கத்ரி
கத்ரி என்பது உஷ்ணமான காலத்தைக் குறிக்கும். ஆதிபராசக்தி காளி உருவம் கொண்டு பல கொடிய அரக்கர்களை வதைத்திடுகையில் கோர ரூபம் கொண்டிருந்தாள் அல்லவா! அக்கோர ரூபத்தின் பிரதிபலிப்பாய் பிரபஞ்சத்தின் உஷ்ண நிலை கூடியது. கிருத்திகா நட்சத்திரத்தை ஒட்டி வருவது கத்ரி காலமாகும். கிருத்திகையும் அக்னி நட்சத்திர அமைப்புகளுள் ஒன்றாகும்.
கத்ரிக்கான விசேஷ பூஜைகளுண்டு. இவற்றை முறையாகக் கடைபிடித்தால் நம்முடைய வாழக்கையின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி சமுதாயச் சூழ்நிலைகள் சாந்தமுடன் நிலவ பெரிதும் உதவுகின்றன. கூட்டாகச் செய்யப்படும் சத்சங்க நற்காரியங்கள், வழிபாடுகளுக்குப் பன்மடங்கு பலன் உண்டு.
அம்மை, டைபாய்டு, அக்கி, வறட்டுக்காசம் போன்ற உஷ்ண நோய்களைத் தடுப்பதற்கும் தீய சக்திகளின் கொடிய விளைவுகளைத் தணிப்பதற்கும் தீவிரமான மனோநிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கத்ரி - விசேஷ பூஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நீர், இளநீர், நீர்மோர், குளிர் பானங்கள், தயிர் சாதம், கிரிணி, தர்பூசணி பழங்கள், பழ ரசம் போன்றவற்றைக் கத்ரி நாட்களில் தானம் செய்து வர வேண்டும்.
ஒவ்வொரு கத்ரி தினத்திற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. அந்தந்த கத்ரி தினத்தில் அதற்குரிய கத்ரி தேவதையை வழிபட்டுக் குறித்த தானங்களைச் செய்து வந்திடில் குடும்பத்தில், உறவு முறைகளில், அலுவலகத்தில் சுமுகமான, சாந்தமான, சூழ்நிலை உருவாவதோடு, வருடம் முழுவதும் அக்னி சம்பந்தமான நோய்கள், விபத்துக்களிலிருந்து ரட்சையாய் நின்று காத்திடும்.
கத்ரி தினபூஜைகளை நடத்துவதற்குரித்தான விசேஷத் திருத்தலங்களும் உண்டு. இத்தலங்களில் கத்ரி விசேஷ பூஜைகளை நிகழ்த்திடில் பூஜா பலன்கள் பல்லாயிரம் மடங்காய் பெருகும். காரணம் இத்தலங்களில் அருள்பாலிக்கும் ஸ்வயம்பு மூர்த்திகள் அக்னி அம்சங்கள் நிரம்பப் பெற்றவர்களாய், கத்ரி காலத்தில் இப்பூவுலகில் எழுந்தருளியதேயாம்.
திண்டுக்கல்-பழனி சாலையில் ரெட்டியார் சத்திரம் அருகே ஸ்ரீ கத்ரி நரசிங்கப் பெருமாள் ஆலயம் இதற்கு ஏற்றதாகும்.
கத்ரி தினங்களில் குறித்த பூஜைகளை நிகழ்த்தி வந்திடில்,
1. உஷ்ண சம்பந்தமான நோய்கள், வயிற்று ரணங்கள், Piles எனப்படும் மூலம், ரண நோய்கள்- ஆகிய நோய்களின் கடுமை தணியும்.
2. உறவினர்களின் பொறாமை,திருஷ்டி, பில்லி, சூன்ய ஏவல்களினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
3. பலவிதமான கொடிய கர்ம வினைகளுக்கும் வெளியில் சொல்ல இயலாத பல கொடிய கோரமான அருவருக்கத்தக்க செயல்களுக்கும் கத்ரி- விசேஷ தான தர்மங்களே சிறந்த பரிஹாரமாகும்.
கத்ரியின் பூஜா சக்தி
கத்ரி காலத்தில் சூரிய கோளங்கள், (சூரியன்கள் பல உண்டு) செவ்வாய் போன்ற அக்னி கிரஹங்களிலிருந்து 'கத்ரி சக்தி" திரண்டு பூலோகத்தில் தங்குகிறது. இது அற்புதமான ஆன்மீக சக்தியின் திரட்சியாகும். கோளங்களின் அக்னியம்சங்களின் திரட்சியாதலின் அந்தந்த நாள்,திதி, நட்சத்திரதிற்கேற்ப கத்ரியின் சக்தி தினமும் மாறுபடுகிறது.
கத்ரி கால முடிவில் இச்சக்தி மீண்டும் அந்தந்த கோளங்களுக்குச் சென்றுவிடும். இச் சக்தியைப் பெற வேண்டுமெனில் அதற்குரித்தான தானதர்மங்கள், கத்ரி தேவ மூர்த்தி வழிபாட்டினை மேற் கொள்ள வேண்டும்.
கத்ரி காலத்தின் விசேஷ கத்ரி தினப் பெயர்களை நன்கறிந்து அந்தந்த தினத்திற்குரிய தான தர்மங்களைச் சிறப்பாகச் செய்து பயன்களைப் பரிபூர்ணமாக அடைய வேண்டும்.
தொடர்ந்து 26 நாட்களுக்கும் தான தர்மங்களா என்று மலைத்திடாதீர்கள். வருடத்தின் 365 நாட்களிலும் தீய வினைகள், தீய செயல்கள், தீய எண்ணங் கள் இல்லாது என்றைக்கேனும் ஒரு நாளாவது பரிபூர்ணமாக புனித மனித னாக வாழந்திருக்கின்றோமா அல்லது வாழ்வோம் என்ற வைராக்ய மனதுடன் கூற முடியுமா, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.
365 நாட்களில் ஏன் பல்லாயிரம் பிறவிகளில் சேர்த்த பல கொடிய வினைகளை 26 நாட்களுக்கான கத்ரி பூஜை தீர்க்கின்றதெனில் அது ஓர் அற்புதமான தெய்வீக வாய்ப்புதானே.
கத்ரி
செவ்வாய் போன்ற அக்னிக் கோளங்களிலிருந்தும் அக்னி லோகத் திலிருந்தும் 'கத்ரி" என்ற விசேஷமான அருட்சக்தி பூலோகத்தை வியாபிக்கின்றது. இவ்வருட்சக்தியை மனித சமுதாயம் நன்கு முழுமையாகப் பயன் படுத்த வேண்டுமெனில் அதற்குரித்தான, சித்த புருஷர்கள் அருள்கின்ற எளிய விசேஷமான பூஜை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. திண்டுக்கல் பழனி சாலையில் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் ஆலயம்
2. அக்னி சம்பந்தமான மூர்த்திகள் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள்
3. அக்னி க்ஷேத்திரமான திருஅண்ணா மலை, அக்னி சம்பந்தமான ரண நோய் களுக்கு நிவாரணம் அளிக்கும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ திருவட்டீஸ்வரர் ஆலயம், எப்போதும் எந்நேரமும் சந்தனக் காப்போடு பரிண மிக்கும் சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் சிவமூர்த்தி ஆலயம், 4.ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கியுள்ள திருத்தலங்கள்.
5. அம்பிகை அக்னியில் தவம் புரிந்த திருத்தலங்கள் (மாங்காடு, காஞ்சி புரம், திருவொற்றியூர்)
6. செவ்வாய் பகவான் தனித்துச் சந்நதி கொண்டு அருள் புரியும் தலங்கள் (வைத்தீஸ்வரன் கோயில், வடபழநி)
-போன்ற தலங்களில்
1. இளநீர், நீர்மோர், பழரசம், குடிநீர் தான தர்மங்கள்.
2. குடை, காலணிகள் தானம்
3. கோயில்களுக்குப் பெரிய குடைகளை உற்சவ மூர்த்திகளுக்காக அளித்தல்.
ஆகியவற்றை மேற்கொண்டிட விண்ணுலக அக்னி லோகங்களின், தேவதைகளின் அருட்கடாட்சமாக கத்ரி என்னும் விசேஷ அனுகிரஹத்தைப் பெற்றிடலாம்.
கத்ரி தினங்கள்
இருபத்தி ஆறு கத்ரி தினங்களுக்கும் விசேஷமான பெயர்கள் உண்டு. ஒவ்வொரு நாளிலும் எந்த அக்னி லோகத்தின் தெய்வீக சக்தி நிறைந்துள்ளதோ அதையொட்டி அந்த தினத்தின் நாமம் அமைந்துள்ளது.
கத்ரி தினங்களில் விசேஷ நாமங்களும் அந்தந்த தினத்திற்குரிய தான தர்மங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றை நன்முறையில் நிறைவேற்றி, கத்ரி சக்தியின் மேலான சக்தியைப் பெற்று உய்யுமாறு வேண்டுகிறோம்.
1. ருசித்ரய கத்ரி -கர்ப்பிணீப் பெண்கள் விரும்பிய சாப்பாடு தானம்
2.தாண்டவ கத்ரி -பாரிசவாயு வந்தவர்கள் விரும்பிய பலகாரம் தானம்.
3.சிலமத கத்ரி - குடுமி வைத்து இருப்பவர்களுக்கு போஜனம்.
4.அஸ்படாலி கத்ரி -செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஆடை தானம்
5.பானுதேவ கத்ரி -வயதான அனாதை முதியோர்களுக்கு உணவு, ஆடை தானம்
6.சதுகுஞ்சித சுக்ர கத்ரி - பாதி தலை நரைத்தவர்களுக்கு அன்னதானம்.
7.சகடோபரிதக கத்ரி -பிறக்கும் முன் தாயை இழந்தவர்களுக்கு தானம்.
8.சங்கம கத்ரி -பள்ளி முடிக்கும் முன் தந்தையை இழந்தவர்களுக்கு அன்னதானம்.
9.பண்டித கத்ரி -வேதம் படிக்கும் சிறுவனுக்கு ஆடை, உணவு தானம் செய்யவும்.
10.பினாக கத்ரி -சிவன் கோயிலில் உள்ள ஊழியருக்கு தானம் செய்க.
11.சோடம கத்ரி -மாங்கல்ய தானம் மிக விசேஷம்
12.தக்ஷிண கத்ரி - குடை தானம் விசேஷம்
13.சங்கட கத்ரி -பாதுகை தானம் விசேஷம்.
14.லாவக கத்ரி - யானைக்கு பூரண உணவு அளித்தல் நலம் தரும்.
15.கோதக கத்ரி - போதாயன வகையைச் சேர்ந்தவருக்கு கெளபீன தானம்
16.சுலதின கத்ரி - ஒன்பது கஐ புடவை வேதம் படித்தவரின் தாய்க்குத் தானம்.
17.சாந்தபுரி கத்ரி - மூக்குத்தி தானம் சிறப்புடையது.
18.லோகதான கத்ரி -கோயிலிலுள்ள செடிகளுக்கு உரமிடல் மிக விசேஷம்.
19. ஜனக பஞ்சக கத்ரி - கோயில் தோட்டத்திற்குச் செம்மண் தானம் சிறப்புடையது.
20. மாதுர்ய கத்ரி - மூத்தவள் குழந்தைக்கு சின்னம்மாவினால் செய்யும் திருமண நகை தானம் சிறந்தது.
21. மேவக(நியமக) கத்ரி - வயதானவருக்கு பல்செட் தானம் சிறந்தது!
22. ஜீவசாந்தி கத்ரி - பங்காளி மகளுக்கு நகை தானம் சிறந்தது.
23. அந்தர்ம கத்ரி -கழிவு நீரில் வேலை செய்பவருக்கு ஆடைதானம் சிறந்தது.
24. பலாத கத்ரி -ஊமைக் குழுத்தைகளுக்கு ஆடைதானம் சிறந்தது
25. நிர்குண கத்ரி -ஏழைகளுக்குத் தலைக்கு எண்ணைய் தானம்.
26 சங்கவ கத்ரி - கோயில் வாத்தியக் கருவிகளைப் புதுப்பித்தல் நலம்
No comments:
Post a Comment