உ
சத்குரு ஸ்ரீவேங்கடராம குருஅஷ்டகம்
எண்பண் குரு வந்தனம்
குருவந்தனத் துதி
ஓம் குருநாதா குருதேவா
நின் திருவடியைப் பணிந்திடுவோம்
வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
அருணாசலமே நின் பொருளாம்
ஆனந்தம் பரமானந்தம்
வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
ஜீவன் ஆத்மா இரண்டையுமே
ஒன்றுய்க் காணும் 'ஓங்காரமே'
வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
அன்ன தானமே முக்தி வழி
என்றே காட்டிய "ஏகாம்பரா”
வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
பாவம் களையும் அருமருந்தாய்
கோயில் திருப்பணி தந்தவனே
'வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
வேதப் பொருளாய் நின்றருளி
இடரைக் களையும் ஆதவனே
வேங்கடராம குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
தானம் அறியோம் தவம் அறியோம்
தானமும் தவமும் நின் விழிகள்
வேங்கடராமா குரு சரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
கர்மச் சுமையைக் களைந்திடவே
கார்த்திகை தீபம் வார்த்தவனே
வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
பலாபலத்துதி (பலஸ்ருதி)
மோக்ஷ மார்கமாய் ஸத்ஸங்கம்
முழுதாய் வடித்துத் தந்தவனே
நின் திருவடியைப் பணிந்திடுவோம்.
வேங்கடராமா குருசரணம்
ஸர்வேஸ்வரனே ஸதாஸிவா
No comments:
Post a Comment