Tuesday, 31 July 2018

Testing vertical tabs

Click on the buttons inside the tabbed menu:

London

London is the capital city of England.

Paris

Paris is the capital of France.

Tokyo

Tokyo is the capital of Japan.

சென்னை

தமிழ்நாட்டின் தலை நகரம் சென்னை

Sunday, 8 July 2018

சங்கரன் கோவில் இலக்கிய சிறப்பு


  • கோமதி அம்மை பிள்ளைத் தமிழ் - புளியங்குடிப் பிள்ளை


கேடாவரும் நமனைக்கிட் டவரா தேதூரப்போடாயென் றோட்டியுன்றன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்வாடாவென அழைத்துவாழ் வித்தாலம் மாயுனைக்கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.

  • கோமதி மகிமை என்ற தலைப்பிலான மகாகவி பாரதியாரின் பாடல்கள் சங்கரன்கோவிலின் மகிமையைக் கூறுகின்றன.
  •  
  • தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் .வே. சாமிநாத ஐயருக்கு பிரியமானது இத்தலம்.

  • மக்களின் உடற்பிணி, மனப்பிணி போன்றவற்றை நீக்கும்பொருட்டு கோமதி அன்னையின் திருச்சந்நிதி முன்பு ஸ்ரீ வேலப்பதேசிக சுவாமிகளால் ஸ்ரீசக்கரபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

  • சீவலமாறபாண்டியன், முத்துவீரக்கவிராயர் இயற்றிய சங்கரநயினார் கோவில் தலபுராணம் மற்றும் சங்கர சதாசிவமாலை,சங்கர நயினார் கோவில் அந்தாதி, சங்கரலிங்க உலா போன்ற நூல்கள் யாவும் சங்கரன்கோவில் நகரின் மாண்பை விளக்கும்.

  • புளியங்குடி முத்துவீரக் கவிராயரின் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்,

  • சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் கோமதி அந்தாதி,

  • பொ. சுப்பிரமணிய பிள்ளை இயற்றிய கோமதியம்பிகை பேரில் சந்தவிருத்தம், பதிகம்,

  • கள்ளிக்குளம் சு. சுப்பையா ஆக்கிய கோமதி அந்தாதி, கோமதி மும்மணிமாலை, கோமதி வாரதுதி, கோமதி திருவெழுக்கூற்றிருக்கை மற்றும் 
  • பாரதியாரின் பாடல்கள் 
  • உள்ளிட்ட பலவும் கோமதியம்பிகையின் அருட்கருணையை விவரிக்கும் அற்புத நூல்களாகும்.


இத்தலத்தில் சென்ற நூற்றாண்டில் சிறந்த சைவசித்தாந்தவாதியாக வாழ்ந்தவர் பேட்டை . ஈஸ்வரமூர்த்திப் பிள்ளையாவார். இவர் இயற்றிய கோமதி சதரத்னமாலை என்னும் நூல் என்றும் வாடாமாலையாக அன்னையின் திருவடியில் மிளிர்கின்றது.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்'

திருநெல்வேலி ( சங்கரன் கோவில் ) சைவ சித்தாந்த சபை


கோமதி சதரத்ந மாலை



திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
கோமதி சதரத்ந மாலை
எழுதியவர் திரு. ஈஸ்வர மூர்த்தி பிள்ளை அவர்கள் 

காப்பு
சங்கரன் கோயிலமர் சங்கர லிங்கனார்
பங்கிலுறு கோமதித்தாய் பாதமலர் - பொங்கு தமிழ்
யாப்பலிங் கேத்துவேன் யானைமுகத் தெய்வமே
காப்பாக வுன்பொற் கழல்.

நூல்
பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி
யாரணமே யாகமமே யருடருநூ லதிற்சுரக்குஞ்
சாரமதே சைவமெனுஞ் சற்சமய மெனநாயேன்
றேரவருள் செய்தனையே சீராசைக் கோமதியே.  1

கதிரோனின் புதிநேர்வன் கதிர்நோவை நீயன்றோ
மதிவாணர் போல்வருன மாயையென்ப ரதனாலுன்
பதியாரைச் சடமெனவும் பகராமற் பகர்வாரா
யதிசோக முறுவரந்தோ வருண்ஞான கோமதியே, 2

ஊனுடலே யுயிராகு முலகேவீடாகுமெனு
மீனமதிக் கிரையாய்நா னிறவாமு னின்றளில்
யான்றவென் றலைசார்த்தி யின்பாரு நாளுளதோ
கானமரு மென்கூந்தற் கலியாணி கோமதியோ. 3

ஆங்கிலமே திராவிடமே யாரியமே யாம்பலவும்
பாங்குபெறக் கற்றாலும் பயனென்கொல் சுமையன்றே
தேங்கமழுன் சீபாதஞ் சிந்திக்கக் கற்பதொன்றே
யோங்குநல மென்றுரைத்தா யுலகளிக்குங் கோமதியே. 4

என்னன்னை தந்தையன்பா லென்னுடலை வளர்த்ததுபோற்
பொன்னன்ன நின்சீரைப் புரிந்துரைக்குந் திறலினையும்
நன்னரிவண் வளர்த்திட்டார் நான்செயுங்கைம் மாறுளதோ
வென்னுளமு மெவருளமு மிருந்தாளுங் கோமதியே. 5

ஆண்டறுப தாகவென யாதரித்த வாறேபோல்
வேண்டுவன தந்தின்னு மேதினியிற் காவாயோ
பூண்டவிரும் வடிவாளே புந்தியிலே னஞ்சுகிறேன்
றாண்டரிய பிறப்பறுக்குந்தனியமுதாங் கோமதியே. 6

புத்திரபுத்திரிமாரும் பொருளாக வேண்டுமெனி
லத்தனையும் புண்ணியநானாற்றிடுதல் வேண்டாவோ
வித்தனையு மவ்வறந்தா னியற்றியிலே னையோநா
னெத்தனையுங் கீழெனினு மெனக்கிரங்கு கோமதியே. 7

பலகலைகள் கற்றாலென் பகுத்தறிவு பெற்றாலென்
னுலகநடை சிறந்தாலெனுபகாரம் புரிந்தாலென்
மலமுழுது நீங்கியின்ப மருவுவதை வேண்டாத
கலதிகளுக் குயிருளதோ கட்டழகி கோமதியே. 8

பீடேறுன் பொருட்புகழைப்பேசிமகிழ் தேத்தாத
நாடேதான் மொழியேதா னவினுறான் மானுடந்தான்
காடேயாஞ் சலசலப்பாங் கடிநூலாம் விலங்கேயா
மிடேயோ வெடுப்பேயோ வில்லாத கோமதியே. 9

அணியாருன் விழாநாளி லலங்காரம் பலகொண்டு 
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்காய் 
பணியாத தலைபணியும் பாடாத வாய்பாடுந் 
தணியாத சிந்தையுந்தான் றணிந்தொடுங்குங் கோமதியே. 10

சிவபூசை யென்முன்னோர் செய்பயனா னாயேனு 
மவமேநாள் போக்காமே யானமட்டி னின்புகழைத் 
தவறாமே படித்திடுவேன் சாற்றிடுவே னெழுதிடுவே 
னுவமானங் கடந்தாளே யுயக்கொள்வாய் கோமதியே. 11

தரித்திரமே யிடையூறத் தரித்திரந்தா னிங்கிடிலோ 
திருத்தியுறத் தொழலாநின் சேவடியை யென்பாரா 
வருத்தமுளாருனமறந்திங் கரக்கரென வலைவதெனே 
யுருத்திரனாருௗமகலா வோவியமாங் கோமதியே. 12

புத்தழகி யானாலென் பொற்றுகில்பூணணிந்தாலென்
வித்தையிலும் பதவியிலும் மிகுந்தாலென் கற்பிலதே
லித்தரையிற் பேயவளே யெத்தகைய சிறப்பினனு 
மத்தகைய ளாவானு னடிமறந்தாற் கோமதியே. 13.

யாதுபொரு ளியாருற்றா ரெதுவுமிலே னெதிர்காலஞ் 
சோதிடரோ துன்பமெனக் குண்டென்று சொல்கிறார் 
மாதரசி யுன்னேவல் வழிகிரக சஞ்சார 
மாதலினா லபயமெனக் களித்தருண கோமதியே. 14

பாலனெனக் குமரனெனப் பலபருவத் தனயருக்கு 
வாலமுதம் வெவ்வேறாய் வழங்குவணற்றயதுதான் 
சீலமறும் வஞ்சகமோ சிறியேமுக் கவள்செயல்போற் 
சாலவரு ணிபுரித றானுமன்றோ கோமதியே. 15

படங்காணப் போவாரே பரமசிவன் வீற்றிருக்குந் 
தடங்கோயில் சூழாரே தனிமுத்தி யிந்தாவென். 
றடங்கலுநீ யழைத்தாலு மபக்குவர்தான் வாங்குவரோ
மடங்காதி நின்றார்க்கே வாய்ப்பத்ன்றோ கோமதியே 16

மதபேதமிருப்பதற்கு மானிடரி னறிவுபல 
விதமாவ தேயேது விளங்குனரு ளவர்க்கெல்லாம் 
பொதுவாகு மென்பதையே புகன்றந்தப் பேதத்தை 
மதியாத மதியுமொரு மதியாமோ கோமதியே 17

பகவதியே மாதேவி பவானிபரா சத்திசிவை 
நகமகளே யைமவதி நாரணியே ஈசையே 
ககனமுயர் பிராமியுமை கெளரிதிரு வீசுரியே 
தகவுறுமிப் பெயர்களெற்குத் தாரகமாங் கோமதியே18

சொன்னாலும் வாயினிக்குஞ் சொலக்கேட்டாற் காதினிக்கும் 
பன்னாளுஞ்சிந்தித்தாற் பரந்தினிக்குஞ் சிந்தையெலாம் 
பொன்னாளுங் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்து 
மன்னாயுன் சரிதங்க ளற்புதமாங் கோமதியே 14

பேய்வாயிற் பட்டாரும் பித்துமிகப் பெற்றாரும் 
நோய்சால வுற்றாரு நுழைந்துனருட் சன்னிதியிற் 
றாய் நீயே சரணமெனத் தவங்கிடந்து சுகமுறுவார் 
வாய்மையிது முக்காலு மாண்புநிறை கோமதியே 20

ஆறாறு தத்துவமு மாகிநிற்கும் பேரருளே 
யாறாறு தத்துவமு மடக்கிநிற்கும் பேரொளியே 
யாறாறு தத்துவமு மலைத்திடவிங் குனமறந்தே 
னாறாறுங் கடத்தியெனை யாட்கொள்வாய் கோமதியே 21

அறிந்திடுவாய் தானேநீ யறிவித்தா லறியுமுயி 
ரறிந்திடுவ வல்லபிற வறிவித்த போதேனு 
மறிந்திடுநர் செய்ந்நன்றி யயர்த்திலரே யாமாயி 
னறிந்திடுமா செய்தவுன யயர்ப்பாரோ கோமதியே 22

திருமேனி யுயிரென்னத் தேகமென விரண்டின்றி 
யொருஞானப் பிழம்பாவ துனக்குத்த முடலுயிர்போற் 
கருவாரும் புலையுடம்பிற் கட்டுண்ட வாசனையாற் 
றுருவாத ரதைக்கூறிச் சோகாப்பர் கோமதியே 23

சிவபெருமானின்கணவர் திருமானி னையரென்ப 
ரிவரிருவ ரொருதேவே யெனக்காட்டச் செய்தனையாந் 
தவமதனை யெனவயலார் சரிதமொன்று புனைந்திட்டா 
ரவமுனது பெண்மைக்கஃதாகாதோ கோமதியே.  24

அரியொருகா லிருராம ரானான்சூர் பன்மனெனு 
மிருவரொரு சூரபன்ம னென்றானா ரவ்வரிபோ 
லரியரரா வான்சிவனே யச்சூரன் பன்மன்போ 
லரியரரோ சிவனென்று மாகாரே கோமதியே.  2.

சங்கரநாராயணன்பாற் சார்ந்திருக்கு நாரணன்றா 
னிங்குவரு வயிணவத்தினிறையல்ல னவ்விறைக்கும் 
டங்கியதை யியக்குசிவ சத்திகொளு மாண்கோலம் 
துங்கமறை யவ்வாறு சொற்றிலதோ கோமதியே 26

சங்கரநாராயணனே தாணுமாலயனிவைதான் 
மங்கலறச் சிவநாம வரிசையிற்றான் வந்திடுமே 
சிங்கலிலாச் சிவன்சர்வ தேவமய னெனச்சுருதி 
யிங்கறிஞருளங்கொள்ள வேத்திலதோ கோமதியே 27

நாரணனே யிலக்குமிசெய் நற்றவத்தா லவள்முன்னே 
நாரணசங் கரனாக நற்காட்சி தந்தானென் 
றாரணமோ நாரணற்கோ ராலயமோ சான்றுண்டா 
பூரணியே வளமாரும் புன்னைமகிழ் கோமதியே 28

பரமசிவன் பத்தினியே பரந்தாமன் சோதரியே 
கரமுகவ னாறுமுகன் கனிந்தேத்து மாதாவே 
வரமுதவு நீறக்க மணியணிவா ருளக்கோயி 
நிரமுறவீற்றிருந்தருளுந் தெய்வதமே கோமதியே. 29

தவவேடம் நீதாங்கிச் சங்கரனை யுளத்திருத்தி 
யுவமான மிறந்ததவ முஞற்றிநின்றா யுவந்தந்தச் 
சிவலோகன் களிறூர்ந்துன் றிருக்கணெதிர் காட்சிதர 
வவனோடு மகிழ்ந்துசென்றா யன்னம்போற் கோமதியே. 30

அன்னியரும் போனார்நா டடைந்ததுதா ஒனரசிந்நா 
இன்னினிய பதமேத்தி யுய்வதுவே யினிவேண்டும் 
பொன்னதிகந்திரட்டியந்தப் பொன்னினையே போற்றியறத் 
தன்னை மறந்திருப்பாருந்தக்காரோ கோமதியே. 31.

சத்தனிட மடங்குமவன் சத்தியெலா நசிவனை
நித்தமனு சரித்ததனை நிரூபித்தா யானாலுஞ் 
சத்தியுயர் வெனச்சத்தன் சத்திசம மெனப்பிதற்று 
மத்தருமிங் குளரானார் மறைகடந்த கோமதியே

தீரமின்றித் திரமின்றிச் சிவபக்தி தனித்தின்றிச் 
சாரமின்றி வரம்பின்றிச் சாத்திரவா தாரமின்றிப் 
பாரமின்றிச்சைவத்தைப் பாலிப்பார் போற்சிலவ 
ரோரமொன்றிக் குழறுபடை யுரைக்கின்றார் கோமதியே 33

நான்முகத்தன் றிருநெடுமா னல்லரனே யிந்திரனே 
வான்முகத்துப் பிறருமென்றும் வந்துனடி பணிகின்றார் 
நான் மிகுத்து னண்மலர்த்தா ணம்பாமே தம்முயிரை 
யூன்புகுத்தச் சாவாரிவ் வுலகுள்ளோர் கோமதியே. 34

அறம்பாவ மென்னுமிரண் டருங்கயிற்றா லிழுப்புண்டு 
புறம்போனே னுன்னடியைப் போற்றாமலிதுகாறுந் 
திறம்பாத பத்தியுமுன் றிருநோக்காற் கிடைப்பதன்றே 
பறம்பாமென் மனங்குழையப் பாராயோ கோமதியே. 35.

உன்னாணைக் கடங்குகிலே னுன்புகழே பேசுகின்றே 
னென்னமோ பயனதற்கென் றிரந்தேனு னறக்கருணைக் 
கன்னாய் நீ நட்டமர மாலமர மானாலு 
மின்னாத தென்றதனை யீர்குவையோ கோமதியே 36

இருவிசும்பா ரசுரரைவென் றிருமாந்த போதவரை 
யொருதுரும்பாலோரியக்க சொடுக்கவவன் யாரென்று 
வெருவியவ ருனைவினவ விளங்கரனே யெனவிடுத்தாய் 
பெருகொளியே யிமவான்றன் பெருமகளாங் கோமதியே. 37.

மூவரையு முதிப்பித்தாய் மூவரைமுக் குணத்துறுத்தாய 
மூவரையும் மதிட்டித்தாய் மூவரையும் மதிகரித்தாய் 
மூவரையும் நியமித்தாய் முத்தொழிலிலென்றென்று 
மூவரையுந் தாட்படுத்தாய் முக்கணன்பாற் கோமதியே.. 38.

பட்டாலே பலனென்னும் பழமொழியைப் போன்றதுவே 
பட்டாலும் பலன் சிறிது மில்லையெனும் பழமொழியும் 
பட்டாலும் படவில்லை யானாலும் படரின்பம் 
பட்டாரின் பழவினையின் பயனன்றோ கோமதியே. 39.

குடுமியினைக் கத்தரித்துக் குஞ்சியிலா ராய்த்தயிலந் 
தடவிவகுப்பெடுத்துப்பெண் டகச்சீப்பான் மயிர்சுருட்டி 
யிடபமெனத் திரிவதன்றி யினமலரிட் டேத்தாரு 
னடிசிலவ ரவர்வாழ்ந்திங் காம்பயனென் கோமதியே. 40.

வானத்திற் பறந்தாலென் மண்மீது விரைந்தாலென் 
வானத்து வின்மனித்த வாழ்வெனுமெய் யுணர்ந்தார்க்கு 
ஞானத்து னாண்மலர்த்தாணன்கேத்தித் தொழுவதுவே 
தேனொத்துத் தினந்தோறுந் தித்திக்குங் கோமதியே. 41.

உண்ணுவது முழைப்பதற்கே யுழைப்பதுவு முண்பதற்கென் 
றெண்ணிவசி மகன்விலங்கி னெவ்வகையிற் சிறந்திட்டா 
னுண்ணலுழைப் பிவற்றினுமுனுபயபத சேவையே 
மண்ணிலுயர் வென்றவன்றான் மதிப்பதென்றோ கோமதியே 42

தன்னியலை யாயாதுன் றனியருட்சீர் கேட்டலுமே 
யின்னுமவ ளருளாமை யென்னெனக்கென் றச்சீரிற் 
முன்னதவ நம்பிக்கை சாற்றுபவன் மகனேயோ 
மன்னுமுயி ரனைத்தினுக்கும் வாழ்வருளுங் கோமதியே 43.

ஈங்குறங்கி யாங்குறங்கா ரெய்திடுவ ரின்பமெலா 
மீங்குறங்கா தாங்குறங்கி னெய்திடுவர் துன்பமெலா 
மீங்குறங்கி யாங்குறங்கா விதநீயே யெவ்வுயிர்க்கும் 
யாங்குமுறங் காமலிருந்தீயவலாய் கோமதியே. 44.

நன்றுதரு புதுமையென நானிலத்திலொன்றுண்டோ 
வின்றியமை யாததென விரங்கியநீயன்றன்றிங் 
கொன்றிவரு மனிதருக்கொவ் வொன்றுதவ லோராம  
நின்றுபுதுமைப்பித்தனேமாந்தான் கோமதியே. 45

துன்புதவுந் தீயவினை சுகமுதவு நல்லவினை 
யென்பதுவே நியதிசில ரீனாவினை செய்துங்க 
ரின்பதனைக் கண்டுமதி யிழந்துமறஞ் செயமுந்து 
மன்பதையு மையையோ வாழ்வதுண்டோ கோமதியே 46

மாதாமாண் கற்பிகழு மடமகன்போ லெவ்வுயிர்க்கு 
மாதாநீயென்பதனை மதியாரு முன்னைய 
வாதோதித் தம்மூத்தை வாய்நாற்றங் காட்டுகிறார் 
கோதேதோ வவருடல்வந்திடுகுலத்திற் கோமதியே. 47

கருக்குவது மவிப்பதுவுங் காய்ச்சுவதும் வறுப்பதுவும் 
மெரிக்குளவெஞ் சூடொன்றே யிப்பெயர்கள் பெறுமாபோற் 
றிருக்கிளருமொருநியே செகசீவர்க் கருண்முறையி 
லிருக்குனையும் பலபெயராலினிதேத்துங் கோமதியே. 48.

ஆண்டவனைக் கண்முன்காட் டவனையான் தொழுவேனென் 
மீண்டொருவன் பிதற்றுகிறா னென்புதிர நரம்பாதி 
மீண்டுடலி லவன்றன்னை யீதென்று காட்டுவனேல் 
மாண்டவவன் றன்னையும்யான் மதித்திடுவேன் கோமதியே. 49

விரிந்ததிரி மலப்பிடிப்பை வெலமாட்டாதிங்கே நான்
தெரிந்து மிழி வினைபலவே செய்கின்றேனதனாலே 
பரிந்துபுரந்திடுவாயோ பராமுகமா யிருப்பாயோ
வெரிந்துவரு நமனார்முன் யாதுசெய்வேன் கோமதியே. 50

மஞ்சளொடு மங்கிலியம் வாழ்வரசிக் கடையாள 
மஞ்சலிலு னடியாருக் கடையாளந்திருநீறு 
விஞ்சுபுக ழக்கமணி வெறுத்தவற்றை யுரைப்பவர்தந் 
நெஞ்சமதிலமங்கலமே நிலைகொள்ளுங் கோமதியே 51

பிறப்பதுதா னிறப்பதற்கோ பிறந்திடவே யிறக்கின்ற 
ரிறப்பதுவும் பிறப்பது நீயிரங்காதார் துயரன்றோ 
பிறப்பதனுக் குறுபயனாம் பிறவாமை யதையவர்தாம் 
னிறப்பதன்முனெய்துவதுனிச்சையன்றோ கோமதியே. 52

எங்கிருந்து வந்தோமிங் கேன் வந்தோ மிறந்தபின. 
ரெங்குறுவ மென்றாயா திழிவிலங்கொத் துண்டுறங்கி
மங்குமதி யுடையரெலா மனம்போன படிதிரிந்துன் 
பொங்கருளுக் கயலாகிப் புதைகின்றார் கோமதியே. 53

வழிவழியூ னுண்ணாத மரபினருட் சிலரஃதுண் 
டழிபவரின் கரவுரையா லதுவேட்டுனருண்மறுத்திங் 
கிழிவுவருந் தங்குலத்துக் கென்றுணரா தூர்சிரிக்கப் 
பழிபுலவுண் டிருணரகிற் பாய்வதெனே கோமதியே. 54

உண்டு கொழுத்திடுவதற்கே யுடலெடுத்த பெரியார்கைக் 
கொண்டுசெயுஞ் சற்கருமங் குவலயத்திலேதுமிலை 
யொண்டவநல் லுபவாசத் துடலொறுத்துனருள்சேர்ந்த 
தொண்டினரே யதுசெய்யுந்துப்புடையார் கோமதியே. 55

உன்னருளின் துணைகொண்டிங் குயர்மறையினிதயத்து 
ளென்னுளதென் றாய்ந்ததனை யெடுக்குமறி வற்றொருவன் 
றன்னறிவினிறுமாந்து தலைசுழன்றச் சாத்திரத்துட் 
பின்னமுறு பொருள்புகுத்தல் பெட்பாமோ கோமதியே.56

பேரறிஞர் பலர்தந்தார் பெருநூல்கள் பலவவற்றாற் 
சீரடையுஞ்சிலர்நிற்கத் திருந்தாத பெரும்பாலார் 
காரணவு தம்மறிவைக் கலகலநூல் மலிந்திழுக்கத் 
தூரநெறி போனாருன் றுணையடிக்குக் கோமதியே .57

வேதமுன துரையென்னார் வீழ்வது பொய் யுன்றாளி 
லேதுபய னிவற்றுடனுனியல்விளக்க வந்ததெனப் 
போதநிறை புண்ணியரப் பொன்னுரையைக் கொண்டுனது 
பாதமுளத் திருத்தியுறு பயன்பெறுவார் கோமதியே. 58.

மனமதெனைக் கருவீழ்த்த மகனானே னெஞ்சி நின்ற 
வினைநுகர யானீட்டு வினைபலவாம் வானோருக் 
கினியமுது வரநினைந்தே பிறப்பொழித்தான் பத்தினியே 
யெனையதுபோல் வினைநீக்கி யேன்று கொள்வாய் கோமதியே. 59

பலபாவம் புரிந்தாலும் பாறைமன நெகிழ்ந்தொருகா 
னலமாரு முன்னாம நாவார நவின்றிட்டா 
லிலவாகு மத்தனையு மெத்தனைதீட் டேனுமவை
நிலமீதி லொருமுழுக்கானீங்காவோ கோமதியே. 60


இருக்கையிலே மன்மதனா ரென்னுளத்தைக் கலக்கிடுவார் 
மரிக்கையிலே யெனைநமனார் வந்துகொடு போய்வதைப்பா 
ரிருக்கையிலு மரித்தபினு யித்துயரை யெனக்கின்றிப் 
பிரிக்கைசெயும் படைதானுன் பேரருளாங் கோமதிய .61

இன்னிசையு நாட்டியமு மின்றுவளர்ந்திட்டாலும் 
மன்னரை யுன்னருளின் வழிநிறுத்தாதிர்காமப் 
புன்னசையிற் புரட்டலினாற் புன்விலங்கே யவரானா 
ரென்னபயனவைவேறிங் கீந்தனவோ கோமதியே. 62

சாத்திரத்தை யவமதித்துச் சரித்திரத்தை நம்பி நின்ற 
மாத்திரத்தே சிலசைவர் மதிவழங்கு பொருள்கோளிற் 
சாத்திரத்தை யனுசரித்த சரித்திரமே பொருளென்னு 
நேத்திரத்தை இழந்துனருணீங்கிநின்றார் கோமதியே. 63

சாதியெலா மொழிகசனர் சமமென்னும் பகுத்தறிஞர் 
வேதனையா முறையெல்லாம் விளிகவென்பார் மானமின்றி 
யாதிமகனிடத்தில்லை யாக்கினவ னிடையனென்ற 
வேதுவையவ் விரண்டற்கு மெடுத்துரைத்துக் கோமதியே. 64

கடவுளையே நிந்திக்கக் கயவருக்குப் பணங்கொடுத்துக் 
கடவுளையுங் கோயிலிற்போய்க் கைத்தொழுவர் சிலகப்டர் 
மடமலியக் கப்டரையுன் வன்கருணை மறத்தான் 
யடவருநா ளென்செய்வா ரவரந்தோ கோமதியே. 65

பாசத்துக் கயலான பத்தியுளார் சித்தியுளார்
 நேசித்த மாமுனிவர் நீளின்ப முத்தியுளார் 
வாசித்துன் புகழ்பரப்பு மகநீயர் துறவுடையார் 
தேசத்துக் கென்றுமுள செல்வமிவர் கோமதியே 66

ஆராய்ச்சி யனுபூதி யெனுமவற்று ளனுபூதிக் 
காராய்ச்சி யேதுவென்ப ரனுபூதி யில்லானு 
மாராய்ச்சி செய்தாலு னருளினொரு பான்மையவ 
னாராய்ச்சிக் கண்ணுக்கு மருவிருந்தாங் கோமதியே 67

சதுமறையா கமந்தெளிந்து சைவநெறி கடைப்பிடித்து 
மதியரவ வேணியரன் வாமத்தா யுன்றாளை 
யெதுவரினு மறவாமலினிவருமென் குலத்தோரு அத 
மதிவலிபெற்றுய்ந்தேத்த வரந்தருவாய் கோமதியே 68

வேற்றுமத தூடணையை விடுவதன்றி யம்மதத்தைப் 
போற்றுவதென் சைவனவன் புகழ்ந்துரைக்க வேண்டுவது 
னீற்றுநெறி யொன்றேயந் நெறிக்கற்பைத் துறந்தபினு 
மேற்றமவ னெய்துதற்கோ ரேதுவுண்டோ கோமதியே 69

ஏறுமிட மிறங்குமிட மெவ்வெவர்க்கும் வெவ்வேறான 
மேறினவ ரிறங்களவு மெவ்வூர்திப் பயணத்து 
மாறிலராய் மனமொத்து வதிந்திடுதல் போன்றதுவே 
கூறுலகி லெவ்வுயிரின் குடியிருப்புங் கோமதியே 70

சைவத்திற் சிலர் பிறந்தச் சமயநிந்தை புகல்வதுபோல் 
பொய்வைத்த சமயிகளும் புகலாரச் சிலருன்றன் 
மெய்வைத்த வருட்கயலாய் வெங்கலிவாய்ப் பட்டந்தச் 
சைவத்தைப் பழித்துயிரின் சார்பிழந்தார் கோமதியே 71


இத்தேச மெமக்கேயா மிதிற் பிறந்த வேதுவொன்றாக 
லித்தால் மப்படியே யெவ்வுயிர்க்கு முரித்தாகும் 
மத்தாலெவ் வுயிர்க்குமிந்த வவனியிடத் துரிமையினை 
யெத்தாலும் பறிப்பதற்கிங் கியாமாரே கோமதியே 72

பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பரமசிவன் பரமபிதா 
பன்றிமுத லெவ்வுயிரும் பார்க்கிலுடன் பிறந்தனவாம் 
பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பார்முழுக்கப் பொதுவுடைமை
 பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பரிவுடையாய் கோமதியே 73.

பெற்றவனையறியாத பிள்ளைக்குப் பிறப்புரிமை 
சற்றுமில பெற்றவளாற் சார்வதிலை திரிபுரத்தைச் 
செற்றவனே பெற்றவனிச்வேரையஃதுணர்வார்க்கே 
பொற்றவுல கெல்லாமாம் பொதுவுடைமை கோமதியே. 74

உன்னருளைப் போற்றாருற்றுலகை யனுபவித்தல் 
மன்னுவிலங் கனுபவித்தன் மானுமுளத் தவ்வருளை 
யுன்னுபவர்க் கென்றேயிவ் வுலகுன்னாற் றரப்பட்ட 
தன்னதையீங் கறிவதன்றோ வறிவாகுங் கோமதியே. 75

பொருளியலை யறிந்துள்ளம் புனிதமுற்று னருள்பெறவே
 பொருளுடைய ரில்லார்க்குப் பொருளீக வஃதன்றி 
யருளுளமே கொண்டவரை யாதரிக்கத் தாமுளராப் 
பொருளுடையர் செருக்குவதிற் பொருளுண்டோ கோமதியே. 76

எப்பொருளுக் குள்ளேயு மீசுரனைக் காணென்ப 
ரப்படியே காண்பானுக் ககமுனைத்துத் தோன்றிடுமோ 
வப்பொருளும் புலனாமோ வக்காட்சிக் காம்பயனைச் 
செப்புவரோ வுன்னருளிற்றிளையாதோர் கோமதியே. 77

பொதுவென்றுஞ்சிறப்பென்றும் புகலுமிரண் டொழுக்கமுமே 
மதுவொன்றுன் மலர்த்தாளை வழிபடுவார்க் கவசியமா 
மதுவொன்றே மிதுவொன்றே யமையுமென வொழுகிடுவார் 
விதியொன்று மறியாமல் வீண்போவார் கோமதியே. 78

கடவுளையிம் மனிதன்றான் கற்பனைசெய் தானென்று 
மடவருரைத் திடுவரந்த மனிதனெவ னெனவினவிற் நடவுவரால் 
விடையினையச் சார்வாகர் குழாம் பெருகி 
யிடவுலகைக் கவர்ந்திட்டாலேதமன்றோ கோமதியே. 79

யானைகண்ட குருடரென விருப்பனபுன் மதங்களெல்லாம்
 யானைகண்ட விழியனென விலங்குவதுன் சைவமொன்றே 
யானைகண்ட விழியனுண்மை யெடுத்துரைத்தா லவனைவைது 
யானைகண்ட குருடரெலா மெள்ளாரோ கோமதியே. 80

உவமானப் போலிகளை யுரைத்தழிந்து சைவத்துக் 
கவமாவச் சமயிகளை யயலாக்கிக் கெடுக்கின்றார் 
சிவஞான போதாதி திராவிடமா பாடியமிங் 
கவராயாதிருந்தானன் றறிகுவரோ கோமதியே. 81

பரசமய நிராகரணம் பண்ணாமற் சைவத்தைத்
திரமுறவிங் கெவர்தெளிவார் சீர்தூக்கு முறையாலே 
பரசமய நிராகரிப்பும் பண்ணிடுக பகையாலச் 
சிரமவினை புரிந்தாலே தீதென்றாய் கோமதியே. 82

என்றென்று மெங்கெங்கு மெனதெந்தச் செய்கையிலு 
நன்றொன்று னாண்மலர்த்தா ணான்மறவா திருத்தற்கான 
தொன்றொன்று புவிமீதிற் சுபுத்தியொன்று நல்குவையே 
குன்றொன்று குணமுடையார் குளிர்ந்தேத்துங் கோமதியே. 83

முப்பொருளினியல்பறிந்தம் முப்பொருளின் சம்பந்த
 மிப்படியென் றளவைகளா லிருக்குவழி யாய்ந்துணர்ந்து 
செப்பமிகுந்தவரேயுன் றிருவருளிற் றம்மையிழந் 
தொப்பரிய கதிசேர்ந்தங் கோய்ந்திருப்பார் கோமதியே. 84

சிலரறிவன் பாதியவே தெய்வமென்பா ரவைகுணமே
 நலமுறுமக் குணியெதுவோ நல்லிறையா புல்லுயிரா 
வுலகவரை யேமாற்றி யொவ்வாத கோளுரைத்தா 
லலகையவரென்பதிலோ ரையமுண்டோ கோமதியே. 85

பிரமமெனும் பொருளொன்றே பெயர்தானே பலவென்னிற் 
பரமசிவ னெனும் பெயர்க்குப் பரந்தாமன் பொருளாமோ
 சரளமுறு நிகண்டருத்தந் தருகோசம் பயனிலவோ 
புரமெரியச் சிரித்தவனைப் போற்றிமகிழ் கோமதியே. 86

சீராசை வரராசைதிகழ்புன்னை கூழையெனும் 
பேராரிந் நகரத்துன் பெருங்கோயில் புகுந்துசுனை 
நீராடி நீறணிந்துன் சன்னிதியினின்றன்பு 
பேராமல் வணங்காரும் பிறந்தாரோ கோமதியே. 87

நரருக்கு நாட்டுக்கு நாஞ்செய்யு நற்பணியே 
பரனுக்காம் பணியென்பர் பாரரசின் கொடியேற்றி 
வரவேற்றிங் கரசினரை வழிபடலே னவ்வணக்கம் 
பரனுக்குஞ் செய்வதன்றோ பகுத்தறிவாங் கோமதியே. 88

பொல்லாரை வெறுத்திடற்க பொல்லாங்கை வெறுத்திடென்றா 
னல்லாரை விரும்பற்க நலத்தினையே விரும்பென்றாம் 
நல்லாரைப் பொல்லாரை நலந்தீங்குக் கயலென்றா 
னல்லாரை மதியாத நவைவருமே கோமதியே. 89

தனிமனிதன் விடயமென்பர் சமயத்தை யதுசெல்லா 
தினமிலதேற்சிவசமயத் திருக்கோயில் பூசைவிழா 
தினவிரத மாசாரந் திருமறைநூ றிரவியங்க 
ளினிவருசந்ததியாதி யிருந்திடுமோ கோமதியே. 90


கண்ணாடி யணிந்தாலுங் காண்பாரோ வந்தகரே 
மண்ணாடும் வாழ்விலக மகிழ்மாந்தர்க் கருமறைக
 டண்ணாருனருட்சிறப்பைத் தடுமாற்றான் விரித்தாலும் 
முண்ணாடி யவர்தெளியா துழலாரோ கோமதியே. 91

விழிகாணும் பொருள்களெலா மேதினியி லழிவனவே 
வழிவேயாப் பொருளெவன்கட் ககப்பட்ட தின்றுவரை 
பழிதீருன் றிருவடியைப் பார்ப்பதற்குனருளொன்றே 
விழியாகு மென்பதன்றோ மெய்யாகுங் கோமதியே. 92

பெற்றவரும் பெறவில்லை பிறந்தவரும் பிறக்கவில்லை 
பெற்றவரைப் பெறுவித்தாய் பிறந்தவரைப் பிறப்பித்தாய் 
சிற்றுயிருக் கிதஞ்செயுமத் திருவிளையாட் டற்புதமே
பற்றறவுன் பதமடியேன் பற்றவருள் கோமதியே. 93


மண்ணுலகிற் பெற்றவரான் மனைவியராற் புத்திரராற் 
கண்ணெனுநற் கல்வியினாற்கனதனத்தாற் பதவியினா 
னண்ணுசுக முன்னடிக்கீழ் நண்ணியிறு மாந்தவர்க்குத் 
தண்ணிலவிற் றருவினிழறருசுகமாங் கோமதியே. 94

நிலையாமை தெரியாதார் நீணிலத்தி லெவருமில 
ரலையாமை யுளத்திருத்தி யன்புமுன்பாற் செய்யகிலார் 
நிலையாமை தனைநினைந்து நெஞ்சமுன தடியினிலை 
குலையாமை கூடும்வகை குறியாரோ கோமதியே. 95

விதிநியம மெமக்காம்யாம் விளம்பதற்காவிலமெனநீ 
யுதவதனை மாற்றுசிலருலகிலெதற்கிருக்கின்றா 
ரதனையவ ரியம்புகவு னருள் பெறவென் றனரேலவ்
விதிநியம மாற்றமவர் வேண்டுவரோ கோமதியே. 96

ஒழுக்கத்துக் குறுபயனிவ் வுலகசுக மெனின் மிருக 
மொழுக்கமின்றி நுகர்ந்திலதோ வுலகசுக நீவகுத்த 
வொழுக்கத்துக் குறுபயனா முயர்ந்தவுல கதனைமறுத் 
தொழுக்கத்தைப் புகழ்பவர்பா லொழுக்கமுண்டோ கோமதியே. 97 

பொருட்செறிவுஞ்சொற்சுவையும் பொருந்தாமலிருந்தாலும் 
மருட்செறிவை நீக்கியின்ப மன்னுயிர்கட் கீயுமுன 
தருட்செறிவை யேத்திலவோ வடியேன்செய் பாக்களெலா
மிருட்செறிவோ டியான்மணமா ரெழிற்கூந்தற் கோமதியே. 98

தொழவேண்டு முனையென்றுந் தூமலர் தூஉய்ப் பாடியுன்மு 
னழவேண்டு முன்னடியி லடியற்ற மரமேபோல் 
விழவேண்டு மிவைசெய்துன் விளங்கருளிற் றிளைத்தாடி 
யெழவேண்டு மென்பதுவே யெனக்காசை கோமதியே. 99

தனமுயரக் கலைவளரச் சதாசார மிகநட்புக் 
கனியமழை பொழியவளங் கவியசிவ சற்சமயம்
நனிபரவச் சீராசை நலம்பெறுகச் சங்கரனார்க்
கன்னியசிற் சத்தீநீயருள்புரிக கோமதியே.100

திருச்சிற்றம்பலம்
கோமதி சதரத்ந மாலை முற்றிற்று.
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க

பித்ரு மூர்த்திகளுக்கான 108 நாமாவளிகள்



பித்ரு மூர்த்திகளுக்கான 108 நாமாவளிகள் 

1.ஓம் ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தி போற்றி
2.ஓம் ஸ்ரீவசு பித்ரு மூர்த்திகள் போற்றி
3.ஓம் ஸ்ரீருத்ரப் பித்ரு மூர்த்திகள் போற்றி
4. ஓம் ஸ்ரீஆதித்யப் பித்ரு மூர்த்திகள் போற்றி
5. ஓம் ஸ்ரீஜெய ஹீராஸ் பித்ரு மூர்த்திகள் போற்றி
6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ரு மூர்த்திகள் போற்றி
7. ஓம் ஸ்ரீசரயு பித்ரு மூர்த்திகள் போற்றி
8. ஓம் ஸ்ரீகும்ப சோபித பித்ரு மூர்த்திகள் போற்றி
9. ஓம் ஸ்ரீசரவண பாத பித்ரு மூர்த்திகள் போற்றி
10.ஓம் ஸ்ரீருத்ர தரணி பந்து பித்ரு மூர்த்திகள் போற்றி 
11.ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
12.ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ரு மூர்த்திகள் போற்றி 
13.ஓம் ஸ்ரீசுதவாணி பித்ரு மூர்த்திகள் போற்றி 
14.ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ரு மூர்த்திகள் போற்றி 
15.ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ரு மூர்த்திகள் போற்றி 
16.ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
17.ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ரு மூர்த்திகள் போற்றி 
18.ஓம் ஸ்ரீசதவேத பித்ரு மூர்த்திகள் போற்றி 
19.ஓம் ஸ்ரீமேத விதான பித்ரு மூர்த்திகள் போற்றி 
20.ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ரு மூர்த்திகள் போற்றி 
21.ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ரு மூர்த்திகள் போற்றி 
22.ஓம் ஸ்ரீபார்திப் ப்ருத்விக் பித்ரு மூர்த்திகள் போற்றி 
23.ஓம் ஸ்ரீபரிதி பவித்ரப் பித்ரு மூர்த்திகள்போற்றி 
24.ஓம் ஸ்ரீகோதாயன பித்ரு மூர்த்திகள் போற்றி 
25.ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ரு மூர்த்திகள் போற்றி 
26.ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு மூர்த்திகள் போற்றி 
27.ஓம் ஸ்ரீமங்கள் தேவ பித்ரு மூர்த்திகள் போற்றி 
28.ஓம் ஸ்ரீவரிவஸ்யப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
29.ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு மூர்த்திகள் போற்றி 
30.ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ரு மூர்த்திகள் போற்றி 
31.ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி
32.ஓம் ஸ்ரீவேதராஜ பித்ரு மூர்த்திகள் போற்றி
33.ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு மூர்த்திகள் போற்றி 
34.ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
35.ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு மூர்த்திகள் போற்றி 
36.ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ரு மூர்த்திகள் போற்றி 
37.ஓம் ஸ்ரீகாரணீய பித்ரு மூர்த்திகள் போற்றி 
38.ஓம் ஸ்ரீச்ராவண பித்ரு மூர்த்திகள் போற்றி 
39.ஓம் ஸ்ரீவாமன கண பித்ரு மூர்த்திகள் போற்றி 
40.ஓம் ஸ்ரீசாண்டில்யப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
41.ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு மூர்த்திகள் போற்றி 
42.ஓம் ஸ்ரீதச பூர்வபித்ரு மூர்த்திகள் போற்றி 
43.ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவ மூர்த்திகள் போற்றி 
44.ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ரு மூர்த்திகள் போற்றி 
45.ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு மூர்த்திகள் போற்றி 
46.ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ரு மூர்த்திகள் போற்றி 
47.ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ரு மூர்த்திகள் போற்றி 
48.ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ரு மூர்த்திகள் போற்றி 
49.ஸ்ரீசூரிய வம்ச பித்ரு மூர்த்திகள் போற்றி 
50.ஸ்ரீவீர அம்ருத பித்ரு மூர்த்திகள் போற்றி 
51.ஸ்ரீவாதுல்ய தரணிப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
52.ஸ்ரீஅதிதி லோக பித்ரு மூர்த்திகள் போற்றி 
53.ஸ்ரீஅங்காரக லோக பித்ரு மூர்த்திகள் போற்றி 
54.ஸ்ரீமார்க விதான பித்ரு மூர்த்திகள் போற்றி 
55.ஸ்ரீகாச்யப தரண பித்ரு மூர்த்திகள் போற்றி 
56.ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ரு மூர்த்திகள் போற்றி 
57.ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு மூர்த்திகள் போற்றி 
58.ஸ்ரீபுரவாஸ பித்ருக்கள் போற்றி
59.ஸ்ரீகஜோ புத பித்ருக்கள் போற்றி 
60.ஸ்ரீபிரகத பித்ருக்கள் போற்றி 
61.ஸ்ரீதண்டுலப் பித்ருக்கள் போற்றி 
62.ஸ்ரீசகரப் பித்ருக்கள் போற்றி 
63.ஸ்ரீபித்ரு அதிகார பூஷணர்கள் போற்றி 
64.ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர்கள் போற்றி 
65.ஸ்ரீபித்ரு துவார பாலகர்கள் போற்றி 
66.ஸ்ரீநாகப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
67.ஸ்ரீகுசஸ்பதி பித்ரு மூர்த்திகள் போற்றி 
68.ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ரு மூர்த்திகள் போற்றி 
69.ஸ்ரீபரிபாலய பித்ரு மூர்த்திகள் போற்றி 
70.ஸ்ரீசந்தன சந்த்ராதித்ய பித்ரு மூர்த்திகள் போற்றி 
71.ஸ்ரீகல்பித பித்ருக்கள் போற்றி 
72.ஸ்ரீவாரிலோக பித்ருக்கள் போற்றி 
73.ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி 
74.ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி 
75.ஸ்ரீமதுலித முராரி பித்ரு மூர்த்திகள் போற்றி 
76.ஸ்ரீஆயுஷ்யதன பித்ரு மூர்த்திகள் போற்றி 
77.ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி 
78.ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி 
79.ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி 
80.ஸ்ரீகாருண்ய தீர்க தரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி 
81.ஸ்ரீதவார ஒளஷ்த பித்ரு மூர்த்திகள் போற்றி 
82.ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு மூர்த்திகள் போற்றி 
83.ஸ்ரீஸ்வர்ணவதி பித்ரு மூர்த்திகள் போற்றி 
84.ஸ்ரீஜல தீப் பித்ரு மூர்த்திகள் போற்றி
85.ஸ்ரீஜல மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி 
86.ஸ்ரீகடக தேவதை பித்ரு மூர்த்திகள் போற்றி 
87.ஸ்ரீபவதாரண்ய பித்ரு மூர்த்திகள் போற்றி 
88.ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி 
89.ஸ்ரீகாயத்ரீசவிதா மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி 
90.ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு மூர்த்திகள் போற்றி 
91.ஸ்ரீசப்த தீப பித்ரு மூர்த்திகள் போற்றி 
92.ஸ்ரீஅஷ்ட சுத பித்ரு மூர்த்திகள் போற்றி 
93.ஸ்ரீகாருண்ய பித்ரு மூர்த்திகள் போற்றி 
94.ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு மூர்த்திகள் போற்றி 
95.ஸ்ரீகர்த்தம் பித்ரு மூர்த்திகள் போற்றி 
96.ஸ்ரீதரணி பித்ரு மூர்த்திகள் போற்றி 
97.ஸ்ரீபித்ரு மஹாதேவதைகள் போற்றி 
98.ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு மூர்த்திகள் போற்றி 
99.ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு மூர்த்திகள் போற்றி 
100.ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு மூர்த்திகள் போற்றி 
101.ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி 
102.ஸ்ரீபித்ரு கணங்களே போற்றி 
103.ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி 
104.ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி 
105.ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி 
106.ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி 
107.ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி 
108.ஸ்ரீபித்ருபத்னிகள் மூர்த்திகள் போற்றி


சப்த கன்னியர் எழுவர் (கன்னிமார்) அருச்சனை








கன்னியர் எழுவர் (கன்னிமார்) - அருச்சனை

1. முனி கன்னிகை 
ஓம் விண்ணின் ஆற்றல் வித்தகி போற்றி
ஓம் கண்ணின் மணியே கலையே போற்றி
ஓம் நிறைமதி நிறத்து ஒருமதி போற்றி,
ஓம் பொறைமதி புண்ணியம் புரப்போய் போற்றி
ஓம் காமரு அடியால் காப்போய் போற்றி
ஓம் தாமரை ஏந்தும் தாயே போற்றி.

2.தேவ கன்னிகை 
ஓம் இன்பச் சுவர்க்கம் ஈவோய் போற்றி
ஓம் துன்பம் நீக்கும் கன்னியே போற்றி
ஓம் மின்னல் நிறத்து அன்னை போற்றி
ஓம் மின்னல் மழையாய் மிளிர்வோய் போற்றி
ஓம் நற்பதம் தந்திடும் நற்கன்னி போற்றித்
ஓம் கற்பக மலரேந்து சொற்பதத்தாய் போற்றி.

3.தாமரைக் கன்னிகை 
ஓம் நாகலோகத்து நல்லாற்றலே போற்றி
ஓம் வேகம் நீக்கும் வேல்விழி போற்றி
ஓம் வெண்மை நிறத்துத் தண்ணருள் போற்றி
ஓம் உண்மை உணர்த்தும் உயர்கன்னி போற்றி
ஓம் வாழ வரமருள் வாய்மையே போற்றி
ஓம் வேளாண்மைத் தெய்வமாய் விளங்குவாய் போற்றி
ஓம் தாழம்பூ ஏந்தும் தக்கோய் போற்றி.
.
4. சிந்து கன்னிகை (நீர்க் கன்னிகை) 
ஓம் கடலின் ஆற்றலே கன்னியே போற்றி
ஒம் உடற்பிணி நீக்கும் உத்தமி போற்றி
ஓம் நீலமணி நிறத்து வாலிழை போற்றி
ஓம் ஓலமிடு வார்க்கு ஓடிவருவாய் போற்றி
ஓம் நெருங்கு வளமீயும் நேரிழையாய் போற்றி
ஒம் கருங்கு வளை கையிலேந்தும் கன்னியே போற்றி.

5.மலைக் கன்னிகை 
ஓம் குன்றின் ஆற்றலாய் நின்றாய் போற்றி 
ஓம் உயர்ந்த நிலையின் உத்தமி போற்றி 
ஓம் பவள நிறத்துப் பாவாய் போற்றி 
ஓம் காவியுடை யணியும் கன்னியே போற்றி 
ஓம் வேண்டும் வரமீயும் வித்தகி போற்றி 
ஓம் செழுங்கழுநீர் ஏந்தும் செல்வி போற்றி,
!
6.வன கன்னிகை 
ஓம் நாட்டுக்கு வளம்தரும் நாயகியே போற்றி 
ஓம் காட்டுக்குத் தெய்வமாம் கன்னியே போற்றி 
ஓம் பச்சை நீல இச்சையே போற்றி 
ஓம் சரம் கொள் வரமீயும் உத்தமி போற்றி 
ஓம் மரங்களை வளர்க்கும் மாகன்னி போற்றி 
ஓம் மல்லிகை ஏந்தும் மலர்க்கொடி போற்றி.

7.சுமதி கன்னிகை 
ஓம் மன்னிய நிலத்துக் கன்னியே போற்றி 
ஓம் நிலமெனத் தாங்கும் நிர்த்தகி போற்றி 
ஒம் மஞ்சள் பெண்மைக் கஞ்சுகி போற்றி 
ஓம் வெண்மை ஆடை வித்தகி போற்றி 
ஓம் தூய்மை காட்டும் தாயே போற்றி 
ஓம் செவ்வந்தி ஏந்தும் செல்வியே போற்றி,

888888 - 
உன்னி எழுவராய் உடனமர்ந்து கொங்கில்
முன்னி அருள்செய்து முழுதுலகு காத்து 
பன்னி மழைபெய்யப் பாருலகு போற்றிடும் 
கன்னியர் அடியிணை கருத்துள் கருதுவாம்.





Saturday, 7 April 2018

திருமூலர் திருமந்திரத்தில் நடராஜர் தரிசன பாடல்கள்

திருமூலர் திருமந்திரத்தில் நடராஜர் தரிசன பாடல்கள்




ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து


https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/554/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-thirukothu-dharisanam
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1352/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-sivananda-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1353/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-sundara-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1354/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-porpathik-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1355/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-potrillaik-kootthu
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/1356/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-9-arputhak-kootthu

ஆரந்தம்

யோகாந்தம்  -யோக அனுபவத்தில் ஒளி கிடைக்கும் .
காலாந்தம்  - பசு காரணங்கள் எல்லாம் பத்தி காரணங்கள் ஆகிவிடும்.
நாதாந்தம் -பிரணவ தேகம்
போகாந்தம் -ஞான தேகம்

பிண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் வேதாந்தம்.
அண்ட அளவில் இறையோடு கலந்து நிற்றல் சித்தாந்தம்.
 
 




  • கலாந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல மேலேற நாத தத்துவத்தின் விளிம்பில் சூக்குட வாக்கில் ஆன்மாவிற்குப் பிரணவ தேகம் அமையும். இது நாதாந்த அனுபவம்.
  • அதற்கும் மேலே போனால் மாயை என்கிற மலம் நீங்கும்.
  • அதற்கு மேல் செய்ய நமக்கென்று இல்லை எல்லாம் இறைவன் செயல் என்று இறைபணியில் ஒடுங்கும் நிலை. அங்கே கன்ம மலம் ஒழியும்.
  • பின்னால் தன்முனைப்பு ஒழிய வேண்டும்.
  • சீவபோதம் சிவபோதத்தில் ஒடுங்க ஆணவமலம் நீங்கிட போதாந்த அனுபவம் வரும்.
  • அதற்கும் மேலே செல்லும் போது அருள்வீழ்ச்சி ஏற்பட்டு ஆன்மா அருளில் திளைத்து ஞானதேகம் பெறும்.
  • ஞானதேகம் பெற்றபின் இஅறையொளி பிண்டத்துள் நடுநாடியுள் நிறைய அதனுடன் ஆன்ம ஒளி கலக்க வருவது வேதாந்த அனுபவம்.
  • இங்கே ஒளி மயத்திரே காணுகிற நூல் போன்ற ஒளியையே பூணுல் என்கிறோம். இந்த ஒளிநூல் பிரமரந்திரம் வழியாக பிண்டத்திலிருந்து மேலேறி அண்டத்தில் உள்ள இறையொளியோடு கலந்து நிற்க வருவது சித்தாந்த அனுபவம்-இதுவே சித்தாந்த முத்தி.

தச காரியம்


எந்த ரூபத்தோடு தொடர்பு கொள்கிறோமோ அதன் ரூபமாகவே ஆகிவிடுதல்.
அதில் திளைத்தபிறகு அது என்ன என்று தெரிந்து விடும்.
தெரிந்தபின் இது இவ்வளவு தானா என்று அதை நீங்கி மேலே போதல்.
இதனை உண்மை நெறி விளக்கம் ரூபம், தரிசனம், சுத்தி என்று கூறுகின்றது.
இதையே தமிழில் உருவம், காட்சி , நீங்கல் என்பர்.

தத்துவ ரூபம்.
தத்துவ தரிசனம்,
தத்துவ சுத்தி;


ஆன்ம ரூபம்.
ஆன்ம தரிசனம்,
ஆன்ம சுத்தி;


சிவ ரூபம்.
சிவ தரிசனம்,
சிவ யோகம்,


சிவ போகம்.

சிவபோகத்தோடு முடிந்துவிடும்.
அதற்குமேல் நிலை கிடையாது. சிவத்தோடு இருந்து ஆனந்தம் அனுபவிக்க வேண்டியது தான் .

Friday, 6 April 2018

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சூரிய வழிபாட்டு பாடல்கள்



திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சூரிய வழிபாட்டு பாடல்கள்



ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன் 
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்





தை பொங்கல், மாத பிறப்பு, வருட பிறப்பு காலங்களில் மேற்காண் திருமந்திர பாடல்களை ஓதுவது சிறப்பு.


https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/484/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-athitha-nilai
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/485/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-pindadittan
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/486/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-munadhithan
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/487/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-gnanadhittan
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/488/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-7-sivadhithan

பரனை நினைந்து



பரனை நினைந்து பணி செய்க:

அறம்  பொருள்  இன்பம் வீடு என்பன  பற்றி  ஔவைப் பிராட்டியார் ஒரு  வெண்பாவில்  விளக்கியுள்ளமை  அறிந்து  இன்புறத் தக்கது.

ஈதல் அறம் தீவினைவிட்டு  ஈட்டல்பொருள்  எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து  ஒருமித்து -  ஆதரவு
பட்டதே இன்பம் பரனை  நினைந்து  இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

-ஔவையார், தனிப்பாடல்  திரட்டு  பா. 64

நல்லோருக்கும்  நற்செயலுக்கும்  கொடுத்தலே  அறமாகும். 
தீவினைவிட்டு  நல்வழியில்  ஈட்டுதலே  பொருளாகும். 
எக்காலத்தும்  காதலர்  இருவர் கருத்து ஒருமித்து  ஆதரவு  பட்டதே இன்பமாகும்.
பரனை  நினைந்து  அவனருளால்  இம்மூன்றையும்  விட்டதே  பேரின்ப வீடாகும்.

வீடு  என்றால்  விடுபடுதல். விடுதலையை மட்டும்  ஔவையார்  சொல்லவில்லை.  இவ்வுலகைவிட்டால் உயிர் பெறுவது  பேரின்ப  வீடாகும் என்கிறார். இதனால்தான்  வீட்டை,  வீடுபேறு எனக் குறித்தனர்  அறவோர். 
வீடு - துன்ப நீக்கம்.  பேறு -  இன்ப ஆக்கம் என்கிறது  சித்தாந்த  சைவம்.

இப்பாடலில்  பரனை  நினைந்து என்பதே முக்கியமானது. 
அவனன்றி  அவனியில் ஒன்றும் அசையாதல்லவா? 
எனவே பரனை நினைந்து  ஈதலே அறம் எனப்படும். 
பரனை  நினைந்தாலே தீவினைவிட்டு நல்வினைப்பட்டுப்  பொருளீட்டும்  செயல்  நிகழும்.
பரனை நினைந்தாலே  இன்பமும்  எக்காலத்தும்  காதலர்  இருவர் கருத்து ஒருமித்து  ஆதரவுடன்  நிகழும். 
பரனை  நினைந்தாலே இம்மூன்றையும் விட்டு  வீடுபேறடையவும்  இயலும்

Wednesday, 24 January 2018

திருமுறை வழியில் சிவபூசை (அபிஷேக பதிக பாடல்கள்)


 
திருச்சிற்றம்பலம் 
திருமுறை வழியில் சிவபூசை (அபிஷேக பதிக பாடல்கள்)
திருவிளக்கு ஏற்றுதல் -
திருக்கடவூர் வீரட்டம்- பண் : திருநேரிசை
பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே. 4.31.4
 
பூசை பெட்டகத்தை திறத்தல்  - திருமறைக்காடு
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே! 5.10.1
 
ஈடுபாட்டை  புலப்படுத்தல் திருப்புள்ளிருக்குவேளூர் திருத்தாண்டகம்
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு;
அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை;
நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை; கேதாரம் மேவினானை;
கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற
                                 நாள் போக்கினேனே!.
 
பெட்டகத்துள் பெருமானை கண்டதும் ஆரா காதலுடன்
எட்டு நாண்மலர் சாற்ற விழைதல்- திருமறைக்காடு
அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே. 5.9.4
 
பெருமானை எழுந்தருள்விக்க – திருமுகத்தலை (கருவூர் தேவர்)- பண் : பஞ்சமம்
என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
    தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
    ஒழிவற நிறைந்தஒண் சுடரே
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
    முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
    கனியுமாய் இனியைஆ யினையே . 9.11.8
 
எட்டு மலர் தூவி போற்றுதல் - திருஅதிகை வீரட்டானம்
எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
    கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி. 6.5.1
 
இலிங்க சுத்தி  -திருவாசகம்  : திருச்சதகம்
வானாகி மண்ணாகி வளியாகிஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்  இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே  8.5.15
 
திருமுழுக்காட்ட தொடங்கல் -பொது தனித்திருத்தாண்டகம்
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள்
          நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; எனை
        ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்
         தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான்
                      திருக்கருணை இருந்த ஆறே!. 6.95.8
 
எண்ணெய்  முழுக்கு - கோயில்       பண் : காந்தார பஞ்சமம்
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம் 
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
 
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்
 
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே! 3.1.1
 
ஆனைந்து (பஞ்சகவ்யம்) - பொது
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே. 5.99
.1
 
திருமஞ்சன பொடி / மஞ்சள்  - திருப்பொற்சுண்ணம்
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! 8.9.9
 
மா பொடி  திருக்கழுக்குன்றம் பண் : நட்டபாடை
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை! 
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
 
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
 
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே! 7.81.4
 
ஐயமுதம்  (பஞ்சாமிர்தம்)  /எலுமிச்சை  திருச்செங்காட்டங்குடி பண் : பழந்தக்கராகம்
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சுரத்தானே. 1.61.5
 
பால் தயிர் -திருவெண்காடு பண் : காந்தார பஞ்சமம்
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!     3.15.3
 
பால் தயிர் -திருவெண்காடு பண் : காந்தார பஞ்சமம்
பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
 சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
 வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
 மாலை யாவது மாண்டவ ரங்கமே. 5.49.10
 
 
தயிர் திருவோணகாந்தன்தளி பண் : இந்தளம்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே. 7.5.1
 
 
தயிர் திருவோணகாந்தன்தளி பண் : இந்தளம்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே. 7.5.1
 
நெய்  முழுக்கு - திருப்புகலூர்
நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு
             உடையாய்! மறை வல்லாய்! நீதியானே!
 
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல்
                    உடையாய்! மகிழ்ந்து நின்றாய்!
 
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு,
                அடியேன் நான் இட்டு, கூறி நின்று
 
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்-பூம் புகலூர்
                           மேவிய புண்ணியனே!.6.99.8
 
தேன்  -திருக்கோழம்பம் பண் : இந்தளம்
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய 
கையானை, கடிபொழில் கோழம்பம் மேவிய
 
செய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய
 
மெய்யானை, மேவுவார்மேல் வினை மேவாவே. 2.13.2
 
கருப்பஞ்சாறு- பொது
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய
என்னனை, இனி யான் மறக்கிற்பனே? 5.93.6
 
அன்னம் -திருச்செம்பொன் பள்ளி
ஊனினுள் ளுயிரை வாட்டி உணர்வினார்க் கெளிய ராகி
 வானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்
 நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
 தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.1
 
இளநீர் - திருஆமாத்தூர்
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த, சடையிடை, 
தேன் அஞ்சு ஆடிய, தெங்கு இளநீரொடும
ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே!  5.44.10
 
இளநீர் -திருவீழிமிழலை
நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன்
                                 என நிற்கின்றான் காண்;
 
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர்
                              காலால் கழிவித்தான் காண்;
 
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல்
                       வெண்மதியம் சேர்த்தினான் காண்;
 
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண்
                                     வீழிமிழலையானே. 6.52.5
 
 
திருமஞ்சன பொடி / மஞ்சள்  - திருப்பொற்சுண்ணம்
வையகம் எல்லாம் உரல் அது ஆக, மா மேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி, மேதகு தென்னன், பெருந்துறையான்,
செய்ய திருவடி பாடிப் பாடி, செம் பொன் உலக்கை வலக் கை பற்றி,
ஐயன், அணி தில்லைவாணனுக்கே, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! 8.9.9
 
சந்தனம் -திருக்களந்தை ஆதித்தேச்சரம் பண் : புறநீர்மை
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
    தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
    திருநுத லவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்
    டெரிவதொத் தெழுநிலை மாடம்
அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9.9.2
 
சந்தனம் -திருவதிகை வீரட்டானம் பண் : காந்தாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. 4.2.1
 
பொன்மணிகள் (ஸ்வரனாபிஷேகம் ) -திருவாரூர் பண் : இந்தளம்
இறைகளோ டிசைந்த இன்பம்
    இன்பத்தோ டிசைந்த வாழ்வு
 பறைகிழித் தனைய போர்வை
    பற்றியான் நோக்கி னேற்குத்
 திறைகொணர்ந் தீண்டித் தேவர்
    செம்பொனும் மணியுந் தூவி
 அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
    அப்பனே அஞ்சி னேனே 7.8.1
 
பன்னீர் -நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே . 10.4.3.2
 
சங்கு நீர்- திருமறைக்காடு பண் : காந்தாரம்
அங்கங்களும் மறைநான்குடன்
    விரித்தான்இடம் அறிந்தோம்
 தெங்கங்களும் நெடும்பெண்ணையும்
    பழம்வீழ்மணற் படப்பைச்
 சங்கங்களும் இலங்கிப்பியும்
    வலம்புரிகளும் இடறி
 வங்கங்களும் உயர்கூம்பொடு
    வணங்கும்மறைக் காடே. 7.71.3
 
வலம்புரி சங்கு நீர்- திருவஞ்சைக்களம்- பண் : இந்தளம்
இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்
    இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால்
 குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்
    அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
 மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
 டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.  7.4.4
 
கங்கை நீர் -திருச்சோற்றுத்துறை
பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
 பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமே
 ஆர்த்துவந் திழிவ தொத்த வலைபுனற் கங்கை யேற்றுத்
 தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே. 4.41.6
 
காவிரி நீர்- பொது
தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
 கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
 இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
 கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.   4.75.1
 
கும்ப நீர் -திருவிடைமருதூர் பண் : தக்கராகம்
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ 1.32.2
 
உடையவரை பீடத்தில் எழுந்தருள்விக்க திருப்புள்ளிருக்குவேளூர் பண் : சீகாமரம்
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
 உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
 தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
 புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.  2.43.1
 
திருவடி , திருக்குடி , திருமுடி நீர் ஏற்றல்திருநனிபள்ளி
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும்; நமர்கா
2.84.5
 
திருவொற்றாடைசாற்றல் கோயில்-       6.2.11
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று
       ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச்
              சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்;
விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே;
              ஓதுவதும் வேதமே; வீணை உண்டே;
கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர்
                     மிடற்று எம் கபாலியார்க்கே.
 
பரிவட்டம் ஆடை சாற்ற- திருப்பருப்பதம்                     
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே. 4.58.4
 
திருநீறு  சாற்ற- திருவாலவாய் பண் : காந்தாரம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; 
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
 
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
 
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே. 2.66.1
 
திருநீறு  சாற்ற- திருவாலவாய் பண் : காந்தாரம்
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் 
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11
 
சந்தனம்  சாற்ற- திருக்கீழ்வேளூர்
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை,
       ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
 
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை,
          சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
 
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ
         வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
 
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை,
           கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே. 6.67.1
 
பூணூல் சாற்ற திருநணா      பண் : காந்தாரம்
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண்  நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும்
 சோலை சூழ்ந்த 
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத்
 தும்பி, 
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு
 நணாவே. 2.72.5
 
மலர் சூட்ட-  திருப்பராய்த்துறை
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
ழுவாதை தீர்க்க!ழு என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே! 5.30.5
 
இண்டை மாலை திருஆரூர் 5.7.3
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.
 
மணியோசை சங்கொலி இசை கருவிகள் முழங்கல்
 திருநள்ளாறும் திருவாலவாயும்  1.7.9
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
 
மணியோசை சங்கொலி இசை கருவிகள் முழங்கல்
திருவிசைப்பா: கருவூர் தேவர் - கோவில் 9.8.4
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
   தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
   நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
   அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.
          
 
திருநீறு திருமழபாடி
நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல்
                ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
 
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
  கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
 
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்
                  ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
 
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய்
                 மழபாடி மன்னும் மணாளன்தானே. 6.39.1
 
திருநீறு திருவாஞ்சியம்  பியந்தைக்காந்தாரம்
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென, இடி குரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓட, செங்கயல் பங்கயத்து ஒதுங்க,
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண்நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே. 7.76.2
 
நாறும் புகை/தூபம்  காட்டுதல்  -திருச்செங்காட்டங்குடி பண் : பழந்தக்கராகம்
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சுரத்தானே. 1.61.4
 
தீபம்  காட்டுதல்  திருநெய்த்தானம்
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி,
தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து,
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே! 4.37.2
 
அமுது காட்டுதல்    திருவையாறு
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க் 
குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன்
 
தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே. 4.92.7
 
அமுது காட்டுதல்   
பாயிரம் - திருமலைச் சருக்கம்  13 அரிவாட்டாய நாயனார் புராணம்
அடியனேன் அறிவி லாமை கண்டும்என் னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி
 
மலர்தூவல் -திருப்புகலி - நாலடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்;
மலையினில் அரிவையை வெருவ, வன் தோல்
அலைவரு மதகரி உரித்தவனே!

இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.    3.3.2
 
தூபம் காட்டும் பொழுது-  திருவதிகை வீரட்டானம் பண் : கொல்லி
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்; தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்! உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! 4.1.6
 
திருவமுது காட்டல்- திருக்கச்சி ஏகம்பம் பண் : தக்கேசி
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் 
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
 
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
 
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!
 7.61.1
 
அடுக்கு விளக்கு காட்ட- திருவாசகம்-அருட்பத்து
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், `அதெந்துவே?' என்று, அருளாயே! 8.29.1
 
ஐந்து முக விளக்கு காட்ட- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே . 10.7.11.1
 
மூன்று முக விளக்கு காட்ட- பொது பண் : காந்தார பஞ்சமம்
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ள
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே! 4.11.8
 
கற்பூரம் காட்ட- தில்லைவாழந்தணர் புராணம்
கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி 12.1.2
 
சோடச உபசாரம் - குட  தீபம்
அறுகு எடுப்பார் அயனும், அரியும்; அன்றி, மற்று இந்திரனோடு, அமரர்,
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், நம்மில் பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்;
செறிவு உடை மும் மதில் எய்த வில்லி, திரு ஏகம்பன், செம் பொன் கோயில் பாடி,
முறுவல் செவ் வாயினீர்! முக் கண் அப்பற்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே! 8.9.5
 
சோடச உபசாரம் - கண்ணாடி
பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே! 4.102.3
 
சோடச உபசாரம் - குடை
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ  ?  கோங்கிண  ரனைய
குடைகெழு  நிருபர்  முடியொடு முடிதேய்ந்
   துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே. 9.16.3
 
சோடச உபசாரம் - கொடி
விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே!
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . 7.41.4
 
சோடச உபசாரம் – சாமரம்
12.திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம். 23/169
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
பெருங் குடை மிடைந்து செல்லப்பிணங்கு பூங்கொடிகள் ஆட
அருங் கடி மணம் வந்து எய்த, அன்று தொட்டு என்றும் அன்பில்
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆமால்.
 
திருமுறை விண்ணப்பம் செய்க -x
 
பேரொளி திருக்கழுக்குன்றம் பண் : நட்டபாடை
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால் 
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
 
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
 
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.! 7.81.3
 
பேரொளி வழிபாடு திருமாந்துறை நட்டராகம்
கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை மலர் உந்தி,
ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர் சேர்த்தி,
தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே. 2.110.5
 
தீபம் - தில்லைவாழந்தணர் புராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி 12.x.1
 
வழிபாடு நிறைவு வலம் வரல்திருஆரூர் - திருத்தாண்டகம்
மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி
     ஆவது இது கண்டாய்; “வானோர்க்கு எல்லாம்
அதிபதியே! ஆரமுதே! ஆதீ!” என்றும்;
          “அம்மானே! ஆரூர் எம் ஐயா!” என்றும்;
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச்
              சூழும் வலம் செய்து தொண்டு பாடி,
“கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா!
          கற்பகமே!” என்று என்றே கதறா நில்லே!. 6.31.8
 
வீழ்ந்து வணங்கல் (அட்டாங்க  வணக்கம்) - பொன்வண்ணத் தந்தாதி
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே 11.6.11
 
வேண்டுதல் திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே! 4.94.8
 
பிழை பொறுக்க கோருதல் - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பிழையா யினவே பெருக்கிநின்
    பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
    மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
    முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய் தில்லை
    நாத பொறுத்தருளே 11.32.34
 
பிழை பொறுக்கும் பேரருளாளர் -திருமாற்பேறு
நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
    நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
    குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
    அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
    செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. 6.80.5
 
மலர் தூவல்திருஆரூர் -காந்தாரம்
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே. 4.4.8
 
வாழ்த்துபெரியபுராணம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் . 12.72.53
 
வாழ்த்து பொது - திருப்பாசுரம் - கௌசிகம்
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே. 3.54.1
 
திருச்சிற்றம்பலம்