ்சுடர் கண்டுநிற்கும் யோகம் செய்தும் ஏறக்குறைய 35 ஆண்டுகள் வடல்வெளியில் வாழ்ந்த கல்பட்டு ஐயா, சுபகிருதுஸ்ரீ, சித்திரைமீ 14 ஆம் நாள்(26-4-1902) சனிக்கிழமை, கேட்டை விண்மீன் சதுர்த்தசி கூடிய நாளில் சிவயோகச் சமாதி கொண்டிட்டார். 

அன்பர்கள் அவரைச் சாலையின் கீழ்ப்புறத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கோயிலும் எடுத்துள்ளனர். நினைவு ஆலயமாக இன்று அவைருக்கும் அது வழிகாட்டி நிற்கிறது. 
அதன் முன்பு மேலும் மூன்று சாமாதிகள் உள்ளன. கிழக்குப் புறத்தில் உள்ளது சுப்பராய பரதேசியார் சமாதி; மேற்புறத்தில் உள்ளது நெல்லூர் ஐயர் சமாதி; நடுவிலுள்ளது பிற்காலத்துக் கொண்டார் சமாதி. 
தொண்டு செய்து நம் வாழ்வை நற்பயன் உடையதாக்கி, அங்கே சமாதி கொண்டுள்ள தொண்டர்கள் அனைவரும் நல்வழி காட்டிகளாவர். 

32.கல்பட்டு சுவாமிகள் 

கல்பட்டு ஐயாவை, "கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்” என்று மிகவும் மதிப்போடு அன்பர்கள் குறிப்பிட்டு வந்தனர்; சான்றாகச் கடிதப்பகுதியில், 'போதநாச வந்தன' அடிக்குறிப்பில், "கல்பட்டு இராமலிங்க சுவாமிகளுக்கான” என்ற செய்தியினை அன்பர் ஒருவர் வரைந்திருப்பதாகப் பதிப்பாசிரியர் பாலகிருட்டினர் குறிப்பிடுகின்றார். 

மேலும் தொழுவூரார் திருமகனார் திருநாகேசுவரர் மார்க்கண்டேய புராண தொ. வே. வரலாற்றில், 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்” என்று வரைந்துள்ளார். 
சத்திய ஞானசபை பற்றிய வாக்குமூலம் குறிப்பில் திருப்பாதிரிப்பூலியூர் இரத்தினம் என்பார் "கல்பட்டு இராமலிங் சுவாமிகள்” என்று எழுதியுள்ளார். 
பொதுவாகச் சுவாமிகள் என்று பலர்க்கும் வழங்குவது போல் கல்பட்டு ஐயாவுக்கும் வழங்கப்பட்டதல்ல; எல்லாம் உடையவ ஆட்கொண்டதால் அப்பெயர் நிலவி வருகிறது. இவ்வாறு அன்பர்களால் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்படுகின்ற உயர் நிலையினை உற்றுக் கல்பட்டு ஐயா விளங்கினார். 

33.கல்பட்டு மூர்த்திகள் 

நமது பெருமான் திருநறுங்குன்றத்திற்கு 1866-ல் வரைந் கடிதத்தில் கல்பட்டு ஐயாவைச் "சிவஞான விருப்பினராகிய இராமலிங்க மூர்த்திகள்” என்று குறித்தார்கள். 

சிவயோகப் படியினைக் கடந்து விட்டவர் கல்பட்டு அடியவர். சிவஞானம் பெறும் பெற்றியினை அடையும் விருப்பத்தை உடையவர் அவர். 
நம்பெருமானோ சிவஞானிகள்; கல்பட்டாரோ சிவஞான விருப்பினர்; 
ஆதலில், பெருமானிடத்து மாறாத விருப்பினர் என்றும் சிவஞான நிலையினை அடைவதிலும் என்றும் மாறாத விருப்பினர் என்றும் தெரிகிறது. 

அத்துடன் கல்பட்டு ஐயாவை இராமலிங்க மூர்த்திகள் என்ற சிறப்புக்கொடுத்து குறிப்பிடுகின்றார்கள் வள்ளல்.  மூர்த்திகள் என்னு சொல்வள அமைப்பினைக் காணுங்கால் கல்பட்டு ஐயா மூர்த்திகள் பதம் பெற்றவராக விளங்கினார் என்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி திரிமூர்த்தி, பஞ்சமூர்த்தி, தட்சணாமூர்த்தி, புண்ணிய மூர்த்தி முதலா தொடர்களை ஆழ்ந்து எண்ணிடல் வேண்டும். அதன்பின் இராமலிங் மூர்த்திகள் என்பதையும் எண்ணிடல் வேண்டும். பெருமான்பால் சூழ நின்ற அன்பர்களுள் கல்பட்டு ஐயாவே மேற்குறிப்பிட் மூர்த்திகளுக்கான பதத்தகுதியினைப் பெற்று விளங்கினவர் என்ற தெரிகிறது. 


34.வழிபாட்டு முறைமை 

ஆதலினால்தான் பெருமானின் வழிபாட்டோடு நாளும் கல்பட்டடு ஐயாவுக்கும் வழிபாடு நடத்து வருகிறது. குருவாரங்களிலும் பூசநாட்களிலும், வள்ளல் அவதார நாளிலும், வைகாசி 11, தைப்பூச போன்ற சிறப்பு நாட்களிலும், சாலையை வலம் வருவதுபோல் அன்பர்கள் கல்பட்டு ஐயா கோயிலினை வலம் வந்து பாடிப் பரவி பணிந்து, ஆராதனை செய்து, வழிபடுகின்றார்கள். 
அங்கு சை அடியார் நால்வருக்குமான வள்ளல் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல்களைத் தோத்திரம் செய்கிறார்கள் அப்படியானால் கல்பட்டாரும் நான்கு அடியார்களைப் போல ஓர் அடியாராகச் சன்மார்க்கத்தில் திகழ்கின்றார் என்று கொள்ளத் தானே! 

ஆதலால் மரபு தெரிந்த அன்பர்கள் பலரும் வழிபட வருங்கால் முதன்முதலில் கல்பட்டு ஐயாத் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றார்கள்; ஒருமை உணர்வோடு உள்முகத்தில் ஒன்றியும் அங்கே அமர்கின்றார்கள். மேலும் அப்போது வெளிப்படுகின்ற உணர்ச்சிப் பெருக்கால் தமக்கு வேண்டிய இம்மை மறுமைப் பேரின்பங்களை விண்ணப்பிக்கும் முன்நிலை இடமாக அவ்விடத்தை கொள்கின்றார்கள். அவ்வகையில் கல்பட்டு ஐயாவிடத்தில் பரிசுத்த உள்ளத்தோடு வழிபாடு செய்து பெருமானிடத்தில் உண்மை உணர்வுடன் வழிபட்டுப் பல பயன்களை அன்பர்கள் பெற்று வருகிறார்கள். 

சிவ ஆலயங்களில் விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்துவது போல் முறைதெரிந்த அன்பர்கள் வடல்வெளியில் முதல் வழிப்பாட்டினைக் கல்பட்டு அடிகளுக்குச் செலுத்துகின்றனர். அதற்குக் காரணம் கல்பட்டு அடிகளுக்கும் வடலூரின் காவல் தெய்வமாக விளங்குகின்றார் என்று பலரும் நம்புவதே ஆகும். 

35.கல்பட்டு  ஐயா தோற்றம் 

சிவந்த மேனி; எடுப்பான தோற்றம்; வாட்ட சாட்டமான உருவம்; நீண்டு மார்பில் அலைபாயும் தாடி; இடையில் ஒரு முண்டு; கையில் ஏற்றதொரு தண்டு; தோளில் மடித்துப் போட்டிருக்கும் துப்பட்டி; நடையில் மிடுக்கு. இந்தக் காட்சிக்கு உரிய தவவடிவமே கல்பட்டு ஐயா! 

36.வழிபட்டு வள்ளலைக் காண்போம்! 

"வள்ளற்பெருமானிடத்து ஆராக் காதல் கொண்ட அடியவரே! உள்ளம் தன்னில் அவர்கள் வைத்து உணர்ச்சி வழிபாடு செய்துவந்த பெரியவரே! வடல் பெருவெளியின் காவல் தெய்வமே! கல்பட்டின் ஐயாவே! சிவஞான விரும்பும் செல்வரே! திருநறுங்குன்றத்து இராமலிங்க மூர்த்திகளே! வள்ளற்பெருமானை வகைதெரிந்து வணங்கவும்; வருபயன் உயிர் இரக்கதாலேயே என்று உணரவும்; கருங்கல் மனம் கரைந்து, கண்ணீர் பெருகி ஆன்ம உருக்கத்துடன் அவ்வழி நிற்கவும் குறிப்புணர்த்துங்கள்! ஆட்கொள்ளும் வழியினைக் காட்டுங்கள்!" என்று வழிபட்டு வள்ளலைக் காண்போம். 

சிவநேச வெண்பா 

இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருள் என் 
அப்பாநின் தாட்கே அடைக்கலம்காண்.. இப்பாரில் நான்நினது 
தாள்நீழல் நண்ணுமட்டும் நின்அடியர் 
பால்நினது சீர்கேட்கப் பண்.